Election bannerElection banner
Published:Updated:

விஜய் டிவியில் ஷிவானி நடிக்கும் புது சீரியல்... பிக்பாஸ் பாலாஜிதான் ஹீரோவா?!

பிக்பாஸ் பாலாஜி, ஷிவானி
பிக்பாஸ் பாலாஜி, ஷிவானி

கடைசிவரை நிகழ்ச்சியில் இருந்த ஷிவானிக்குப் பெரிய ஒரு வாய்ப்பு சேனலில் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தொடர்ந்து தன்னுடைய சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் வாய்ப்பளிப்பது விஜய் டிவியின் வழக்கம்.

பிக்பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், மஹத், ஆர்த்தி கணேஷ்கர் ஆகியோர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்களாகக் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.

ஷிவானி
ஷிவானி

அந்த வரிசையில் சமீபத்தில் பிக்பாஸ் நான்காவது சீசன் முடிவடைந்துள்ள நிலையில் அதில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்பாக ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டு வெளியேறிய கேபியை ‘முரட்டு சிங்கிள்ஸ்’ நிகழ்ச்சியில் நடுவராக அமர்த்தியிருக்கிறார்கள்.

அடுத்து கடைசிவரை நிகழ்ச்சியில் இருந்த ஷிவானிக்கும் பெரிய ஒரு வாய்ப்பு சேனலில் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஷிவானி ஹீரோயினாக நடிக்க ஒரு புதிய சீரியல் விஜய் டிவியில் விரைவில் தொடங்கயிருக்கிறது.

ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி... பிக்பாஸ் வின்னர்கள் வென்றது எப்படி?!

கடைசியாக விஜய் டிவியில் ஷிவானி நடித்தது ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் பாதியிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறி ஜீ தமிழ் சேனலுக்குப் போனார் ஷிவானி.

சரி, தொடங்க இருக்கிற சீரியலில் ஷிவானிக்கு ஜோடி யார் என்கிறீர்களா? ’கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் நடித்த அஸீம்தான் என உறுதியாகச் சொல்கிறது ஒரு சோர்ஸ்.

பிக்பாஸ் பாலாஜி
பிக்பாஸ் பாலாஜி

வேறு சிலரோ, ‘பிக்பாஸ்’ ரன்னர் பாலாவுக்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். "சில பட வாய்ப்புகள் பாலாவுக்குக் கிடைத்துள்ளன. இருந்தாலும் ‘பாலா-ஷிவானி’ காம்பினேஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் செமயாக ஒர்க் அவுட் ஆனதால் புதிய சீரியலில் பாலா-ஷிவானி சேர்ந்து நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்கிறார்கள்.

காதல்தான் சீரியலின் மையப்புள்ளியாம். ஆமா... ஆமா... அப்படித்தானே இருக்கணும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு