Published:Updated:

சர்வைவர் 42: அட்வான்டேஜா, அதுல ஒண்ணுமில்ல, கீழ போட்டுருங்க... வேடர்கள் இம்யூனிட்டி ஜெயித்தது எப்படி?

சர்வைவர் 42

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 42-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் 42: அட்வான்டேஜா, அதுல ஒண்ணுமில்ல, கீழ போட்டுருங்க... வேடர்கள் இம்யூனிட்டி ஜெயித்தது எப்படி?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 42-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் 42
‘இம்யூனிட்டி சவாலில்’ வேடர்கள் அணி ஜெயித்ததுதான் நேற்றைய எபிசோடின் மகத்தான ஹைலைட். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி இது. ‘அட்வான்டேஜ்’ சேலன்ஞ்சிலாவது சிறிய அதிர்ஷ்டம் வேடர்களுக்கு அடித்தது எனலாம். ஆனால் ‘இம்யூனிட்டி சவாலில்’ பெரிய போராட்டத்திற்குப் பிறகே வெற்றி கிடைத்தது. குறிப்பாக கையில் அடிபட்டிருக்கும் நிலையில் க்ளைமாக்ஸை வெற்றிகரமாக முடித்த நந்தாவின் உழைப்பைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

சர்வைவர் 42-ம் நாளில் என்ன நடந்தது?

அட்வான்டேஜ் சவாலில் ஜெயித்ததால் வேடர்களுக்கு இப்போது சற்று தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ‘இம்யூனிட்டி சவாலை’ தட்றோம்... தூக்கறோம்… என்று உத்வேகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நந்தாவின் கையில் அடிபட்டிருப்பதால் அவரால் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ‘ரிவார்ட் சேலன்ஞில்’ தோளில் சுற்றியிருந்த கயிறு மொத்தமும் கையில் இறங்கி அழுத்தியதால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கை மரத்திருக்கிறது. எனவே மருத்துவ சிகிச்சையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நந்தா. “ரிஸ்க் எடுக்காதீங்க” என்று சொல்லப்பட்டும் ‘பார்த்துக்கலாம்’ என்று நம்பிக்கையோடு இருந்தார் நந்தா.

சர்வைவர் 42
சர்வைவர் 42

‘இந்த இம்யூனிட்டி சேலன்ஜில்’ காடர்கள் வெல்வது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடும்’ என்று ஒருபக்கம் அம்ஜத் சொல்லிக் கொண்டிருக்க, ‘என்னுடைய தலைமையில் ஈடுபடவிருக்கும் முதல் இம்யூனிட்டி சவால் இது. நிச்சயம் நாங்கள் ஜெயித்தாக வேண்டும்’ என்று நம்பிக்கையோடு இன்னொரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சரண்.

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று வழக்கம் போல் வரவேற்றார் அர்ஜுன். “இனிகோ... விருந்துக்குப் போனீங்களே... நல்லாயிருந்துதா?” என்று அர்ஜூன் கேட்டதும் காடர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “இவிய்ங்க எதுக்கு சிரிக்கறாங்க?” என்று புரியாமல் வேடர்கள் பார்த்தார்கள். அதன் ரகசியம் இனிகோவிற்கு மட்டுமே தெரியும். ‘புகுந்த வீடு... பிறந்த வீடு’ காமெடியை மறுபடியும் சொல்லி சிரிக்க வைத்தார் இனிகோ. வேடர்களுக்குப் புரியவில்லையென்றாலும் சம்பிரதாயமாகச் சிரித்து வைத்தார்கள்.

சர்வைவர் 42
சர்வைவர் 42
இனிகோ தீவிற்குத் திரும்பியதும் இது பற்றி விசாரிப்பார்களா அல்லது வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் விட்டு விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.

