Published:Updated:

சர்வைவர் - 33 | பிரியாணி, பூஜை, புது டிரஸ் இருக்கட்டும் - இனி போட்டின்னு என்னென்ன வைக்கப் போறாங்களோ?

சர்வைவர் - 33

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 33-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 33 | பிரியாணி, பூஜை, புது டிரஸ் இருக்கட்டும் - இனி போட்டின்னு என்னென்ன வைக்கப் போறாங்களோ?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 33-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 33
பண்டிகை நாள்களின் கொண்டாட்டமும் ரியாலிட்டி ஷோக்களும் பிரிக்க முடியாத விஷயம்தான். ஆனால் அது கடுமையான சர்வைவர் போட்டியிலும் எதிரொலித்தது சற்று ஆச்சரியம். விஜயதசமி நெருங்குவதால் போட்டியாளர்களுக்கு டாஸ்க் எதுவும் தராமல் அவர்களைத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள். ஆம். அவர்கள் ஆனந்தமாகக் குளிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைத்தது. புதிய ஆடைகளும் கிடைத்தன.

இரு அணிகளும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தாலும் ஆட்டைக் குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வைப்பது எதற்காக? அதேதான். பிரியாணிதான். வரும் நாள்களில் போட்டிகள் இன்னமும் கடுமையாக இருக்கும்.

சர்வைவர் 33-வது நாளில் என்ன நடந்தது?

ரிவார்ட் சேலன்ஞ்சில் வெற்றி பெற்ற காடர்கள் அணியிடம் “தீவிற்குப் போங்க... பிரியாணியோ, இல்லன்னா சாம்பார் சாதமோ கிடைக்கும்” என்று ஆர்வத்தைக் கிளப்பிவிட்டு அனுப்பிவைத்தார். தீவுக்கு வந்தவர்களுக்கு பெரும் ஆச்சர்யம். ஆம்... அங்கு பிரியாணி, பரோட்டா, சோறு, சாம்பார், இளநீர், ஜூஸ், பிஸ்கெட் என்று ஏராளமான உணவுப்பொருள்கள் இருந்தன.

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

“ஹைய்யா. சோறு... சோறு... சாமி... சோறு போடுது” என்று கோவை சரளா கணக்காக மக்கள் உற்சாகம் அடைந்தார்கள். விக்ராந்த்தும் உமாபதியும் வாழை இலை எடுத்து வருவதற்காகச் செல்ல, அதுவரை பசி பொறுக்க முடியாத அம்ஜத்தும் லட்சுமிபிரியாவும் உணவின் மீது பாய்ந்தார்கள். ஆனால் லேடி காஷூம் வனேசாவும் சாப்பாட்டைத் தொடவில்லை. அணிப்பாசமாம். தங்கள் டீம் மெம்பர்கள் வந்த பிறகு சேர்ந்துதான் சாப்பிடுவார்களாம். இந்த அசட்டுத்தனமான ‘சூர்யவம்சம்’ சென்ட்டிமென்ட் எல்லாம் தேவையேயில்லை. மனுஷன் பசியில் காய்ந்து கிடக்கும்போது ‘இலையாவது... உறவாவது’ என்று எடுத்துச் சாப்பிட வேண்டும். ஆதிமனிதன் வாழ்ந்த விதம் இதுவே. “எங்களுக்காக அவங்க வெயிட் பண்ணது சந்தோஷமா இருந்தது” என்பது போல் உமாபதி சொன்னார். (என்ன இருந்தாலும் அம்ஜத்தும் LP-ம் எதிர் அணில இருந்து வந்தவங்கதானே?!).

“வனேசா நமக்கு ரொம்ப லக்கி... அவங்களாலதான் நமக்கு பர்த்டே கேக் கிடைச்சது. இன்னிக்கு பிரியாணி கிடைச்சது” என்று பாராட்டிய உமாபதி “ஒரு எலிமினேஷனும் கிடைச்சது” என்று அடுத்த நொடியிலேயே காலை வாரினார். முட்டை பரோட்டாவை ஆசை ஆசையாக எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அம்ஜத். சிறிது நேரத்தில் அவரை ஆளைக் காணோம். பரோட்டா தன் வேலையைக் காட்டிவிட்டதுபோல!

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

இவர்கள் சாப்பிட்டது போக, மீதமிருக்கும் உணவுகளைக் கூடையில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை போல. எனவே கையில் எத்தனை முடியுமா, அத்தனையையும் அவர்கள் வாரிச் சென்றது... பார்க்க பரிதாபமாக இருந்தது.

காடர்கள் இப்படி ஒருபுறம் காடை பிரியாணியாக மொக்கிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் வேடர்கள் அணி பசி ஏக்கத்தில் மாய்ந்து கொண்டிருந்தது. “இந்நேரம் அவிய்ங்க பிரியாணி சாப்பிட்டுட்டு இருப்பாங்கள்லே..” என்று நிராசையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் ரவி. “20 நிமிஷம் முன்னாடி வந்தும் நாம தோத்துட்டமடா கோபாலு” என்பது ரவியின் நியாயமான புலம்பல்.

