பிரீமியம் ஸ்டோரி
“யு.கே.ஜி படிக்கும்போது ஸ்கூல்ல ஃபேன்சி டிரஸ் போட்டியில நாடோடி பழங்குடியின பெண் வேஷம் போட்டு மேடையில ஏறினதும், கூட்டத்தைப் பார்த்து உற்சாகமாகி ‘ஊசி மணி, பாசி மணி’ விக்க ஆரம்பிச்சுட்டேனாம். அதுல இருந்து இப்போவரைக்கும் கூட்டத்தைப் பார்த்ததும் அதே உற்சாகம்” என்கிறார் ஸ்டாண்ட் அப் காமெடியன் ‘சவுண்ட்’ சந்தியா.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். பி.காம், பி.எல், எம்.எல் என படித்துத் தள்ளியிருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளர், கபடி வீராங்கனை, ஸ்டாண்ட் அப் காமெடியன், தொகுப்பாளர், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகை என ஏகப்பட்ட முகங்கள் இவருக்கு.

“6-ம் வகுப்பு படிச்சபோது ‘பிளாஸ்டிக்கினால் வரும் தீமைகள்’ன்ற தலைப்புல பேச்சுப்போட்டி. முடிக்கும் போது, ‘போட்டியை நடத்தும் ஆசிரியர்களே அதிகமான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள்’னு ஆசிரியர் எழுதிக்கொடுக்காத ரெண்டு பிட்டை எக்ஸ்ட்ராவா சேர்த்துப் பேசிட்டேன்.

சந்தியா
சந்தியா

பரிசு நமக்குத்தான்னு ஜாலியா மேடையில இருந்து இறங்குனா, ‘அதிகப்பிரசங்கி... ஸ்கோர் போடுற டீச்சரையே கலாய்ச்சிட்டு வந்திருக்க. உனக்குப் பரிசும் கிடையாது. சாப்பாடும் கிடையாது’ன்னு தமிழ் வாத்தியார் காதைத் திருகினாரு. சாப்பாடு கிடை யாதுன்னு சொன்னதும் தாங்க முடியல. ஏன்னா வெளியூருக்குப் போட்டிக்குப் போறதே பரோட்டா வுக்குத்தான். திருவண்ணாமலை மாதிரி டவுனுக்குப் போனாதான் பரோட்டா, பிரியாணி, மீல்ஸ்னு புதுப்புதுப் பேரெல்லாம் காதுல விழும். ஒரு தட்டுக்குள்ள பல அயிட்டங்களை வெச்சு சாப்பிடுறதுக் குப் பேரு மீல்ஸ்னே அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரியும்”

- நாஸ்டாலஜியா பகிர்ந்தபடி தொடர்கிறார்.

“படிச்சு முடிச்சதும் கிராமங்கள்ல நடக்கும் பட்டிமன்றங்கள்ல பேச ஆரம்பிச்சேன். ‘இறைவன் மனிதனாக வாழ்ந்தது ராமாயணத்திலா? மகா பாரதத்திலா?’ - இதுதான் முதல் பட்டிமன்றத் தலைப்பு. எனக்கு ராமாயணமும் தெரியாது, மகாபாரதமும் தெரியாது.

ஞாயிற்றுக்கிழமை காலைல சன் டிவியில ராமாயணம் தொடர்ல கற்பை நிரூபிக்க சீதையை நெருப்பில் இறங்கச் சொன்ன சீனை அப்படியே பேசிக்காட்டினேன். கைத் தட்டல் தெறிச்சிருச்சு” என்பவர் ஸ்டாண்ட் அப் காமெடியனானதே காமெடியாம்.

“2016-ல சன் டிவி காமெடி ஜங்ஷன்ல வாய்ப்பு வந்தது. நான் சீரியஸான பேச்சாளர். ஸ்டேஜ் ஏறும் முன் ஜோக்ஸை எல்லாம் அசிஸ்டன்ட் டைரக்டர்கிட்ட பேசிக் காட்டணும். நான் சொன்ன ஒரு ஜோக்குக்குக் கூட அவரு சிரிக்கல. ‘ஓ! இது ஜோக்கா...அடுத்து’ன்னு சீரியஸா கேட்டாரு. பதற்றமா யிட்டேன். கொஞ்ச நேரத்துல அவரே வந்து `நீங்க ஆயுத பூஜை ஸ்பெஷல் எபிசோட்ல பண்றீங்க’ன்னு சொன்னபோது சந்தோஷம் தாங்கல. அப்புறம் ஆதித்யா சேனல்ல ஆங்க்கர் வாய்ப்பும் கிடைச்சுது.

டிவியில லைவ் ஷோ பண்ணும்போது போன்ல பேசுறவங்க அக்கா, அக்கான்னு பேசுவாங்க. ஒருவேளை நமக்கு வயசாயிடுச் சோன்னு தோணுச்சு. அதனால டிராக்கை மாத்துவோம்னு சீரியல் வாய்ப்பு தேடினேன்.

‘கண்மணி’ சீரியல்ல முதல் வாய்ப்பு கிடைச்சுது. அப்புறம் ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல்ல வில்லி, இப்போ விஜய் டிவி ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல்ல காமெடியான வில்லியா நடிச்சிட்டு இருக்கேன்.

ஒருநாள் ஷூட் முடிச்சு காரை எடுக்கப் போயிட்டு இருந்தேன். ஒரு அம்மா வேகமா வந்தாங்க. என்கூட போட்டோ எடுக்கதான் வராங்கன்னு முடி, லிப்ஸ்டிக் எல்லாத்தையும் சரிபண்ணிட்டே போனேன். ‘உன்னைப் பாத்தா கல்லைத் தூக்கி தலைல போடணும்போல இருக்கு. வேலையும் தமிழையும் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கவிடுறியா?’ன்னு சீரியஸா திட்டுனாங்க. அப்போதான் சீரியல்களோடு மக்கள் எப்படி ஒன்றிப் போறாங்கன்னு புரிஞ்சுது” என்றவர் தன் பலமே குடும்பம்தான் என்கிறார்.

“வெளியில போய் பேசுறது, நைட் லேட்டா வர்றதுக் கெல்லாம் கிராமத்துல எப்படிப் பேசுவாங்கன்னு தெரியும். அம்மாதான் எனக்கு ஃபுல் சப்போர்ட். அஞ்சாவது தான் படிச்சிருக்காங்கன்னா லும் ‘இந்த பாயின்ட் வேண்டாம், இந்த இடத்துல ஷார்ப்பா பேசு’ன்னு திருத்து வாங்க. அப்பா என்னோட பட்டிமன்றம், சீரியல்னு எதையும் பார்க்க மாட்டாரு. நான் எது பண்ணினாலும் பெஸ்ட்டா பண்ணுவேங்கிற நம்பிக்கை அவருக்கு.

சீரியல், ஆங்க்கரிங்னு போனாலும் என்னிக்குமே சாப்பாடு போடுறது மேடை தான். அதனால நேரம் கிடைக்கும்போதெல்லாம் மைக் பிடிச்சுப் பேசிட்டு வந்திடுவேன்”

- `சவுண்டா’கப் பேசி விடை கொடுத்தார் சந்தியா.“

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு