Published:Updated:

சர்வைவர் - 57: வெளியேறிய ஐஸ்வர்யா... காடர்களின் சுயநல ஆட்டம்!

சர்வைவர் - 57

சரணிடம் இதே கேள்வியை அர்ஜூன் கேட்ட போது 'இது அவரவர் விருப்பம்' என்று மழுப்பலாக பதில் சொல்லி விட்டார். இதே கேள்விக்கு "ஒருத்தரை ஆதரிக்கறது ப்ளஸ்தான். ஆனால் அவர் பின்னால் கத்தியால் குத்தக்கூடாது" என்று ஊசி வைத்த பதிலைத் தந்தார் உமாபதி.

Published:Updated:

சர்வைவர் - 57: வெளியேறிய ஐஸ்வர்யா... காடர்களின் சுயநல ஆட்டம்!

சரணிடம் இதே கேள்வியை அர்ஜூன் கேட்ட போது 'இது அவரவர் விருப்பம்' என்று மழுப்பலாக பதில் சொல்லி விட்டார். இதே கேள்விக்கு "ஒருத்தரை ஆதரிக்கறது ப்ளஸ்தான். ஆனால் அவர் பின்னால் கத்தியால் குத்தக்கூடாது" என்று ஊசி வைத்த பதிலைத் தந்தார் உமாபதி.

சர்வைவர் - 57
'சர்வைவர்' போட்டியிலிருந்து ஐஸ்வர்யா எலிமினேட் ஆனார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் அதிர்ச்சி மற்றும் துயர ஹைலைட்.

காடர்கள் சரணுக்கு போட்ட ஸ்கெட்ச் திசைமாறி ஐஸ்வர்யாவின் மீது பாய்ந்தது. துரோகத்தின் கத்திகளை முதுகில் சுமந்தாலும் புன்னகை மாறாமல் ‘திரும்பவும் வருவேன்” என்று விடைபெறும் நேரத்தில் ஐஸ்வர்யா சொன்னது அவரது அபாரமான நம்பிக்கையைக் காட்டுகிறது. A Real Sportswoman.

ஐஸ்வர்யா மீது சில குறைகள் இருக்கலாம். சர்வைவர் டீமில் குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால் ஒரு சிறந்த ஆட்டக்காரரை வெளியே அனுப்பிவிட்டு மிக்சர் பாக்கெட்டுக்களை ஒரு அணி பக்கத்திலேயே வைத்துக் கொள்வது முறையற்ற உத்தி. ஒரு நல்ல ஆட்டக்காரன், இன்னொரு நல்ல ஆட்டக்காரனை முறையாகப் போட்டியிட்டு வெல்வதன் மூலமே உண்மையான மகிழ்ச்சியை அடைவான்.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

இன்று மட்டுமல்ல, பெரும்பாலும் அர்ஜூனின் விசாரணை காடர்களுக்கு ஆதரவாகவும் வேடர்களுக்கு பாதகமாகவும் பாரபட்சத்துடன் அமைந்திருக்கிறது. ‘சின்னப்பையா’ என்று அழைத்து சரணை நோண்டுவது போல உமாபதியையோ, விக்ராந்தையோ அர்ஜூன் ஒருநாளும் கடுமையாக விசாரித்ததில்லை.

சர்வைவர் 57-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

தனிநபர் இம்யூனிட்டி சவால் முடிந்து நதா வெற்றி பெற்றிருக்கும் சூழலில் நிகழும் முதல் ‘டிரைபல் பஞ்சாயத்து’ இது. “முன்னொரு காலத்தில் காடர்கள், வேடர்கள் ஆகிய இரு குழுக்கள் இருந்ததாகவும், கொம்பர்கள் என்று புதிய லேபிள் ஒட்டப்பட்டாலும் அவர்கள் மனதளவில் தங்களின் அணியினராகவே வாழ்ந்ததாகவும் ஒரு கதை இருக்கிறதே?” என்கிற குத்தலுடன் விசாரணையைத் துவங்கினார் அர்ஜூன்.

