Published:Updated:

"இந்த விஷயங்களெல்லாம் அவர் ஷோவுல சொல்லுவாருன்னு எதிர்பார்க்கல!"- `சர்வைவர்' அம்ஜத் மனைவி ரஷிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சர்வைவர் அம்ஜத்
சர்வைவர் அம்ஜத் ( Screenshot grabbed from Zee5 )

"இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள். இதுவரை எல்லா பிறந்தநாளிலும் எங்கக் கூடவேதான் இருப்பார். சில சமயம் ஷூட்டிங்கில் இருந்தால்கூட வீடியோ கால் மூலமாவாது எங்ககிட்ட பேசிடுவாரு. ஆனா, இப்ப..."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சர்வைவர்' ரியாலிட்டி ஷோ ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் போட்டி, வாக்குவாதம், பொறாமை என நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்திருக்கிறது. நேற்றைய எபிசோடில் வேடர்கள் அணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், அம்ஜத்.

இந்த நிகழ்ச்சியை வீட்டில் பதற்றத்தோடும், எமோஷனலுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார், அம்ஜத்தின் மனைவி ரஷிதா. அவரிடம் பேசினோம்.
அம்ஜத்தின் மனைவி ரஷிதா, குழந்தை ஜாரா
அம்ஜத்தின் மனைவி ரஷிதா, குழந்தை ஜாரா

"இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள். இதுவரை எல்லா பிறந்தநாளிலும் எங்கக் கூடவேதான் இருப்பார். சில சமயம் ஷூட்டிங்கில் இருந்தால்கூட வீடியோ கால் மூலமாவாது எங்ககிட்ட பேசிடுவாரு. இந்தப் பிறந்தநாளுக்கு அவரை பக்கத்துல இருந்து பார்க்க முடியலைங்குற ஃபீலிங் இருந்தாலும் டிவியில் பார்த்திடலாம் என்கிற விஷயம் கொஞ்சம் ஆறுதல் கொடுக்குது.

எங்க பொண்ணு ஜாராவுக்கு இப்போ நான்கு வயசாகுது. ஜாராவும், அவங்க அப்பாவும் பயங்கர குளோஸ். இரண்டு பேரும் எப்பவும் சேர்ந்தேதான் இருப்பாங்க. அவ பயங்கர அப்பா செல்லம். அவர் இந்த ஷோவில் கலந்துக்கணும்னு ஆசைப்பட்டார். ஆனா, எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. அவர் ஆசைக்காக சம்மதிச்சேன்.

அம்ஜத்தின் மனைவி ரஷிதா, குழந்தை ஜாரா
அம்ஜத்தின் மனைவி ரஷிதா, குழந்தை ஜாரா

இப்போ எனக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் ஜாராவை பார்த்துக்க முடியுது. நானும் வேலைக்கு போக வேண்டியிருந்திருந்தால் ஜாரா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அவர் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் ஜாராவை மிஸ் பண்றதா சொல்லி அழுதிருப்பார். அந்த எபிசோட் பார்த்துட்டு ஜாரா ரொம்பவே அப்செட் ஆகிட்டா. மூன்று நாள் அவளுக்குப் பயங்கர காய்ச்சல். வீட்ல எல்லோரும் ரொம்ப பயந்துட்டோம். அவ அவங்க அப்பாவை ரொம்ப தேடுறான்னு எங்களுக்குப் புரிஞ்சது. அதற்கப்பறம் இருந்து டிவியில் அவரை பார்த்தால் அப்பா ஏன் அங்கே தனியா இருக்காங்க... நீ ஏன்மா இல்லை... நான் ஏன் இல்லைன்னு கேட்க ஆரம்பிச்சிட்டா. அவளால அந்தச் சூழலை புரிஞ்சுக்க முடியலை. அவளுக்காகவே நாங்க டிவியில் நிகழ்ச்சி பார்க்க மாட்டோம். மொபைலில்தான் நான் பார்த்துட்டு இருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களுடைய திருமணம் குறித்தெல்லாம் அவர் நிகழ்ச்சியில் பேசுவார்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. எங்களுடையது அரெஞ்சுடு மேரேஜ். இரண்டு பேர் வீட்டிலும் ஒருத்தருக்கொருத்தர் தெரியும். அவர் என்னை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. அன்னைக்குதான் நாங்க இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டோம். அவ்வளவு ஏன், என்னுடைய மாமியாரே என்னை அன்னைக்குதான் நேரில் பார்க்குறாங்க. கடகடன்னு நிச்சயமும் நடந்திடுச்சு. என்னுடைய அம்மாதான் மாப்பிள்ளைன்னு இவர் மேல ரொம்ப பிரியமா இருப்பாங்க. எங்க திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கப் போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. பத்து நாளைக்கு மேல எங்க அம்மா ஐசியூவில் இருந்தாங்க. அந்தச் சமயம் நான் ரொம்பவே உடைஞ்சு போயிருந்தேன். அவர்தான் என்னை பார்த்துக்கிட்டார். ஒருகட்டத்துக்கு மேல அம்மா இறந்துட்டாங்க. சொந்தக்காரங்க எல்லோரும் திருமணத்தைத் தள்ளி போட வேண்டாம்னு சொன்னாங்க. அவர் ரிசப்ஷன் ரொம்ப பெருசா நடத்தணும்னு பிளான் பண்ணியிருந்தார். ஆனா, இந்த விஷயங்களால் எங்களுக்கு ரிசப்ஷன் எதுவும் நடக்கலை. என்ன டிரெஸ் போட்டுகிட்டேன், எப்படித் திருமணத்தில் நான் இருந்தேன்னு எதுவுமே எனக்கு நினைவில் இல்லை.

