Published:Updated:

ஷிவாங்கியின் க்ரஷ்ஷே... நன்றிக்கடல் சிங்கப்பெண்ணே! குக்கு வித் கோமாளி குதூகலங்கள்!

ஷிவாங்கி - குக்கு வித் கோமாளி

இந்த வாரம்... எவிக்ஷன் வாஆஆஆஆஆஅரம்! மூன்றாவது முறையாக ரித்திகாவும் பாலாவும் குக்கு = கோமாளிகளாக தேர்வானது நிஜமா செட்டப்பா என்று எல்லாருக்கும் (நமக்கும்!) சந்தேகம் வந்தது. 'மாரி'யாக வந்த புகழ் டான்ஸ், ஸ்டைல் என்று கலக்க நினைக்க பாபா பாஸ்கர் அவரை ஃபுல் காமெடியாக டீல் செய்தார்.

ஷிவாங்கியின் க்ரஷ்ஷே... நன்றிக்கடல் சிங்கப்பெண்ணே! குக்கு வித் கோமாளி குதூகலங்கள்!

இந்த வாரம்... எவிக்ஷன் வாஆஆஆஆஆஅரம்! மூன்றாவது முறையாக ரித்திகாவும் பாலாவும் குக்கு = கோமாளிகளாக தேர்வானது நிஜமா செட்டப்பா என்று எல்லாருக்கும் (நமக்கும்!) சந்தேகம் வந்தது. 'மாரி'யாக வந்த புகழ் டான்ஸ், ஸ்டைல் என்று கலக்க நினைக்க பாபா பாஸ்கர் அவரை ஃபுல் காமெடியாக டீல் செய்தார்.

Published:Updated:
ஷிவாங்கி - குக்கு வித் கோமாளி

”சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே...

ஆயுடமேயொடு செடயோட

நன்றிக்கடல் தூக்கு பஜ்ஜே...” இதென்னனு முழிக்காதீங்க. சிங்கப்பெண்ணே பாட்டுக்கு சுனிதாவோட சொந்த வரிகள்தான் இது. இதுவும் இன்னபிற கலாட்டாக்களும் சனிக்கிழமை குக் வித் கோமாளியில் நடந்தது... ஒவ்வொண்ணா பார்ப்போம்!

இந்த வாரம்... எவிக்ஷன் வாஆஆஆஆஆஅரம்!

நீலநிறக் கண்ணாடியோடி லோ பட்ஜெட் நீலாம்பரியாக வந்த கனியை பாபா பாஸ்கர் தலைமையில் அஷ்வினும் ரக்‌ஷனும் கலாய்த்து வம்பிழுத்தனர். பாவாடை தாவணியில் ரித்திகாவும் ஸ்பெஷல் ஆர்டர் செய்த சேலையில் பவித்ராவும் ஆகயா!

“இம்யூனிட்டி வீக்னு ஒரு திமிரு தெரியுது போலவே” என்று ரக்‌ஷன் கனியைக் கேட்க அதெல்லாம் இல்லைனு கனி படபடத்து கூலிங் கிளாஸைக் கழட்டினார். இம்யூனிட்டி Band வாங்கியதால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தார் கனி.

‘தில்லானா மோகனாம்பாள்’ சிவாஜி போல (நல்லவேளை அவரு இதையெல்லாம் பார்க்க இப்ப இல்ல!) மணிமேகலையும், ‘நான் ஒரு மனிதவெடிகுண்டு என்கூட இருக்கறவங்களுக்கு எலிமினேஷன் உண்டு’ என்ற பன்ச்சோடு ‘முதல்வன்’ ரகுவரன் கெட்டப்பில் பாலாவும், ‘மாரி’ கெட்டப்பில் புகழும், 'நீதானே என் பொன்வசந்தம்' சமந்தா ஸ்கூல் டிரஸ்ஸில் ஷிவாங்கியும், ‘மதராசப்பட்டினம்’ எமி ஜாக்சன் கெட்டப்பில் சுனிதாவும் உள்ளே காத்திருந்தனர். ‘யாருக்கு எந்தக் கோமாளிகள்’ என ரக்‌ஷன் கேட்க "பெண்கள் வேண்டாம்" என்று பாபா பாஸ்கரும், "மணிமேகலை வேண்டாம்" என்று ஷகிலாவும், "ஷிவாங்கி கிடைச்சா ஓகே" என்று ரித்திகாவும் சொல்ல, "பாலா எனக்கு வந்ததே இல்லை... வந்தா ஓகே'’ என்று அஷ்வின் சொன்னார். பவித்ரா "யாரு வந்தாலும் ஓகே'’ என்று ரிலாக்ஸாக “அதானே நாம சமைக்கவா போறோம்?” என ரக்‌ஷன் கவுன்ட்டர் கொடுத்தார்.