“அந்தப் பிரிவினை நிச்சயம் இருக்கு” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் விக்ராந்த். “அது போகறதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்” என்று மழுப்பினார் அம்ஜத். “சரியாவறது சந்தேகம்தான்” என்று யதார்த்தம் பேசினார் நந்தா. நந்தாவை வழிமொழிந்தார் இனிகோ.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57
‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி இவர்களின் வாக்குமூலம் இல்லாமலேயே காடர்களும் வேடர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்பதற்கான காமிரா சாட்சியங்கள் நிறைய இருக்கின்றன. ‘'என்ன அர்த்தம் இதுக்கு?” என்று அர்ஜூன் கேட்டதும் “அந்தளவிற்கு க்ளோஸா பழகிட்டோம்” என்று பதில் வந்தது. போட்டி ஆரம்பிச்சு ஐம்பது நாள்களில் ஃபெவிகால் போட்டு ஒட்டின மாதிரி ஃபீலிங்ஸ் வந்துவிட்டதோ!

'‘தனிநபர் இம்யூனிட்டி சவாலில் கடைசியில் மிஞ்சியது (பழைய) வேடர்கள் அணிதான். இதை எதைக் காட்டுகிறது? இது உண்மையா, உத்தியா?” என்று காடர்களை காண்டாக்குவது போல் ஒரு கேள்வி கேட்டார் அர்ஜூன். இதற்கு பலரும் மழுப்பினாலும் '‘ஆமாம் சார்... வேடர்கள் கடைசிவரை இருந்தது எனக்கு சந்தோஷமாத்தான் இருந்தது” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

“ஒருத்தருக்கு வெளிப்படையா ஆதரவா தர்றது ப்ளஸ்ஸா, மைனஸா”? என்றொரு கேள்வியை ஐஸ்வர்யாவிடம் தூண்டிலாக போட்டார் அர்ஜூன். சரண் + ஐஸ்வர்யா நட்பு குறித்தான தூண்டில் கேள்வி இது. “மைனஸ்தான். ஆனா இங்கே வந்து பேசினப்புறம் நான் மைனஸா ஃபீல் பண்ணலை” என்று அதிரடியாகச் சொன்னார் ஐஸ்வர்யா. காடர்கள் அனைவரும் சரணை டார்கெட் செய்வது அவரை கோபப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஐஸ்வர்யா சொன்ன இந்தப் பதில்தான் அவர் இன்று வெளியேற காரணமாக இருந்தது. அதுவரை சரணை மட்டுமே டார்கெட் செய்த காடர்கள், அடுத்த சான்ஸில் ஐஸ்வர்யாவை கட்டம் கட்டுவதற்கு காரணம், சரணுக்கு அவர் தந்த வெளிப்படையான ஆதரவுதான்.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57
சரணிடம் இதே கேள்வியை அர்ஜூன் கேட்ட போது ‘இது அவரவர் விருப்பம்’ என்று மழுப்பலாக பதில் சொல்லி விட்டார். இதே கேள்விக்கு “ஒருத்தரை ஆதரிக்கறது ப்ளஸ்தான். ஆனால் அவர் பின்னால் கத்தியால் குத்தக்கூடாது” என்று ஊசி வைத்த பதிலைத் தந்தார் உமாபதி.

“நியாயம்னா என்ன?” என்று அடுத்த தூண்டிலை நந்தாவை நோக்கி வீசினார் அர்ஜூன். “உண்மையா இருக்கறது” என்று நந்தா பதில் சொன்னவுடன் “நீங்க காமிரா முன்னாடி ஒரு மாதிரியும் பின்னாடி ஒரு மாதிரியும் பேசறீங்களாமே?” என்றபோது மறுத்தார் நந்தா. “பொதுவா நந்தா மாத்தி மாத்திப் பேசுவார்னு சொல்வாங்க. இன்னிக்குக் கூட அப்படியொரு சம்பவம் நடந்தது. க்ரூப் டிஷ்கஷன்ல அவர் ஒரு பெயரைச் சொன்னார். ஆனால் தனியாகப் பேசும்போது இன்னொரு பெயரைச் சொன்னார்” என்று சாட்சியம் சொன்னார் விக்ராந்த். “நான் எப்போதும் நல்லதுக்குதான் முடிவை மாத்துவேன்” என்று நந்தா விளக்கம் அளித்தபோது, ‘பஞ்சாயத்துல வந்து திடீர்னு அவர் மாத்திட்டா என்ன பண்றது?” என்று விக்ராந்த் நெருக்கடி தரவே ‘ஸாரி’ என்று மன்னிப்பு கேட்டு விட்டார் நந்தா.

குழு உரையாடலின்போது காடர்கள் அனைவருமே சரணிற்கு எதிராகப் பேசும்போது, அந்த அழுத்தத்தில் நந்தா ஒப்புக் கொண்டிருக்கலாம். பிறகு தனியாக வந்து யோசிக்கும் போது “ஏன் ஒரு சின்னப்பையனை இத்தனை காட்டமாக அவர்கள் எதிர்க்கிறார்கள்?” என்று தன் நிலைப்பாடை மாற்றிக் கொண்டிருக்கலாம்.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

இதே கேள்வி ஐஸ்வர்யாவிடம் வந்தபோது “அதுவும் ஒரு தனிப்பட்ட உத்திதான். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனா நான் அந்த மாதிரி கிடையாது” என்று உறுதியாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் விஜியும் உமாபதியும் ஐஸ்வர்யாவை மடக்க முயன்றார்கள். “Soul Survivor –ஆக விளையாடறோம்னு சொல்லிட்டு சரணை ஏன் நீங்க சப்போர்ட் பண்ணணும்” என்பது உமாபதியின் கேள்வி. ஐஸ்வர்யாவால் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை.

“சின்னப் பையன்.. நீங்க மரியாதைக் குறைவா பேசறீங்களாமே?” என்று சரணை நோக்கி மிக மரியாதையாகக் கேட்டார் அர்ஜூன். “ஆட்ட வேகத்துல ஏதாவது அப்படி பேசியிருக்கலாம். அது தப்புதான். மன்னிப்பு கேட்டுக்கறேன். இனி அப்படி நடக்காம பார்த்துக்கறேன்” என்று சரண் முழு சரணாகதி அடைந்தாலும் அவரை வறுத்தெடுப்பதில் அர்ஜூன் ஏனோ அதிகம் ஆர்வம் காட்டினார். “இது ஹிப்போகிரஸி இல்லையா? தப்புதானே” என்று குடைந்து கொண்டே இருந்தார்.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57
“நான் ஒரு வாக்குமூலம் தரணும்” என்று ஆரம்பித்த ஐஸ்வர்யா, விக்ராந்த் தன்னைக் குறித்து சொன்ன சில சொற்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியாகக் கூறி கண்கலங்க ஆரம்பித்தார். “Humanity இல்ல, Sportsmanship இல்லன்னுலாம் என்னைப் பத்தி சொன்னார். அதுதான் என் அடையாளம். அதையே அவர் குறையா சொன்னது வலிக்குது” என்பது ஐஸ்வர்யாவின் வருத்தம். “ஒருத்தர் தண்ணில விழுந்து போராடிட்டு இருக்கும் போது அவரைக் காப்பாத்தறது முக்கியமா, கேம் முக்கியமா?'' என்று விக்ராந்த் கேட்டது சரியான கேள்வி.

சம்பந்தப்பட்ட எபிசோடை மறுபடி பார்த்ததில் விக்ராந்த்தும் உமாபதியும் லேடி காஷிற்கு உதவப் போய் விட்டார்கள். ஆனால் அதற்குள் வனேசா குச்சிகளை இணைக்கத் துவங்கி விட்டார். ஆட்ட விதிப்படி அனைவரும் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்த பிறகுதான் வனேசா தன் பணியைத் துவங்க முடியும். விக்ராந்தும் உமாபதியும் தன் நிலையில் இல்லாமல் இருக்கும்போது வனேசா ஏன் ஆட்டத்தை அதற்குள் துவங்கினார் என்பதுதான் ஐஸ்வர்யாவின் கேள்வியாக இருந்தது. மட்டுமல்லாமல், வேடர்கள் அதுவரை தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த அழுத்தமும் ஐஸ்வர்யாவிடம் இணைந்திருக்கலாம்.

“அணித்தலைவர் விக்ராந்திற்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்?” என்று அர்ஜூன் கேட்ட போது அனைவருமே நல்ல மதிப்பெண்களைத் தந்தார்கள். காடர்கள் வழக்கம் போல் பத்துக்கு பத்து தந்து தங்களின் அதீத விசுவாசத்தைக் காட்டினார்கள்.
சர்வைவர் - 57
சர்வைவர் - 57

“ஓகே... வாக்கெடுப்பிற்கு போய் விடலாம்” என்று ஆரம்பித்தார் அர்ஜூன். ஐஸ்வர்யா வாக்களிக்க எழுந்தபோது தனக்கிருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அவரின் வாக்கை பிளாக் செய்தார் விக்ராந்த். ஐஸ்வர்யா, சரணிற்குத்தான் வாக்களிப்பார் என்கிற நோக்கில் விக்ராந்த் செய்தது சிறந்த உத்திதான். (காடர்களின் பார்வையில்). ஆனால் வேடர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி. “வாக்குகளைப் பிரித்து அளிக்கப் போகிறோம்” என்று காடர்கள் ஏற்கெனவே திட்டம் போட்டிருந்ததால், சரணிற்கு மொத்தமாக எதிர்வாக்குகள் அளிக்காமல் ஐஸ்வர்யாவிற்கும் சேர்த்து அளித்தார்கள்.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

சர்வைவர் - 57இறுதியில் சரணும் ஐஸ்வர்யாவும் தலா 4 வாக்குகளைப் பெற்றதால் முடிவு சமன் ஆகியது. இதனால் மறுவாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. இம்முறை கச்சிதமாக ஐஸ்வர்யா டார்கெட் செய்யப்பட்டதால் அவருக்கு அதிகபட்சமாக 6 வாக்குகளும் சரணிற்கு 3 வாக்குகளும் வந்தன. “சரணிற்கு எதிராக வாக்களிக்க மாட்டேன்” என்று முன்னர் சொல்லிக் கொண்டிருந்த நந்தா கூட, ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற சரணுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலைமை. விஜி அணிக்குள் மீண்டும் திரும்புவதற்கு ஐஸ்வர்யாதான் பெரிதும் காரணமாக இருந்தார். ஆனால் விஜி அந்த நன்றியுணர்ச்சியை இத்தனை விரைவில் மறப்பது முறையற்றது.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

ஆக. மூன்றாம் முறையாகவும் சரணிற்கு அதிர்ஷ்டம் அடித்தது. ‘ஸ்கெட்ச் அவனுக்கு இல்ல குமாரு.. உனக்குத்தான்' என்கிற திருப்பமாக ஐஸ்வர்யா இந்த சதுரங்க ஆட்டத்தில் தோற்று வெளியேற நேர்ந்தது பெரும் துரதிர்ஷ்டம். காடர்கள் சற்றேனும் மனசாட்சியுடன் யோசித்திருந்தால் லேடி காஷ், வனேசா போன்ற பலவீனமான போட்டியாளர்களை வைத்துக் கொண்டு திறமையான போட்டியாளரான ஐஸ்வர்யாவை வெளியே அனுப்புவது குறித்து சற்றாவது மனம் கூசியிருப்பார்கள். ஆனால் திறமையை விடவும் ‘எண்ணிக்கை விளையாட்டு’ இதில் முக்கியத்துவம் பெறுவதால் சுயநலமாக இருக்கிறார்கள். ஐஸ்வர்யா வெளியேறுவது பலவகைகளில் அவர்களுக்கு லாபமே.

தன் வெளியேற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா, மூன்றாம் உலக வாய்ப்பைப் பற்றி கேள்விப்பட்டதும், ''நிச்சயம் திரும்பி வருவேன்” என்று தன்னம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டே சொன்னது அசலான ஸ்போர்ட்ஸ்விமன்ஷிப்.

சர்வைவர் - 57
சர்வைவர் - 57

ஐஸ்வர்யா விடைபெற்று அகன்றதும் 'நீலப் பெட்டியை எடுங்க' என்றார் அர்ஜூன். அதன்படி இந்த வாரத்தில் இன்னொரு போட்டியாளரையும் எலிமினேட் செய்ய வேண்டுமாம். அது பெரும்பாலும் சரணாக இருக்கலாம். என்ன நடக்கும்?

பார்த்துடுவோம்.