Published:Updated:

`யக்கோவ் ப்ரியங்கா... என்ன தனியா வந்திருக்கீங்க!' - `சூப்பர் சிங்கர்' திவாகரின் கல்யாண ஹைலைட்ஸ்

`சூப்பர் சிங்கர்' திவாகர் திருமணம்

`சூப்பர் சிங்கர்' டைட்டில் வென்ற சமயத்தில், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருக்க, அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பை, ஈழத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று நிராகரித்தவர். சரி, இப்போது என்ன என்கிறீர்களா?

`யக்கோவ் ப்ரியங்கா... என்ன தனியா வந்திருக்கீங்க!' - `சூப்பர் சிங்கர்' திவாகரின் கல்யாண ஹைலைட்ஸ்

`சூப்பர் சிங்கர்' டைட்டில் வென்ற சமயத்தில், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருக்க, அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பை, ஈழத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று நிராகரித்தவர். சரி, இப்போது என்ன என்கிறீர்களா?

Published:Updated:
`சூப்பர் சிங்கர்' திவாகர் திருமணம்

சூப்பர் சிங்கர் 4-வது சீசனின் டைட்டில் வின்னரான திவாகரை நினைவிருக்கிறதா? சென்னை புறநகரில் வீடு வீடாகத் தண்ணீர் கேன் போட்டுக்கொண்டிருந்தவர். சூப்பர் சிங்கர் எனும் ஒரேயொரு ரியாலிட்டி ஷோ, அவரது வாழ்க்கையையே மாற்றியது. அந்த சீசனில் திவாகரின் நெற்றியில், எஸ். ஜானகி முத்தமிட்டு வாழ்த்தியதற்குப் பின் அவரது வாழ்வில் ஏறுமுகம்தான். தொடர்ந்து சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைத்ததுடன், வெளிநாடுகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். டைட்டில் வென்ற சமயத்தில், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருக்க, அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பை, ஈழத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று நிராகரித்தவர். சரி, இப்போது என்ன என்கிறீர்களா?

`யக்கோவ் ப்ரியங்கா... என்ன தனியா வந்திருக்கீங்க!' - `சூப்பர் சிங்கர்' திவாகரின் கல்யாண ஹைலைட்ஸ்

திவாகருக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் பெயர் அபி. லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ். சர்ச்சில் எளிமையான முறையில் நடந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்ள, வரவேற்பு பிரமாண்டமானதாக இருந்தது. வரவேற்பின் ஹைலைட்ஸ் இங்கே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* பாடகருடைய திருமணம் அல்லவா? இசைத் துறையைச் சேர்ந்த தேவா, மனோ, ஶ்ரீகாந்த் தேவா, இமான், தினா, உன்னி கிருஷ்ணன், மாலதி, அந்தோணி தாஸ், `கானா' பாலா, பூவையார் என திரும்பிய பக்கமெல்லாம் இசையும் இசை சார்ந்த ஆள்களும்தான். `கானா' பாட்டுப் பாடி வாழ்த்திய பாலாவைத் தொடர்ந்து, `நூறு வருஷம்... இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' பாட்டுப் பாடி வாழ்த்தினார் மனோ.

* இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளே வந்தபோது அரசியல்வாதிக்குக் கோஷமிடும் தொண்டர்கள்போல கோஷங்களை எழுப்பி சிலர் வரவேற்றனர்.

`யக்கோவ் ப்ரியங்கா... என்ன தனியா வந்திருக்கீங்க!' - `சூப்பர் சிங்கர்' திவாகரின் கல்யாண ஹைலைட்ஸ்

* பாடகர் அந்தோணி தாஸ் மணமக்களுக்குக் கொடுத்த பரிசுதான் மண்டபம் முழுக்கப் பேசுபொருளாக இருந்தது. அழகாகப் பேக் செய்துகொண்டு வந்திருந்த பார்சலை, ஸ்டேஜிலேயே பிரிக்கச் சொல்லிக் கேட்டார்கள். பிரித்தால், உள்ளே ஐந்து கிலோ பெரிய வெங்காயம். குபீரென அந்த இடமே சிரிப்பால் நிரம்பியது. `ஒரு வாரத்துக்கு இதை வெச்சுக்கலாம்' என மணப்பெண்ணைப் பார்த்துச் சிலர் கிண்டலாகச் சொன்னார்கள். பெண்ணின் முகத்தில் அத்தனை வெட்கம். `யார் ஐடியா இது' என அவரிடம் கேட்டபோது, ``யாரோட ஐடியாவும் இல்ல; இது ஊரோட ஐடியா. இன்னைக்கு ஊரே வெங்காய விலையைப் பத்தித்தானே பேசிட்டிருக்கு? அதான் புதுசா குடும்பம் நடத்தப் போறவங்களுக்கு உதவும்னு இப்படிப் பண்ணினேன்'' எனச் சிரித்தார், அந்தோணி தாஸ்.

* மேடையில் சிரிப்புச் சத்தம் கேட்க வைத்த இன்னொரு கிஃப்ட் கொசு பேட். மாப்பிள்ளைக்கு ஒண்ணு, பொண்ணுக்கு ஒண்ணு என ஆளுக்கு ஒரு பேட்டைப் பரிசளித்தனர்.

* சின்னத்திரை நடிகரான ஷ்யாம், தன் மகளுடன் திருமணத்துக்கு வந்திருந்தார். ஷ்யாமின் மகள், `கல்யாணம் முதல் காதல் வரை' தொடரில் ப்ரியா பவானி ஷங்கரின் மகளாக நடித்திருப்பாரே, அதே குழந்தைதான். `ப்ரியா பவானி ஷங்கர் பொண்ணுடா..!' என ஒரு இளைஞர் கூட்டம் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தது.

பூவையார்
பூவையார்

* சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பிரியங்கா மண்டபத்துக்குள் வந்தபோது, `யக்கோவ், என்ன தனியா வந்திருக்கீங்க, வீட்டுக்காரர் வரலையா' என அவரிடம் லந்து செய்தார்கள் சில குசும்பு பிடித்த இளசுகள். `ஹ்ம்ம்ம்.... பின்னாடி வந்திட்டிருக்கார்' என ஒரு முறை முறைத்துவிட்டுப் போனார்.

* டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சீரியல் நடிகர் சாய்சக்தி, நடிகை சௌந்தர்யா, `சூப்பர் சிங்கர்' இயக்குநர் ரௌஃபா, ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.