Published:Updated:

``பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!" - `சூப்பர் சிங்கர்' ப்ரித்திகா

கு.ஆனந்தராஜ்

கடைசியா `பரியேறும் பெருமாள்' படத்துல `வா ரயில் விட போலாமா' பாடலைப் பாடினேன்.

ப்ரித்திகா
ப்ரித்திகா

`சூப்பர் சிங்கர்' ப்ரித்திகா தற்போது என்ன செய்கிறார்? அவரின் படிப்பு மற்றும் இசை அனுபவங்கள் பற்றித் தெரிந்துகொள்ள ப்ரித்திகாவிடம் பேசினோம்.

``விஜய் டிவி `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில, கேள்வி ஞானத்துலதான் பாடினேன். அந்நிகழ்ச்சியின் ஒரு சுற்றுக்கு வந்த பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் சார், என் பாடலைக் கேட்டு ரொம்பவே பாராட்டினார். பிறகு நான் படிச்சிகிட்டிருந்த திருவாரூர் மாவட்டம் தியானபுரம் அரசுப் பள்ளிக்கு வந்து என்னைப் பார்த்தார். பிறகு அந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கும் வந்தவர், நான் வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர். முறைப்படி இசைக் கத்துக்க குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினேன். அப்போ தன் இசைப் பள்ளியில நான் படிக்க உதவினார் மாணிக்க விநாயகம் தாத்தா.

குடும்பத்தினருடன் ப்ரித்திகா
குடும்பத்தினருடன் ப்ரித்திகா

வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் இசை வகுப்புக்குப் போயிட்டிருக்கேன். முன்பு பாடினதுக்கும், இப்போ முறைப்படி பாடுறதுக்குமான வித்தியாசத்தை நன்கு உணர்கிறேன். இன்னும் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. கடைசியா `பரியேறும் பெருமாள்' படத்துல `வா ரயில் விட போலாமா' பாடலைப் பாடினேன். கச்சேரிகளில் கலந்துகொள்ள தென்மாவட்டங்களுக்குப் போகும்போதெல்லாம், எங்க ஊருக்குப் போவேன். அப்போ நான் படிச்ச பழைய ஸ்கூலுக்குப் போய் நண்பர்கள், ஆசிரியர்களைப் பார்த்துப் பேசிட்டுதான் வருவேன். ஆனாலும், என் பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன். இப்போ பத்தாவது போகப்போறேன். இசைப் பயிற்சி, படிப்பு இரண்டும் நல்லா போகுது. சினிமாவில் நிறைய பாடல்களைப் பாடணும்னு ஆசைப்படறேன்" என்கிறார் ப்ரித்திகா.