நடுவர் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளே வந்தார். “போன எபிசோட்ல டிவில நான் புகழை அடிச்சதா போட்டு என்னை டேமேஜ் பண்ணிட்டாங்க. அவன் பண்ணினதெல்லாம் காட்டல. எல்லாரும் கமென்ட்ல என்னை திட்றாங்க” என்றவர் கோமாளிகள் அறைக்குப் போய் புகழை “ஏண்டா உன்னை நான் டார்ச்சர் பண்ணினேனாடா?” என்று மிரட்ட “இப்ப மட்டும் என்ன பண்றீங்க சித்தப்பங்...” என்று கேட்டார் புகழ்!

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

கோமாளிகளுடன் செட் ஆக கோலிவுட் ட்ரீ ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் தொங்கவிடப்பட்டுள்ள குடுவைகளை எடுத்து, உள்ளே இருக்கும் படங்களை வைத்து யார் கோமாளிகள் என்று முடிவானது. அதன்படி

பவித்ரா - ஷிவாங்கி ஷகிலா - சுனிதா ரித்திகா - பாலா பாபா பாஸ்கர் - புகழ் அஷ்வின் - மணிமேகலை.

மூன்றாவது முறையாக ரித்திகாவும் பாலாவும் குக்கு = கோமாளிகளாக தேர்வானது நிஜமா செட்டப்பா என்று எல்லாருக்கும் (நமக்கும்!) சந்தேகம் வந்தது. 'மாரி'யாக வந்த புகழ் டான்ஸ், ஸ்டைல் என்று கலக்க நினைக்க பாபா பாஸ்கர் அவரை ஃபுல் காமெடியாக டீல் செய்தார். டான் மாரியை டவுசர் கழட்டி, தூக்கி, இழுத்து, கசக்கிப் பிழிந்தார் பாபா பாஸ்கர். “பாடிய சேதாரம் இல்லாம அனுப்புங்க” என்ற வேண்டுகோளுடன் புகழ், பாபா பாஸ்கருடன் போய் நின்றார்.

“நம்மளை யாரு இம்ப்ரஸ் பண்ண நினைக்கறாங்களோ அவங்ககிட்ட நாம் இம்ப்ரஸ் ஆகமாட்டோம். நாம யாரை இம்ப்ரஸ் பண்றோமோ அவங்க நம்மளோட இம்ப்ரஸ் ஆகமாட்டாங்க. மொத்தத்துல எதுவும் நடக்காது” என்று ரஜினி பட ரேஞ்சுக்கு ஷிவாங்கி ஒரு பன்ச் சொன்னார். “லவ் ஸ்டோரி இருக்கா?" என்று கேட்டதற்கு "க்ரஷ் ஸ்டோரிதான் இருக்கு” என்று பதினொன்றாம் வகுப்பு க்ரஷ் கதையைக் க்யூட்டாகச் சொன்னார் ஷிவாங்கி. சுனிதாவுக்கும் அஷ்வினுக்கும் பாட்டு போடச் சொன்னபோது ஓடி வந்து தடுத்தார் ஷிவாங்கி.

“அஷ்ஷு... நீயும் நானும் பெஸ்ட்...

நமக்குத் தேவையில்ல ரெஸ்ட்...

நான் உனக்கு கொண்டு வந்திருக்கேன் கிஃப்ட்...

நீ என்னைப் பண்ணிக்கோ லிஃப்ட்” என்று கவிதையோடு அவர் வர, “உங்களை அழிக்க வெச்சிருக்கேன் ஒரு லிஸ்ட்” என்று கவுன்ட்டர் கொடுத்தார் ஷிவாங்கி. கரண்டியில் ‘சுனு அச்ஷு’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. “சுனிதாவுக்கு பேமென்ட் போட்டுட்டாங்க போல... அதான் கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்காக” என்று உள்ளிருந்து சொன்ன மணிமேகலை கரண்டியைப் பார்த்ததும் “போட்டிருக்காங்க. ஆனா கம்மியாதான் போட்டிருக்காங்க. அதான் கரண்டி மட்டும் வாங்கிட்டு வந்திருக்கா” என்று சமாதானமானார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

ரகுவரனாக பாலா மரண நடிப்பு நடித்தார். உடை, உயரம், குரல் என்று எல்லா விதங்களிலும் நடிப்பிலும் உடல்மொழியிலும் செட்டானவர் பாலாதான். அதற்கடுத்து மணிமேகலை சிவாஜி நடிப்பை காமெடியாக ரெப்ளிகா செய்தார். பாவம் ‘மாரி’ புகழை, டானாக மாறவே விடவில்லை பாபா பாஸ்கர்.

