Published:Updated:

"அடுத்தடுத்து ஹீரோ, ஹீரோயின் விலகினா தயாரிப்பாளர் தலையிலதான் துண்டு!"- `வானத்தைப் போல' பஞ்சாயத்துகள்

வானத்தைப் போல

ஒரு சீரியலில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து விலகியிருப்பது சின்னத்திரை உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

"அடுத்தடுத்து ஹீரோ, ஹீரோயின் விலகினா தயாரிப்பாளர் தலையிலதான் துண்டு!"- `வானத்தைப் போல' பஞ்சாயத்துகள்

ஒரு சீரியலில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து விலகியிருப்பது சின்னத்திரை உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Published:Updated:
வானத்தைப் போல

அண்ணன் - தங்கை பாசத்தினால் ஹிட் அடித்த சீரியல்களுள் ஒன்று, சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' நெடுந்தொடர். இந்தத் தொடரில் கன்னட சீரியல் உலகில் பிரபலமான ஸ்வேதா கெல்ஜ் நடித்து வந்தார். திடீரென அவர் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக மன்யா ஆனந்த் என்பவர் 'துளசி' என்கிற அந்தத் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வானத்தைப் போல - மன்யா, ஸ்வேதா கெல்ஜ்
வானத்தைப் போல - மன்யா, ஸ்வேதா கெல்ஜ்

தற்போது இந்தத் தொடரில் அண்ணன் 'சின்ராசு'வாக நடித்து வந்த நடிகர் தமனும் விலகியிருக்கிறார். தமனுக்குப் பதில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்த நடிகர் ஸ்ரீ, சின்ராசு கேரக்டரில் கமிட் ஆகியுள்ளார்.

ஒரு சீரியலில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து விலகியிருப்பது சின்னத்திரை உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக, தொடரில் இருந்து விலகிய ஸ்வேதா கெல்ஜிடம் பேசியபோது, "புரொடக்ஷன் தரப்பில் பிரச்னை. தேதி, நேரம் போன்ற பிரச்னைகளால் சீரியலில் இருந்து விலகிட்டேன். மேலும், அது குறித்து பேச விரும்பவில்லை" என்றார்.

வானத்தைப் போல - தமன், ஶ்ரீ
வானத்தைப் போல - தமன், ஶ்ரீ

புரொடக்‌ஷன் தரப்போ, ஸ்வேதா விலகல் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், தமன் விலகியது குறித்து அதிருப்தியில் இருக்கிறதாம்.

"அவர் ஏன் சீரியலில் இருந்து போனாருன்னு எங்களுக்கே காரணம் தெரியலை. அவராவேதான் வெளியேறி இருக்கார். சினிமாவுல அறிமுகமாகிட்டுத்தான் சீரியல் பக்கமே வந்தார். அதனால மறுபடியும் சினிமா வாய்ப்பு வந்ததுனு சொல்லிட்டுப் போறதை எங்களால் நம்ப முடியலை.

வானத்தைப் போல - ஸ்வேதா கெல்ஜ், தமன்
வானத்தைப் போல - ஸ்வேதா கெல்ஜ், தமன்

சீரியல்ல இருந்து வெளியேறுவதற்கான காரணம் என்னனு கேட்டுட்டோம். அவர்கிட்ட இருந்து சரியான பதில் இல்லை. 'நீ முன்னால போ, நான் பின்னலே வர்றேன்'னு ஹீரோயினும் ஹீரோவும் அடுத்தடுத்துக் கிளம்பிட்டா சீரியல் தயாரிப்பாளர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. தலையில துண்டு போட வேண்டியதுதான்.

சினிமாவுலதான் இந்த மாதிரி கமிட் ஆகிட்டு பிறகு படத்திலிருந்து விலகறது நடக்கும். இப்ப சீரியலுக்கும் இந்த நிலைமை வந்திருக்கு. நல்லா போயிட்டிருக்கிற சீரியல்ல திடீர்னு ஒருத்தர் விலகி, ஒருவேளை அவர் போன பிறகு ஆடியன்ஸ் அந்த சீரியலைப் புறக்கணிச்சா சீரியலை நம்பி இருக்கிற சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்படலாம். அதனால இனிவரும் நாள்கள்லயாச்சும் சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் இப்படிப் பண்ண நினைக்கிறதைத் தவிர்க்கணும்" என்கிறார்கள் அவர்கள்.