Published:Updated:

சர்வைவர் - 53: அண்ணன் விஜய் பற்றி நெகிழ்ந்த விக்ராந்த்... தன் கையால் விருந்து பரிமாறிய அர்ஜுன்!

சர்வைவர் - 53

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 53-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 53: அண்ணன் விஜய் பற்றி நெகிழ்ந்த விக்ராந்த்... தன் கையால் விருந்து பரிமாறிய அர்ஜுன்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 53-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 53
வழக்கமாக போட்டிகளும் உத்திகளும் சண்டைகளும் ரத்தக்காயங்களும் நிறைந்திருக்கும் சர்வைவர் இன்று ‘விக்ரமன்’ படக்காட்சி மாதிரி ‘லாலாலா’ பாடியது. அர்ஜுனும் போட்டியாளர்களும் விதம் விதமாக சிரிப்பதைத் தொகுத்திருக்கும் புரோமோ கட்டே இதன் சிறந்த முன்னுதாரணம்.

விருந்து, சிரிப்பு, கும்மாளம், கலாய்ப்பு என்று இந்த எபிசோட் மிக உற்சாகமாக அமைந்திருந்தது. அதாவது Fighting Mode-ல் இருந்த நிகழ்ச்சி Feast Mode-க்கு மாறியிருந்தது. அந்தளவிற்கு சிறப்பான விருந்து இன்று. அதே சமயத்தில் ஆட்டைக் குளிப்பாட்டுவது எதற்கு, பிரியாணிக்குத்தானே என்கிற எண்ணமும் இன்னொரு பக்கம் எழாமல் இல்லை. வரப்போகிற சவால்கள் அத்தனை கடுமையாக இருக்கும்.

சர்வைவர் 53-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 53
சர்வைவர் - 53

சர்வைவர் லோகோவின் அவுட்லைன் மட்டும் ஒரு பெரிய பேனரில் தரப்பட்டிருந்தது. மக்கள் இதற்கு வண்ணம் பூசி அழகு சேர்க்க வேண்டுமாம். "நான் நல்லா வரிவேன்” என்று கொஞ்சு தமிழில் பேசி உற்சாகமாக தயார் ஆனார் வனேசா. பெயிண்ட் டப்பாக்களைத் திறந்து தந்ததோடு உமாபதி குழுவின் வேலை முடிந்தது. மூலையில் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

நந்தா, லேடி காஷ், வனேசா, விஜி, சரண் உள்ளிட்டோர் இணைந்து வண்ணங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல ஓர் ஓவியம் உயிர்பெறுவதைக் காண்பது சுவாரஸ்யமாக இருந்தது. கூட்டுப் பிரார்த்தனை போல இந்த கூட்டு ஓவியம் ஒருவழியாக நிறைவு பெற்ற பிறகு பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது.

சர்வைவர் - 53
சர்வைவர் - 53

“இன்னிக்கு உங்களுக்கு லீவு. புதுத்துணில்லாம் இருக்கு. போட்டுக்கிட்டு விருந்துக்கு வாங்க” என்று ஓலை வந்ததும் மக்கள் உற்சாகமாகக் கிளம்பினார்கள். “50 நாள்களைக் கடந்து இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இரு அணிகளும் ஒன்றாக கலந்திருப்பதால் ‘Happy Merging day’-வை முன்னிட்டு இந்த விருந்துக் கொண்டாட்டம்” என்கிற முன்னுரையுடன் போட்டியாளர்களை வரவேற்றார் அர்ஜுன். ‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று அவர் அழைத்தாலும் இன்றைய ஆட்டக்களம் என்பது உணவு மேஜைதான். “ஹப்பாடா! சோறு போடறாங்க... இன்னிக்கு ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்" என்கிற கொலைவெறியுடன் மக்கள் உள்ளே வந்தார்கள்.

வந்தவர்களுக்கு முதலில் சோற்றைக் கிளறி லெக்பீஸ் போடாமல், அதற்கு மாறாக அவர்களின் வாயைக் கிளறி வேடிக்கை பார்த்தார் அர்ஜுன். பிறகு ஆரம்பித்தது அந்த நகைச்சுவை சரவெடி. சில வெடிகள் பலவீனமாக வெடித்தாலும் பல வெடிகள் அற்புதமாக வெடித்தன. குறிப்பாக அம்ஜத் செய்த ‘செக்ஸி சிக்கன் ரெசிப்பி’ இருப்பதிலேயே படு அட்டகாசமான காமெடி.
சர்வைவர் - 53
சர்வைவர் - 53

“உங்களோட தீபாவளி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்” என்கிற சம்பிரதாய கேள்வியுடன் ஆரம்பித்தார் அர்ஜுன். ராக்கெட் விட்டு பக்கத்து வீட்டுக்காரரை ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்த மங்கலகரமான நினைவோடு தொடங்கி வைத்தார் விக்ராந்த். “ஹாஸ்டல்ல ஒரு நாள்தான் லீவு தருவாங்க. தீபாவளின்னாலே எனக்கு சினிமாதான். அடம் பிடிச்சு குணாவையும் தளபதியையும் ஒரே நாள்ல பார்த்ததை மறக்க முடியாது” என்றார் நந்தா. (அட! நம்மாளு!). “எங்க வீட்லதான் பட்டாசு நிறைய வெடிச்சோம்ன்றதைக் காண்பிக்க பக்கத்து வீட்டு குப்பையையெல்லாம் கொண்டு வந்து போட்டுக்குவோம்” என்று பெரும்பாலோனோர் தங்களின் இளம் பிராயத்தில் செய்திருக்கும் வழக்கமான குறும்பைச் சொன்ன சரண், “பிறகு விலங்குகள் மீது அக்கறை வந்ததால் பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டேன்” என்று சொன்னது சிறப்பான விஷயம்.

சர்வைவர் - 53
சர்வைவர் - 53

“சிங்கப்பூர்ல தீபாவளி பெரிய பண்டிகை கிடையாது. ஆனா நாங்க ஒண்ணா சேர்ந்து ‘லிட்டில் இந்தியா’ன்ற பகுதில கொண்டாடுவோம். அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்” என்றார் லேடி காஷ். “லேடி காஷ், அம்ஜத், விஜி... மூணு பேருக்கும் வீட்ல இருந்த அனுப்பிச்ச கிஃப்ட்டை அப்ப தர முடியாம போச்சு. இப்ப அதை வாங்கிக்கலாம்” என்று அர்ஜுன் தெரிவித்ததும் மூன்று பேரும் மகிழ்ச்சியடைந்தார்கள். விஜிக்கும் அம்ஜத்திற்கும் குடும்பப் புகைப்படம் வந்திருந்தது. லேடிகாஷிற்கு அவரது டீம் நினைவுச்சின்னங்களும் கடிதங்களும் அனுப்பியிருந்தது.

“ஓகே... இப்ப அடுத்து உங்களுக்கு ஒரு ஜாலியான டாஸ்க். உங்க எல்லோருக்கும் ஒரு துண்டு சீட்டு தரப்படும். அதில் முதல் பக்கத்தில் இருக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க... அப்புறம் கடைசில உங்க டாஸ்க் இருக்கும்" என்று சிரிப்பு புஸ்வாணத்தை கொளுத்த ஆரம்பித்தார் அர்ஜுன்.

“உங்கள் அணியில் பாட்டுப் பாடுகிற தகுதி கொண்ட ஆண் குரல் யார்?” என்கிற கேள்வி லேடி காஷிற்கு வர அவர் விக்ராந்த் பக்கம் கைகாட்டினார். இருவரும் சேர்ந்து டூயட் பாடல் பாட வேண்டுமாம். லேடி காஷ் நடிகர் விஜய்யின் திரைப்படத்தலைப்புகளால் அமைந்த வரிகளை வைத்து பாட, “என்னோட லைலா... வராளே மயிலா” என்கிற பாடலை விக்ராந்த் பாடினார். பாடி முடித்துவிட்டு சென்றவரை நிற்க வைத்து “உங்க அண்ணன் பத்தி சொல்லுங்களேன்” என்று வாயைக் கிளறினார் அர்ஜுன்.

“எங்க அண்ணன்தான் எங்களோட அடையாளம். 'இந்த மூஞ்சுல்லாம் நடிக்க வந்திருக்கா?-’ன்னு ஆரம்பத்துல ஒரு பத்திரிகைல கிண்டல் பண்ணி எழுதினாங்க. இருபது வருஷம் கழிச்சு அதே பத்திரிகைல அவரோட வாழ்க்கை வரலாறு பத்தி எழுதறாங்க. அத்தனை கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பாதை அவரோடது. என்னோட பயணத்திற்கும் அவர்தான் அஸ்திவாரம். இதுவரைக்கும் எங்கயும் இதை நான் சொன்னதில்லை” என்று விஜய்யைப் பற்றி நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு அமர்ந்தார் விக்ராந்த்.

சர்வைவர் - 53
சர்வைவர் - 53

"உங்கள் அணியில் பலமான ஆண் போட்டியாளர் யார்?” என்கிற கேள்வி வனேசாவிற்கு வர அவர் சந்தேகமே இல்லாமல் உமாபதியைச் சுட்டிக் காட்டினார். ஆனால் இவருக்கு வந்த டாஸ்க் இவர் அநியாயமாக வெட்கப்படும்படி அமைந்திருந்தது. ஆம், உமாபதி, வனேசாவை கையால் தூக்கி நடனம் ஆடி பாட்டுப் பாட வேண்டுமாம். ‘கையில் மிதக்கும் கனவா நீ?’ என்கிற அருமையான ரொமாண்ட்டிக் பாடலுக்கு சிறிது நேரம் வனேசாவைத் தூக்கி நடனம் ஆடிய உமாபதி, பிறகு “பாருங்க சார். வயித்துப் பிழைப்புக்காக இதைப் பண்றோம்... தர்மம் பண்ணுங்க சாமி” என்று ரொமாண்டிக் மூடை இரவல் கேட்கும் டாஸ்க்காக மாற்றிவிட்டார். சபையே விழுந்து விழுந்து சிரித்தது. “வனேசாவை உமாபதி தூக்கியதற்கு இனிகோ காண்டாயிட்டார்” என்பதுபோல் விக்ராந்த் கமெண்ட் அடிக்க சிரிப்பொலி உச்சத்திற்குச் சென்றது.

“உங்களை விடவும் அதிகமாகச் சிரிப்பவர் யார்?” என்கிற கேள்வி விஜிக்கு வர அவர் கைகாட்டியது விக்ராந்த்தை. "அய்யோ.. நானா?” என்று அதிர்ச்சி காட்டினார் விக்ராந்த். “ஆமாம்.. சார். சில விஷயங்களுக்கு அவர் சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டார்” என்றார் விஜி. இருவரும் சேர்ந்து சிரிக்க வேண்டுமாம். “இனிகோவை அவரோட காதல் கதையை சொல்லச் சொல்லுங்க சார். நாங்க சிரிக்கறோம்” என்றொரு நிபந்தனையை விக்ராந்த் போட “அந்தக் கொடுமையை நான் எப்படி என் வாயால சொல்லுவேன்” என்று இனிகோ சொன்னதும் விஜி, விக்ராந்த் மட்டுமல்ல, அந்தக் கதையை அறிந்த அனைவருமே சிரித்தார்கள்.

“சுமாராக சமைக்கும் நபர் யார்?” என்ற கேள்வி விக்ராந்திற்கு வர, அவர் அடுத்த நிமிடமே அம்ஜத்தை நோக்கி கைகாட்டினார். ஆனால் அடுத்து வரவிருக்கும் ஆபத்தை விக்ராந்த் அப்போது உணரவில்லை. ஆம், அவருக்கு வந்த டாஸ்க் இதுதான். விக்ராந்த் சிக்கன் மெனுவை சோகமாக சொல்ல வேண்டுமாம். பதிலுக்கு அம்ஜத் அதே மெனுவை செக்ஸியாக சொல்ல வேண்டுமாம். இந்த டாஸ்க்கில் அம்ஜத் அடித்த லூட்டி படு ரகளையாக இருந்தது. “டேய். உனக்கு எந்தக் கால் வேணும்?” என்று அம்ஜத் கேட்டபோது சோகமாக பேச வேண்டிய விக்ராந்த்தே வெட்கம் தாங்காமல் சிரித்துவிட்டார். அர்ஜுன் உள்ளிட்ட ஒட்டுமொத்த சபையும் அதைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்தது.

சர்வைவர் - 53
சர்வைவர் - 53
“ஏய்... நீ ரொம்ப அழகா இருக்கே?” என்று யாராவது ஒருவரைப் பார்த்து சரண் சொல்ல வேண்டுமாம். இது தெரிந்த கதைதான். ஐஸ்வர்யாவிற்கு அப்போதே கன்னங்கள் சிவக்க ஆரம்பித்துவிட்டன. பிறகு இருவரும் டூயட் ஆட வேண்டிய டாஸ்க்கில், தயங்கி நின்ற சரணை விதம் விதமாக இழுத்து முறுக்குப் பிழிவது போல் பிழிந்து காதல் வன்முறையைக் காட்டினார் ஐஸ்வர்யா. ஆனால் ‘வசீகரா’ பாடலுக்கு அவர் நடனம் ஆடிய விதம் நேர்த்தியாகவும் வசீகரமாகவும் இருந்தது.
‘தனியொருவன்’ பாடலை ஒலிக்க விட்ட சர்வைவர் டீம், "அதை யாருக்காவது டெடிகேட் பண்ணணும்” என்று நந்தாவிற்கு சொன்னதும். அவர் இனிகோவை கைகாட்டினார். இருவரும் Arm wrestling டாஸ்க்கில் இறங்க, மிக எளிதாக நந்தாவை தோற்கடித்தார் இனிகோ. நந்தாவின் கையில் அடிபட்டிருந்தது ஒரு முக்கிய காரணம்.
சர்வைவர் - 53
சர்வைவர் - 53

“யாருக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கிறது?” என்கிற கேள்வி ஐஸ்வர்யாவிடம் வர “வேற யார்? சரண்தான். பயபுள்ள ரெண்டு முறை தப்பிச்சிட்டான்” என்றார். இது சரணிற்காகவே தயாரிக்கப்பட்ட கேள்வி போலிருக்கிறது. இருவரும் ஏதாவது ஒரு ரொமான்டிக் காட்சியில் நடிக்க வேண்டுமாம். ‘பருத்தி வீரன்’ கார்த்தி மாதிரி சரண் நடிக்க முயல, அவரை இழுத்துப் போட்டு காதலித்தார் ஐஸ்வர்யா.

இருப்பதிலேயே நாராயணனுக்கு வந்ததுதான் பெரிய சோதனை. “யார் முகத்தில் விழித்தீர்கள்?" என்கிற கேள்வி வந்தபோதே அவர் சுதாரித்திருக்க வேண்டும். "அம்ஜத் முகத்தில்” என்று அவர் உண்மையைச் சொல்லி விட “அம்ஜத்தின் முகத்தை 90 நொடிகள் ரொமான்ட்டிக்காக பார்க்க வேண்டும்” என்கிற அதிபயங்கர துயரம் நாராயணனுக்கு ஏற்பட்டது. “இந்த மூஞ்சை சும்மா பார்க்கறதே கஷ்டம். ரொமான்டிக்கா எப்படி சார் பார்க்கறது? என்று அலறினார் நாராயணன். என்றாலும் மனதைத் தேற்றிக் கொண்டு அவர் அம்ஜத்தை உற்று உற்றுப் பார்க்க “எங்கெங்கயோ பார்க்கறான் சார்” என்று அம்ஜத்தே வெட்கத்தில் சிணுங்கினார்.

சர்வைவர் - 53
சர்வைவர் - 53

அடுத்து அம்ஜத் செய்ததுதான் ரகளையான டாஸ்க். “பெஸ்ட் பிரெண்ட் யாரு?" என்று வந்திருந்த கேள்விக்கு “நாராயணன்” என்று அவர் பதிலளிக்க, நாராயணனை வாழ்த்தியும் திட்டியும் மாற்றி மாற்றிப் பேச வேண்டும் என்ற டாஸ்க் வந்தது. “என் உயிர் நண்பன் சார் அவன்...” என்று ஆரம்பித்த அம்ஜத் அடுத்த நிமிடமே “கொலை பண்ணக்கூட தயங்க மாட்டான்...” என்று மாற்றி மாற்றிப் பேசியது சிறப்பான நகைச்சுவை. ஜான்சிபார் தீவே சிரிப்பால் நிறைந்திருக்கும். அப்படியொரு சிரிப்பு மழை.

“காந்தக் கண்ணழகி யார்?” என்கிற கேள்வி உமாபதிக்கு வந்திருந்தது. இதற்கு என்ன பதில் என்பது அனைவருக்கும் தெரியும். உமாபதியோ வெட்கப்பட்டு "விஜி” என்று ஜாக்கிரதையாக பதில் சொல்ல “டேய் உன்னைப் பத்தி தெரியாதா?" என்று கிண்டலடித்தார் விஜி. பிறகு இருவரும் ஒரு திரைப்படப் பாடலுக்கு நடனமாடினார்கள். (ஹப்பாடா! வனேசா எஸ்கேப்பு – இது இனிகோவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்!).

சர்வைவர் - 53
சர்வைவர் - 53
சிரிப்பு டாஸ்க் முடிந்ததும் "உங்களோட தொழில் சார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்” என்றார் அர்ஜுன். “நான் எழுதும் பாடல் வரிகளில் வாழ்க்கையின் துயரம் இருக்கும். ஒருவகையில் அதுவே சுமை. இன்னொரு வகையில் அதுதான் என் பாடல்களின் பலம்” என்றார் லேடி காஷ்.

“மார்க்கெட்டிங்கில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் சினிமாதான் ஆசையாக இருந்தது. ‘வல்லினம்’ படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. எல்லாம் ஓகே ‘பாஸ்கெட் பால்’ விளையாடத் தெரியுமா?" என்கிற கேள்விக்கு பொய் சொல்லி விட்டேன். பிறகு கற்றுக் கொண்டேன். இயக்குநரும் என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டார்” என்ற அம்ஜத், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கிறாராம். (ஓ... அதற்காகத்தான் அந்த நீளமான தலைமுடியா?!).

“மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் அறிமுகமானேன். பிறகு வரிசையாக பல படத்தில் நடித்திருக்கிறேன்” என்றார் சரண். “ஆமாம். இவர் நடித்த ‘சகா’ன்ற படத்தைப் பார்த்தேன். ரொம்பவும் முதிர்ச்சியான நடிப்பு. வாழ்த்துகள்" என்றார் அர்ஜுன். நந்தாவின் அனுபவம் உணர்வுபூர்வமானதாக இருந்தது. “திலீபன்-ற படத்தைத் தயாரிச்சு நடிச்சிக்கிட்டு இருக்கேன். தன்னோட போராட்டத்திற்காக 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து துளி தண்ணி கூட குடிக்காம செத்துப் போன இளைஞன் அவன். அந்த மரணத்திற்குப் பிறகுதான் இயக்கத்தோட போராட்ட வேகம் இன்னொரு விதமா மாறிச்சு. படம் ஏறத்தாழ முடிஞ்சிடுச்சு. ‘உண்ணாவிரத’ போர்ஷன் மட்டும்தான் பாக்கி. ரெடியாயிட்டு இருக்கேன்” என்றார் நந்தா.

சர்வைவர் - 53
சர்வைவர் - 53

"உங்க எல்லோருக்குப் பின்னாலும் அழுத்தமான அனுபவங்கள் இருக்கு. எனக்குப் பிடிச்ச புரூஸ்லியோட மேற்கோள் ஒண்ணு இருக்கு. ‘Don't fear failure. — Not failure, but low aim, is the crime. ஓகே. இப்ப மெயின் மேட்டருக்குப் போகலாம். விருந்து ரெடியா இருக்கு” என்று அர்ஜுன் சொல்ல “சார்... அதுக்குத்தானே காத்துக்கிட்டு இருக்கோம்” என்று மக்கள் பரிதவித்தார்கள். எல்லோருக்கும் தன் கையாலேயே கேட்டு கேட்டு அர்ஜுன் பரிமாறிய காட்சி அழகு. “உங்களுக்கு தங்கக் கூடாரம் கூட நல்லா ரெடி பண்ணியிருக்கோம்” என்கிற மகிழ்ச்சியான தகவலைச் சொல்லி விடைபெற்றார் அர்ஜுன்.

உணவு, உறக்கம் தயார். எனில் அடுத்தது சவால்கள்தானே..? என்ன மாதிரியான சவால்கள்?

பார்த்துடுவோம்.