இன்றைய அட்வான்டேஜ் டாஸ்க் - 1 வித்தியாசமாக இருந்தது. கரண்டி முதல் ஸ்டவ் வரை எல்லாமே மினியேச்சர் சைஸில் இருந்தது. ‘சொப்பு சாமான்’ என்று சொல்லப்படும் குட்டிக்குட்டிப் பொருட்களில் கோமாளிகள் தோசையும், கோமாளிகள் ஆம்லேட்டும் போடவேண்டும். யார் அதிக ஆம்லேட், தோசை போடுவார்களோ அவர்கள் வின்னர் என்று அறிவிக்கப்பட்டது. குட்டி கேண்டில் வைக்கப்பட்ட அடுப்பில் குட்டி தவாவை வைத்து சமைக்க ஆரம்பித்தனர்.

இன்றைக்கு பாலாவுக்கு காமெடியில் டஃப் ஃபைட் கொடுத்தார் ரித்திகா. பாலா பேசிய ஒவ்வொரு டயலாக்குக்கும் ரிப்பீட் கவுன்ட்டர் கொடுத்தார் ரித்திகா. “மதுரை முத்துவ பொம்பள வேஷத்துல பார்த்த மாதிரி இருந்தது” என்றார் பாலா. மணிமேகலை, செஃப் வெங்கடேஷ் பட்டை லந்து செய்தார். புகழ், பாபா பாஸ்கருடன் டிரீமுக்குச்சென்று வின்னிங்கை கனவு கண்டுகொண்டிருந்தார். இன்னொரு புறம் ஷிவாங்கி, மணிமேகலைக்கும் அஷ்வினுக்கும் நடுவில் வந்து அஷ்வினுக்கு ஹெல்ப் செய்து மணிமேகலையை வெறுப்பேற்றினார். புகழ், 'மாரி' கேரக்டரை மறந்து ரித்திகாவிடம் கொஞ்சம் நேரமும், பவித்ராவுடன் கொஞ்ச நேரமும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருந்தார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

“என் பேரு துரையம்மா என்கூட டேட்டிங் வர்றியாம்மா” என்று மணிமேகலை சுனிதாவுக்கு பன்ச் சொல்லிக் கொடுக்க, “யார் வேணா தருவாங்க கிஃப்ட் அதப் பார்த்து நீங்க ஆய்டாதீங்க ஷிஃப்ட்” என்று ஷிவாங்கிக்கு பவித்ரா சொல்லிக் கொடுத்தார்.

எண்ணிக்கையில் பவித்ரா 19, ஷகிலா 19, அஷ்வின் 11, பாபா பாஸ்கர் 18, ரித்திகா 20 என்று நடுவர்களிடம் கொடுக்க, ரித்திகா ஜெயித்தார். அவருடன் ஷகிலா, பவித்ரா ஆகியோரும் அட்வான்டேஜ் டாஸ்க் இரண்டுக்கு முன்னேறினார்கள்.

இரண்டாவது டாஸ்க்குக்கு முன்னர் மாஸாக என்ட்ரி கொடுத்தார் தாமு. டீ ஷர்ட், கேஷுவல் பேன்ட்டோடு கோவா ரிட்டனாக கேர்ள்ஸுடன் டான்ஸாடியபடி வந்தார். நானும் ஆடுவேன் என்று வெங்கடேஷ் பட்டும் பசங்களோடு ஒரு ஆட்டம் போட்டார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

அட்வான்டேஜ் டாஸ்க் ரவுண்ட் 2, ‘சேம் பின்ச் சேலஞ்ச்’. வெள்ளரி, தக்காளி, கேரட்டை அடுக்கி வைத்திருந்தார்கள். 5 நொடிகளுக்கு குக்குகளுக்கு அது திறந்து காண்பிக்கப்படும். அதன்பிறகு குக்குகளின் கண்கள் கட்டப்படும். பார்த்ததை, கோமாளிகளோடு பகிர்ந்து கொண்டு, அவர்கள் காய்வெட்டிக் கொடுக்க குக்குகள் பார்த்தது போலவே அடுக்க வேண்டும். ஆனால் கண்களைக் கட்டிக்கொண்டு! இதுதான் டாஸ்க்.

வெங்காயம், வெள்ளரி, கேரட், தக்காளி, முள்ளங்கியை வட்டவட்டமாக வெட்ட ஆரம்பித்தார்கள் கோமாளிகள். இதற்கு நடுவே புகழ், ரித்திகாவுடன் ‘போவோமா ஊர்கோலம்’ என்று டூயட் பாடிவிட்டு பவித்ராவிடம் அதே பிட்டைப் போட வந்தார். நடுநடுவே நடந்த காமெடிகளுக்கிடையே காயை வெட்டி, அடுக்கியதில் பவித்ரா - ஷிவாங்கி மிகச்சரியாக அடுக்கி வெற்றி பெற்றார்கள். ஷிவாங்கி தொடர்ந்து தன்னோடு குக்காக வருபவரை ஜெயிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஞாயிறன்று நடக்கும் டாஸ்க்கில் இவர்களுக்கு என்ன அட்வான்டேஜ் கிடைக்கப்போகிறது!? பார்ப்போம்!