கிரிக்கெட்டில் ஒரு நிலைவரைதான் பெற்ற வளர்ச்சி, சினிமா தயாரிப்பில் அடைந்த தோல்வி, குடும்ப வறுமை ஆகியவற்றை விவரித்த விக்ராந்த், "தன் மகனை ஒரு நல்ல கிரிக்கெட்டராக ஆக்க விரும்புகிறேன்” என்று சொன்னது நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது. ஆனால் கூடவே இன்னொன்றும் தோன்றியது. தான் இழந்த கனவுகளை பிள்ளைகளின் மேல் அப்படியே சுமத்தாமல் அவர்களின் தனித்தன்மை என்ன என்பதையும் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் மகனின் கல்விக்காக மனோரமா செய்யும் தியாகம் தொடர்பான காட்சியை நினைவுகூர்ந்தார் அர்ஜுன்.

நந்தாவின் கையில் அடிபட்டிருப்பதை விசாரித்த அர்ஜுன், ‘போட்டிகளில் விபத்து நேராமல் பார்த்துக் கொள்வதும் ஸ்ட்ராட்டஜியின் ஒரு பகுதி’ என்று சொன்னது அருமையான விஷயம்.
சர்வைவர் 42
சர்வைவர் 42

“ஓகே. காடர்களில் அதிகமாக உள்ளதால் ஒருவர் வெளியேற வேண்டும்" என்று அர்ஜுன் சொன்னதும் ‘மூட்டு வலியால்’ அவதிப்பட்ட அம்ஜத் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். ஆட்டத்தின் விதிமுறைகள் விளக்கப்பட்டன. வழக்கம்போல் சர்வைவர் ஃபார்மட்டில் இருக்கும் அதே பாணிதான். சில தடைகளைத் தாண்டிச் சென்று திரும்பி, நிதானமாக புதிரை அவிழ்க்கவேண்டிய அதே விஷயம்.

மரப்பாலத்தைக் கடந்து ஒரு படகை அடைய வேண்டும். இங்கு ஒருவர் நின்று விடுவார். (நந்தாவிற்காக ஏற்படுத்தப்பட்ட விதியா?!). மற்றவர்கள் மேலும் சில தடைகளைத் தாண்டிச் சென்று நீரில் மிதக்கும் தொட்டிகளின் மீது கால் வைத்துக் கடந்து நீரில் குதித்து நீச்சல் அடித்துச் சென்று கடலில் மிதக்கும் குச்சியை அவிழ்த்து எடுத்து வர வேண்டும். இப்படி ஐந்து நபர்களும் எடுத்து வரும் குச்சியை வைத்து கடைசியில் இருப்பவர், ஒரு பெரிய கம்பாக மாற்றி ஆணிகளில் தொங்கும் மூன்று வளையங்களை எடுத்து இன்னொரு வளையத்தில் மாட்ட வேண்டும். இதை முதலில் செய்து முடிக்கும் அணி வெற்றியாளர். இதுதான் ஃபார்மட்.

சர்வைவர் 42
சர்வைவர் 42

“வேடர்களுக்கு ஒரு அட்வான்டேஜ் இருக்கு. என்னன்னு பார்த்துடலாமா?” என்று கேட்டார் அர்ஜூன். ஒரு நகைச்சுவைக் காட்சியில், சாலையில் செல்லும் ஒருவரை அழைத்து ஒரு தாளைக் கொடுப்பார் சுந்தர்ராஜன். அவர் அந்த தாளை வாங்கி படிக்க ஆரம்பிக்கும் போது ‘அதுல ஒண்ணுமில்ல... கீழ போட்ரு’ என்பார். இந்த அட்வான்டேஜூம் அப்படித்தான் இருந்தது. போட்டி துவங்கி இருபது நொடிகள் கழித்துதான் காடர்கள் புறப்பட முடியுமாம். அதாவது வேடர்களுக்கு இருபது நொடிகள் கூடுதல் நேரம் கிடைக்கும். (இதுக்கா... மரமெல்லாம் ஏற வெச்சீங்க?!).