சர்வைவர் அம்ஜத், தன் அணியுடன்
சர்வைவர் அம்ஜத், தன் அணியுடன்

திருமணத்துக்கு பிறகு ரொம்ப மனஅழுத்தத்தில் இருந்தேன். அவர்தான் என்னை தேற்றினார். அவர் சொன்னதாலதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கொஞ்ச கொஞ்சமா அந்த வலியில் இருந்து மீண்டு வந்தேன். அந்த விஷயங்கள் எல்லாம் 'சர்வைவர்' ஷோவில் அவர் சொல்லும்போது ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. என் அப்பா உடைஞ்சு அழுதுட்டார்..." என்றவர் ஒரு நொடி அமைதிக்கு பின் தொடர்ந்தார்.

சர்வைவர் - 10 | எலிமினேஷன் பயத்தில் பார்வதியின் ஒப்பாரியும், புலம்பல்களும்… ‘மண்ட பத்திரம்' பாய்ஸ்!

"அவர் தலைவரானது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. நாங்க ஒரு ஜூஸ் கடை வைச்சிருக்கோம். எங்க கடையில் வேலை பார்க்கிறவங்க புதுசா எந்த டிஷ் செய்து காட்டினாலும் சூப்பரா இருக்குன்னு பாராட்டுவார். யாரையும் எந்தக் குறையும் சொல்லி மட்டம் தட்ட மாட்டார். அவர்கிட்ட நல்லதொரு தலைமை பண்பு இருக்கு. இந்த வாரத்தில் அதை நீங்க நிச்சயம் பார்க்கலாம். எல்லோருடைய கருத்தையும் அவர் கேட்டு முடிவெடுப்பார். அவருக்குச் சட்டுனு கோபம் வந்திடும். அவர் போகும்போது கோபத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோங்கன்னு சொல்லி அனுப்பினேன். வீட்டுக்கு வரும்போது எந்த மனநிலையில் வருவாரோன்னு இப்போவே யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

சர்வைவர் அம்ஜத், தன் அணியுடன்
சர்வைவர் அம்ஜத், தன் அணியுடன்

அவர் அந்த ஷோவில் நிச்சயம் ஜெயிப்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. எப்போ பார்த்தாலும் வீட்ல இருக்கிற மாதிரி லுங்கியிலேயே இருக்கார். நிகழ்ச்சிக்கு போகும்போதுகூட வேற டிரெஸ் எடுத்து வைச்சிக்க சொன்னேன். ஆனா, அவர் இதுதான் கம்பர்டபுளாக இருக்கும்னு சொல்லிட்டார். இவர் ஒருத்தர் மட்டும்தான் லுங்கியில் சுத்திகிட்டு இருக்கார்" எனப் புன்னகைக்கிறார், ரஷிதா.

ஜாராவுடைய அப்பாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு