Published:Updated:

''பிக்பாஸ் கமல்ஹாசன் இந்த முறை கதர் உடைகளோட யூரோப்பியன் லுக்ல அசத்துவார்'' - டிசைனர் அம்ரிதா ராம்

கமல்ஹாசன் - அம்ரிதா ராம்
கமல்ஹாசன் - அம்ரிதா ராம்

''நான் நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன். இந்த லாக்டெளன், படங்கள் பார்க்குறதுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு. கமல் சாரும் எனக்கு சில படங்களை ஃரெபர் பண்ணார். எதுக்காகனா..''

பிக்பாஸ் தமிழ் 5-வது சீசனுக்காக புரொமோ ஷூட் தயாராகிவிட்டது. அந்த புரொமோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது டிரெண்ட் ஆகி வருகின்றது. அவர் இந்த சீசனில் என்ன மாதிரியான உடைகள் அணியப் போகிறார் எனப் பலரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இதுவரை எல்லா சீசன்களுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக இருந்த அம்ரிதா ராம்தான் இந்த சீசனுக்கும் கமல்ஹாசனின் காஸ்ட்யூம் டிசைனர். அவரிடம் பேசினேன்.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

''புதுசா எப்படி சாரை ஸ்கிரீன்ல காட்டலாம்னு நிறையவே யோசிச்சேன். இந்த முறை நம்மளுடைய சொந்த தயாரிப்பான கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கோம். அதே மாதிரி எல்லாமே ஹேண்ட்மேட் ஆர்கானிக் ஆடைகளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கோம்.

எல்லா முயற்சிகளுக்கும் கமல் சார் பொறுமையா ஒத்துழைச்சார். அவர் என்கிட்ட முன்னாடியே ஒரு விஷயத்தை சொல்லிட்டார். அது என்னன்னா, 'நான் இதுவரை பல படங்கள்ல நடிச்சிட்டேன். அதனால அந்தப் படங்களோட கதாபாத்திரமா நான் பிரதிபலிக்க விரும்பலை. அதுமட்டும் வேண்டாம். எனக்கு ஒரிஜினல் கமல்ஹாசனையே திரையில பார்க்கணும்'னு சொன்னார். அதனால அவருக்கு என்ன செட்டாகும்னு யோசிச்சு, யோசிச்சுதான் ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது விதத்தில் ஆடைகள் ரெடி பண்றோம்.

அம்ரிதா ராம்
அம்ரிதா ராம்

பெரும்பாலும் ஃபேப்ரிக் ஆடைகளை அதிக அளவில் எபிசோட்களில் பயன்படுத்த முடியாது. டிவியில் பார்க்கிறத்துக்கு ஃபேப்ரிக் ஆடைகள் வேறு மாதிரியான லுக் கொடுக்கும். அதனால இந்த மாதிரியான ஆடைகளை புரொமோ ஷூட்களில் பயன்படுத்தியிருக்கோம்.

எல்லா ஆடைகளுமே கஸ்டமைஸ் பண்ணினதுதான். டி-ஷர்ட் மட்டும் ரெடிமேடா வாங்கினோம். மற்றபடி எல்லாமே நாங்களே டிசைன் பண்ணினதுதான். கமல் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் முயற்சி பண்ணின எல்லா ஆடைகளுமே அவருக்கும் பிடிச்சிருந்தது. பிரளென், ஆலிவ், கிரேன்னு எல்லாமே இந்த மாதிரியான கலர் ஆடைகள்தான். ரொம்ப அழகான கூல் லுக்கில் ஆடைகள் தயார் செஞ்சிருக்கோம்.

ஸ்கிரீன்ல பார்க்க லைட்டாவும், அதே நேரத்தில் கூல் லுக்காகவும் தெரியுற மாதிரியான ஆடைகளைத்தான் ரெடி பண்ணியிருக்கோம். கதர்னு சொன்னதும் முழுக்க, முழுக்க கதர் மட்டும் தான்னு நினைக்க வேண்டாம். அதை ஒரு பேஸா எடுத்துக்கிட்டுதான் டிசைன் பண்ணியிருக்கோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன். இந்த லாக்டெளன், படங்கள் பார்க்குறதுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு. கமல் சாரும் எனக்கு சில படங்களை ஃரெபர் பண்ணார். அந்தப் படங்களுடைய காஸ்ட்யூம்களை பார்த்து அதை அப்படியே காப்பி அடிக்கிறதில்லை. என்ன மாதிரி அவங்களோட ஆடைத் தேர்வு இருக்குன்னு ஒரு ரெஃபரன்ஸுக்காக மட்டும்தான்.

கமலுடன் அம்ரிதா
கமலுடன் அம்ரிதா

ஷூக்கள் தேர்ந்தெடுக்கும்போது நான் பிராண்ட் தேர்வில் அதிக கவனம் செலுத்தலை. ஏன்னா, சார் பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க நின்னுட்டே தொகுத்து வழங்குவார். அப்படி அவர் ரொம்ப நேரம் நிற்கிறதுக்கு அவருக்கு ஷூ ரொம்ப கம்ஃபர்ட்டபுளா இருக்கணும். 51% கம்பர்ட்டபுள்... 49% ஸ்டைல் தான் என்னுடைய சாய்ஸ். அப்படி சாருக்கு கம்ஃபர்ட்டபுளாக இருக்கிற ஷூ தான் முழுக்க பயன்படுத்துறோம்.

கதர் ஆடைகள்ல ஒரு ஐரோப்பியன் லுக்ல கமல் சாரை இந்த சீசன் நீங்க முழுக்க பார்க்கலாம்'' என உற்சாகமாகப் பேசி முடித்தார் அம்ரிதா!

https://www.vikatan.com/foundersday-web#
அடுத்த கட்டுரைக்கு