போட்டி ஆரம்பித்தது. ஆரம்பக் கட்ட தடைகளைத் தாண்டிச் சென்று விட்டாலும் நீரில் மிதக்கும் தொட்டிகளின் மீது கால் வைத்து சென்றதுதான் போட்டியாளர்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டது. ஆரம்பத் தடைகளை வேடர்கள் ஒரு மாதிரியாக தாண்டிவிட்டாலும் காடர்கள் அதற்கே மிகவும் சிரமப்பட்டார்கள். குறிப்பாக சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன் ஆன உமாபதி கூட இந்த ஏரியாவில் சிரமப்பட்டது ஆச்சர்யம்.

சர்வைவர் 42
சர்வைவர் 42

நீரில் மிதக்கும் தொட்டியை தாண்டும் பகுதியில் முதல் தொட்டியில் கால் வைத்து தாண்டி அடுத்த தொட்டியில் கால் வைக்கும்போது ஏறத்தாழ தடுமாறி விழப் போய் எப்படியோ சமாளித்துக் கொண்டார் இனிகோ. பிறகு நீரில் குதித்து குச்சியை எடுத்து வந்தார். ஆனால் இனிகோ செய்ததை வேறு எந்தப் போட்டியாளருமே எளிதில் செய்ய முடியவில்லை. இரு அணிகளுமே ததிங்கினத்தோம் போட்டன. ஐஸ்வர்யா கூட பலமுறை தோற்று நீரில் விழுந்தார். நாராயணன் மிகவும் சிரமப்பட்டார். காடர்கள் அணியில் லட்சுமியும் லேடி காஷூம் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள். தொட்டியின் மீது கால் வைத்ததுமே வழுக்கி நீரில் விழுந்தார்கள்.

நீரில் மிதக்கும் தொட்டியை தாண்டிச் செல்வதே பெரும்பாடு என்னும்போது குச்சியை எடுத்து திரும்பும் போதும் அப்படியே வர வேண்டுமாம். செல்லும்போதும் சரி, திரும்பும்போதும் சரி, கீழே விழுந்து சரணுக்கு நல்ல அடி ஏற்பட்டது. ஐஸ்வர்யா மிகவும் தடுமாறுவதைப் பார்த்த சரண், தொட்டியை காலால் அழுத்திப் பிடித்துக் கொள்ள “ஃபவுல்... ஃபவுல்” என்று கத்தினார் லட்சுமி. இதன் பின்னர்தான் அர்ஜுன் சுதாரித்துக் கொண்டு ஃபவுல் என்று தானும் கத்தினார். அர்ஜுனின் தமிழ் உச்சரிப்பு அத்தனை துல்லியமாக இருக்காது. என்றாலும் அத்தனை மோசமும் அல்ல. ஆனால் அவர் 'ஃபவுலு… ஃபவுலு...’ என்று ‘லு’வை அழுத்திக் கத்தியதைக் கேட்க விநோதமாக இருந்தது.

சர்வைவர் 42
சர்வைவர் 42

இந்தப் பகுதியைக் கடப்பதற்காக போட்டியாளர்கள் மிகவும் சிரமப்பட்டதால், ‘பொழுது சாய்ந்து விடுமே’ என்று கவலைப்பட்ட அர்ஜுன் விதிமுறையில் ஒரு தளர்வைக் கொண்டு வந்தார். அதன்படி தொட்டியை யாராவது அழுத்திப் பிடித்துக் கொள்ளலாம். ('இதத்தானடா நான் முதல்லயே பண்ணேன்’ என்பது சரணின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்!). இந்த தளர்வு அறிவித்தும்கூட லட்சுமி மற்றும் லேடி காஷ் மிகவும் தடுமாறினார்கள். இது போன்ற போட்டிகளில் .ஃபிட்னெஸ் இல்லாதவர்கள் கலந்து கொண்டால் எத்தனை சிரமம் என்பதை லட்சுமி, நாராயணன், லேடி காஷ் போன்றவர்கள் நிரூபித்தார்கள்.

நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நாராயணனை தானே சென்று அழைத்து வந்தார் ஐஸ்வர்யா. லட்சுமிக்கு உதவி செய்த லேடி காஷ், பின்னால் தனியாக மாட்டிக் கொண்டு தவித்ததால், தான் இறங்கி அவரை அழைத்து வந்தார் உமாபதி.

சர்வைவர் 42
சர்வைவர் 42

ஒருவழியாக வேடர்கள் அணியில் அனைவரும் குச்சியோடு திரும்பி அதை நந்தாவிடம் ஒப்படைத்தார்கள். அவர் அனைத்துக் குச்சிகளையும் இணைத்து பெரிய கம்பு போல் ஆக்கி, வளையத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அவர் நீண்ட நேரம் படகில் ஓய்வில் இருந்ததால் அவர் இதற்கு தேர்வானது சரி. ஆனால் கையில் அடிபட்டிருந்ததால் அவரால் இதைச் செய்ய முடியுமா என்கிற சந்தேகம் எழுந்தது. மாறாக இனிகோ வந்திருக்கலாம் என்று தோன்றியது.

ஆனாலும் அசாத்தியமான நம்பிக்கையுடன் குச்சிகளை இணைத்துக் கொண்டிருந்தார் நந்தா. ‘டைம் எடுத்து செய்தாலும் பரவாயில்லை. நடுவில் அது கழன்று கொள்ளக்கூடாது’ என்பதால் பொறுமையாக கட்டிக் கொண்டிருந்தார்.

நீரில் குதித்து குச்சி எடுக்கச் சென்ற லேடி காஷால் நீச்சல் அடிக்க முடியவில்லை. அவர் மிகவும் திணறவே ‘ரெஸ்க்யூ டீம்’ வந்து அவரைக் காப்பாற்றியது. ஒரு விளையாட்டு வீரருக்கு ‘ஸ்டாமினா’ எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்தின. ஒரு நிலையில் அதிக சக்தியை செலவழித்துவிட்டால் பிறகு இவர்கள் மிகவும் சோர்ந்து விடுகிறார்கள்.
சர்வைவர் 42
சர்வைவர் 42

லேடி காஷ் திரும்பி வருவதற்குள் வனேசா தன்னிடமிருந்த குச்சிகளைக் கட்டத் துவங்கி விட்டதால் “Foul. They are cheating sir” என்று கத்தினார் ஐஸ்வர்யா. “என்னா இவ... ஓவரா குதிக்கறா. லேடி காஷுக்கு உடம்பு முடியலைதானே?” என்று பிறகு புலம்பினார் வனேசா. லேடி காஷ் இல்லாததால் ஒரு குச்சி குறைவாக இருக்கும். அதை வைத்துதான் காடர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். வேடர்கள் முன்னணியில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் என்னவாகுமோ என்கிற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வனேசாவால் குச்சிகளை இணைத்து அதை நீண்ட கம்பாக மாற்ற முடியவில்லை. மிகவும் திணறிக் கொண்டிருந்தார். எனவே வேடர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தெரிந்தது.

குச்சிகளை இணைத்து கம்பாக மாற்றிவிட்டாலும் அது நேராக இல்லாமல் வளைந்து வளைந்து இருந்ததால் வளையத்தை நந்தாவால் எடுக்க முடியவில்லை. எனவே மறுபடியும் கீழே வைத்து சரியாக்கி பிறகு வளையத்தை எடுக்க முயன்றதில் முதல் வெற்றி கிடைத்தது. சில பல தடுமாற்றங்களுக்குப் பிறகு மூன்று வளையங்களையும் நந்தா எடுத்து மாட்டினார். அதுவரை மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்த வேடர்கள் மிகவும் உற்சாகமானார்கள். ஐஸ்வர்யாவும் சரணும் ஓடி வந்து நந்தாவின் இடுப்பில் ஏறி அமர்ந்தார்கள்.

“வனேசாவிற்கு பதில் நான் போயிருக்கணும்” என்று அங்கலாய்த்துக் கொண்டார் அம்ஜத். வேடர்கள் அணித்தலைவரான சரணை அழைத்து வெற்றி வாளைத் தந்தார் அர்ஜூன். தோற்றுப் போன காடர்கள் ‘டிரைபல் பஞ்சாயத்தில்’ அர்ஜுனை சந்திக்க வேண்டும். லட்சுமியிடம் ‘இம்யூனிட்டி ஐடல்’ இருப்பது ஒரு சாதகமான விஷயம்.

சர்வைவர் 42
சர்வைவர் 42
‘மூன்றாம் உலகம்’ காட்டப்பட்டது. ‘ஆமால்ல... இங்க ரெண்டு பாவப்பட்ட ஜீவன்கள் இருக்குல்ல’ என்பதே நமக்கும் அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

விஜிக்கும் காயத்ரிக்கும் ஒரு டாஸ்க் தரப்பட்டது. அது சந்தானத்தின காமெடிக் காட்சி ஒன்றை நினைவுப்படுத்தியது. "டேய் மண்டகசாயம்.. .நீ என்ன பண்றே. குடோன்ல இருக்கிற இந்ப்த பருத்தி மூட்டையைலெ்லாம் தூக்கிக் கொண்டு இன்னொரு இடத்துல போடு. டேய். நீ என்ன பண்றே. அதையெல்லாம் கொண்டு வந்து இங்க போடு” என்று தன் வேலைக்காரர்களிடம் உத்தரவிடுவார் சந்தானம்.

சர்வைவர் 42
சர்வைவர் 42

இவர்களுக்கு தரப்பட்ட டாஸ்க்கும் அது போலவே இருந்தது. ஓரிடத்தில் இருக்கும் 50 மரக்கட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்து இன்னொரு இடத்தில் போட வேண்டும். பிறகு கோடரி இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் பிறகு 50 கட்டைகளையும் இரண்டு துண்டாக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்த இடத்தில் அலைகள் வந்து விடுமாம். அதற்குள் இதை அவர்கள் செய்தாக வேண்டும்.

“மூன்றாம் உலகத்தின் ஓனர்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு அந்த இடத்தில் நீண்ட காலமாக வாழும் காயத்ரிக்கு ஒரு கட்டத்தில் சலிப்பும் எரிச்சலும் ஏற்பட்டதில் நியாயமுள்ளது. இருவரும் கட்டைகளைக் கைகளினால் தூக்கி வந்து பெரும் சிரமத்திற்குப் பிறகு இன்னொரு இடத்தில் குவித்தார்கள். இதற்கே அவர்கள் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ஆனால் ‘இந்த வேலையே பரவாயில்லை’ என்பது போல் மரத்துண்டுகளை கோடரியால் வெட்டுவது பெரும் சிரமமாக இருந்தது. சலிப்பு, உத்வேகம், ஊக்கம் போன்றவற்றிற்குப் பிறகு ஒருவழியாக இதைச் செய்து முடித்தார்கள்.

சர்வைவர் 42
சர்வைவர் 42

இவர்களுக்கான வெகுமதியாக பர்கர், ஜுஸ் போன்றவை காத்திருந்தன. இருவரும் ஆவலாக அதை எடுத்து உண்டார்கள். அடுத்தவன் உழைப்பில், பணத்தில் உண்பதை விடவும் தன்னுடைய கடுமையான சொந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் உணவை சாப்பிடும் சுகம் இருக்கிறதே! அந்த பரவச உணர்வு இருவரின் முகங்களிலும் தெரிந்தது.

காடர்கள் அணியில் இருந்து யார் வெளியேறுவார்கள்? இம்யூனிட்டி ஐடல் அவர்களைக் காப்பாற்றுமா?

பார்த்துடுவோம்.