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

“நான் வழுக்குமரத்துல ஏர்றதுக்கு டைம் எடுத்துக்கிட்டேன். என் மேலயும் தப்பு இருக்கு” என்று நேர்மையாக சுயவாக்குமூலம் தந்து கொண்டிருந்தார் நாராயணன். புதிர்ப் பலகையில் இருக்கும் சிறிய தவற்றைக் கண்டுபிடித்துவிட்டாலும் பலகைகள் மிக கனமாக இருந்ததால் எடுத்து மாற்றுவதற்குள் நேரம் கடந்துவிட்டது. இது மட்டுமில்லாமல் எதிர் அணி வேறு தங்கள் பலகையை எடுக்கும் போது நந்தாவின் கையை தெரியாமல் நசுக்கி விட்டுவிட்டார்கள்.

“இந்த லட்சுமிப் பொண்ணு பார்த்தியாப்பா. ஜெயிச்சவுடனே, என்னா டான்ஸ் ஆடுச்சு... இங்க இருக்கும் போது கூட அதுக்கு அத்தனை சந்தோஷம் இல்ல” என்று வேடர்கள் பேசி மாய்ந்தார்கள்.

பிரியாணி சாப்பிட்ட களைப்பைப் போக்குவதற்காக காடர்கள் அணி ஷாப்பிங் கிளம்பியது. அந்தக் கடை லாக்டௌன் பிரச்னையில் நஷ்டமடைந்துவிட்டது போல. கடந்த முறை செழிப்பாக இருந்த கடை, இம்முறை டல்லடித்தது. ஆனால் அதே சேல்ஸ்மேன்தான் இருந்தார். சோப், காஃபி போன்வற்றை வாங்கினார்கள். கூடவே இலவசமாக இரண்டு கோப்பைகள் கிடைத்தன. (அங்கயும் ஆடித்தள்ளுபடி ஆஃபர் உண்டு போல!). “நம்ம ஊர் வழக்கப்படி எதையாவது சுட்டுடலாமோன்னு பார்த்தோம்” என்றார் உமாபதி. (கொடூரமான பஞ்சாயத்து நடந்து முடிஞ்சும் நீங்க இன்னமும் மாறவேயில்லையே?! ரொம்ப வொர்ஸ்ட்ரா டேய்!)

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

“சோப்புன்னு நம்பி இதை வாங்கிட்டு வந்துட்டமே... இது குளிக்கற சோப்பா? பார்த்தா துணி துவைக்கற சோப்பு மாதிரி தெரியுது. சரி, எதையோ போட்டு குளிப்போம்... மூஞ்சு பளபளன்னு ஆனா சரி” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார் உமாபதி. இவரின் ஜாலியான கமெண்ட்டுக்கள்தான் காடர்கள் அணியை பெரும்பாலும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கிறது.

மூன்றாம் உலகம். ‘யாரு பெத்த பிள்ளைகளோ... பாவம் அநாதையா இருக்குதுங்க' ஏரியாவில் காயத்ரியும் விஜியும் இருந்தார்கள். (தீவின் ஓனர் பார்வதியைக் காணோம்!). இருவரும் இணைந்து ஒரு பெரிய நண்டைப் பிடித்துவந்து அதற்கு விதம் விதமாக இம்சை தந்து கொண்டிருந்தார்கள்.

நண்டின் சிண்டைப் பிடித்து குழம்பு வைப்பதற்குள் இவர்களுக்கு ஓர் ஓலை வந்தது. “ஆழ்கடலில் ஒரு ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கிறாம். அதை இவர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமாம்”. இந்த அறிவிப்பிற்காக அநாவசியமாக புதைந்து போன பூம்புகார் நகரத்தையெல்லாம் அறிவிப்பில் இழுத்துக் கொண்டிருந்தார்கள். (ஐயா, ஸ்கிரிப்ட் ரைட்டரே... வாங்குகிற சம்பளத்துக்கு மட்டும் எழுதுங்க போதும்!).

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

கடல் அலை மீது மிதந்து கொண்டிருக்கும் பல தேங்காய்களில் ஒன்றில்தான் இவர்கள் தேடும் ஆச்சரியம் ஒளிந்திருக்கிறதாம். (தேங்காய்ல குருமா வைக்கலாம். ஆச்சரியத்தை வைக்கலாமோ?!) இருவரும் லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மாட்டிக் கொண்டு கடலில் இறங்கினார்கள்.

“இந்த முறை ரிவார்டை எப்படியாவது எடுத்துடணும்” என்று உறுதி பூண்டார் காயத்ரி. கடந்த முறை இந்திரஜாவுடன் இப்படி இறங்கும் போது இந்திரஜா அடைந்த பயத்தினால் பாதியிலேயே திரும்பிவிட வேண்டியிருந்தது. “ஆசையே... அலைபோல. நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே" என்று இரண்டு பேரும் அலைகளைக் கடந்து ஒவ்வொரு தேங்காயை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஏமாற்றம்தான் இருந்தது. வெறும் கல்லை கட்டி வைத்து ஏமாற்றியிருந்தது சர்வைவர் டீம்.

