Published:Updated:

"நான் தோற்கணும்னு சில போட்டியாளர்கள் பணம் செலவு செஞ்சாங்க!" - சீக்ரெட் சொல்லும் `சர்வைவர்’ விஜி

’சர்வைவர்’ விஜி

நிகழ்ச்சியில சில போட்டியாளர்கள் மணிக்கணக்குல அந்த க்ரூவுடன் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் நடந்திச்சு’’

Published:Updated:

"நான் தோற்கணும்னு சில போட்டியாளர்கள் பணம் செலவு செஞ்சாங்க!" - சீக்ரெட் சொல்லும் `சர்வைவர்’ விஜி

நிகழ்ச்சியில சில போட்டியாளர்கள் மணிக்கணக்குல அந்த க்ரூவுடன் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் நடந்திச்சு’’

’சர்வைவர்’ விஜி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் புது வீட்டில் குடியேறி இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

‘புது வீடு, பரிசா ஒரு கோடி.. கலக்குங்க’ என்றதும், ‘ஏங்க அந்தப் பணம் இன்னும் கைக்கு வந்து சேரவே இல்லை. அந்தக் காசுலதான் வீடு வாங்கியிருக்கேன்’னு கிளப்பி விடாதீங்க’ எனச் சிரித்தவரிடம் பேசினேன்.

``உண்மையைச் சொல்லுங்க, சர்வைவரும் ஸ்கிரிப்ட்தானே? ஷோவுல இருந்தப்ப அங்க இருந்து உங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி பேசுனீங்கன்னு சொல்றாங்களே?"

‘எங்களுடன் அந்தத் தீவுக்கு வந்த க்ரூவுல இருந்து சிலர் எங்க கூட தொடர்புல இருப்பாங்க. அது நிஜம்தான். எங்களுக்கு ஏதாச்சும் அவசரத் தேவைன்னா அவங்க மூலமாத் தொடர்பு கொள்வோம். ஆனா நான் அவங்க யார் மூலமாகவும் ஃபோன் செய்து பேசலை. எப்ப எப்படிக் கேட்டாலும் இதே பதில்தான் சொல்வேன். ஆனா நிகழ்ச்சியில சில போட்டியாளர்கள் மணிக்கணக்குல அந்த க்ரூவுடன் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் நடந்திச்சு’’

ஃபிஸிகல் டாஸ்க் நிறைந்த ஒரு கேம் ஷோ, அதுவும் தமிழில் முதன்முறை ஒரு பெண் நீங்க ஜெயித்திருக்கீங்க. ஆனா வெளியில் உங்களைப் பத்தி நிறைய நெகடிவ் கமெண்டுகள். ஏன்?

vijayalaxmi
vijayalaxmi

விரிவான பேட்டியைக் காண

சிலர் திட்டமிட்டு ஒரு வேலையைப் பண்றாங்கன்னா ஏன்னு நீங்க அவங்களைத்தான் கேக்கணும். இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நல்லா போயிட்டிருந்த ஷோவுல ஒருகட்டத்துக்குப் பிறகு என்னைப் பத்தி நிறைய நெக்டிவ் கமெண்ட் வரத் தொடங்கினதைப் பார்த்து எனக்கே அதிர்ச்சிதான். ஆனா அந்தக் கமெண்டுகள்லாம் சில போட்டியாளர்கள் பணம் கொடுத்து எனக்கு எதிரா வர வச்சது..