Published:Updated:

''நான் வேண்டாமென்று சொன்னேன், ஜிவி தான் வற்புறுத்தினார்!''- பாடகி சைந்தவி!

வே.கிருஷ்ணவேணி

''ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குப் போக சுத்தமாகப் பிடிக்கல. சில நாள்கள் போய் பார்ப்போம், பிடிக்கலைனா போக வேண்டாம்' என்கிற மன நிலையில்தான் போனேன்''

சைந்தவி
சைந்தவி
''பல வருஷமா இதற்கான யோசனை இருந்தது. 2019ம் ஆண்டுதான் அது கைகூடி வந்திருக்கு''.
சைந்தவி
சைந்தவி
சைந்தவி

'இத்தனை வருடம் பாடகியாக இருந்திருக்கிறேன். ஆனால், கேமரா முன்னாடி நின்னு பாடுறதுனா கொஞ்சம் நடுங்கும். சில சேனல்களிலிருந்து நிகழ்ச்சியின் நடுவராக அழைத்தார்கள். நான் கூச்ச சுபாவம் உள்ள ஆள் என்பதாலும், கேமரா பயம் இருப்பதாலும், தவிர்த்து வந்தேன். கடந்த வருடம் ஜெயா டி.வியில் இந்த பாடல் நிகழ்ச்சிக்கான நடுவராக அழைத்தார்கள். என் கணவர்தான் 'எத்தனை வருஷம் இப்படியே தயங்கிட்டு இருப்ப.. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோ'னு உற்சாகப்படுத்தினார்.

சைந்தவி
சைந்தவி

'சரி' என்று ஒப்புக் கொண்டேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குப் போக சுத்தமாகப் பிடிக்கல. சில நாள்கள் போய் பார்ப்போம், பிடிக்கலைனா போக வேண்டாம்' என்கிற மன நிலையில்தான் போனேன். நிகழ்ச்சியில் நடுவராக உட்கார்ந்த ஒரு சில நாட்களிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதனால் தொடர்ந்தேன். இதோ இரண்டாவது சீசனும் ஒரு சில மாதங்களில் ஆரம்பமாகவிருக்கிறது. அதற்கும் நான் தான் நடுவர்'' என்பவர்,

தற்போது, 'Quintet Kutcheri' என்கிற வெப் சீரிஸையும் ஆரம்பித்திருக்கிறார்.

இதில் அவர் பாடிய , கர்நாட்டிக் மற்றும் வெஸ்டர்ன் பாடல்களும் இடம்பெறும்.''பல வருஷமா இதற்கான யோசனை இருந்தது. 2019ம் ஆண்டுதான் அது கைகூடி வந்திருக்கு. இனி தொடர்ந்து வாராவாரம் குறிப்பிட்ட இடைவெளியில் யு டியூபில் என் பாடல்களை கேட்கலாம், பார்க்கலாம்'' என்றவரிடம்,கணவருடன் சேர்ந்து நடிக்கும் ஐடியா இருக்கிறதா எனக் கேட்டேன்.

''நடிப்பு, பாடல் என அவர் பிஸியாக இருப்பதை என் கண் முன்னே பார்க்கிறேன். இரவு, பகலாக தூக்கமில்லாமல் அவர் உழைத்துக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவரைப் போல என்னால் ஓட முடியுமானு தெரியல. கூடவே, எனக்கு கேமரா என்றாலே பயம். இதில் எங்கே நடிப்பது. நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பது சாத்தியமில்லாததுதான்''. என்பவர். 'வெங்கட் பிரபு இயக்கிய 'பார்ட்டி' படத்தில் நானும், ஜி.வி பிரகாஷூம் சேர்ந்து பாடியிருக்கிறோம். மீண்டும் அப்படியொரு காம்போ அமையும்னு நினைக்கிறேன்'' புன்னகைக்கிறார் சைந்தவி.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.