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

இன்னும்... இன்னும்... என்று அந்த ஏரியாவைப் போட்டு பயங்கரமாக அலசிக் கொண்டிருந்தார்கள். அலைகளின் திசை வேறு மாறிக் கொண்டிருந்ததால் நீந்துவதற்கு சிரமமாக இருந்தது. ஒருவழியாக ஓரிடத்தில் காயத்ரிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. எடுத்து வந்து கரையில் வைத்துப் பார்த்தால்... “சோறு இருக்குமோ’ என்று முதலில் தோன்றியது இல்லை. நெருப்புக்கருவி, அரிசி, பருப்பு போன்றவை இருந்தன. "அடிச்சாச்சு. லக்கி பிரைஸ்” என்று இருவரும் உற்சாகம் ஆனார்கள். (அப்ப அன்னிக்கு மெனு, சாதம் + நண்டு குழம்பா இருந்திருக்கும்!)

மூன்றாம் உலகத்தில் இவர்கள் இப்படி ஒரு வாய் சோற்றிற்கு நண்டாய் திரிந்து கொண்டிருக்க, காடர்களோ சாப்பிட்ட களைப்பில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். (தமிழனைத் தூக்கிப் போய் எங்க போட்டாலும் சில விஷயங்களை விடவே மாட்டான்!).

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

இரு அணியினருக்கும் அறிவிப்பு வந்தது. சர்வைவர் ஐயா, புதுத்துணி அனுப்பியிருந்தார். மேலும் குளிப்பதற்கு நல்ல நீரும் வந்திருந்தது. ‘ஒருமுறை... இரண்டு முறை... மூன்று முறை…' என்று பின்குறிப்பாக. எழுதியிருந்ததைப் பார்த்ததும் ‘ஏலம்’ தொடர்பாக ஏதோ நடக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

“இப்படியே அழுக்கா இருந்து பழகிட்டமா. இப்ப புதுத்துணியை பார்த்தாலே பிடிக்கலை” என்று நாராயணன் சொன்னது நகைச்சுவையாகத் தெரிந்தாலும் யோசித்துப் பார்த்தால் யதார்த்தமான விஷயம். ('சரக்கு ஒரிஜினல் போல. அதான் எனக்கு ஒத்துக்கல’ என்கிற விவேக் காமெடியைப் போல).

ரவிக்கு மட்டும் எக்ஸ்ட்ரா தண்ணீர் கிடைக்க "என்ன சுகம்... என்ன சுகம்?” என்று ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தார். வேடர்கள் பக்கெட் நீரை அப்படியே தலையில் கவிழ்த்துக் கொண்டிருக்க, காடர்கள் அணி புத்திசாலித்தனமாக கொட்டாங்குச்சி, இளநீர் போன்வற்றில் மொண்டு மொண்டு சிக்கனமாக குளித்துக் கொண்டிருந்தது. காடர்கள் அணிப்பெண்கள் தங்களின் கூந்தலுக்கு மட்டும் நல்ல நீரைப் பயன்படுத்தினார்கள். (சில விஷயங்களில் பெண்களை மாற்றவே முடியாது!).

சர்வைவர் - 33
சர்வைவர் - 33

ஷாம்பூ விளம்பரத்தில் வருவது போல தலைமுடியை உதறி லட்சுமி பிரியா திரும்ப, வனேசாவும் லேடி காஷூம் ஆடித்தள்ளுபடி விளம்பரத்தில் வருவதுபோல் புது ஆடைகளில் நடந்து வந்தார்கள்.

“நாம 2 நிமிஷத்துல தோத்துப் போய் சோத்துக்கு ரொம்ப அல்லாடறோம். இந்த முறை அர்ஜுன் சாரை இம்ப்ரஸ் செய்யற மாதிரி பேசிடணும்” என்று திட்டமிட்ட நாராயணன் – ரவி ஜோடி நகைச்சுவையாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது. ரவி ஆள்தான் பார்க்க கோபக்காரராக இருக்கிறாரே தவிர, வாயைத் திறந்தால் இயல்பாக ஜோக் அடிக்கிறார்.

இரண்டு அணிகளும் இருக்கிற வசதியை வைத்துக் கொண்டு பூஜையை முடித்துவிட்டு அர்ஜுனைச் சந்திக்க கிளம்பின.

அங்கு ஏதோ ‘ஏலம்’ன்னு சொன்னாங்களேப்பா... அது என்னவா இருக்கும்?

பார்த்துடுவோம்.
இணைய தலைமுறையை சந்திக்க இளைய தளத்திற்கு வருகிறோம். செவிக்குணவாக ஹலோ விகடன். இப்பவே கேளுங்க!
Hello விகடன்
Hello விகடன்