Published:Updated:

சர்வைவர் - 24 | சர்வைவர் டீமுக்கும், பார்வதிக்கும் என்னப்பா பஞ்சாயத்து?!

சர்வைவர் - 24 |

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 24-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 24 | சர்வைவர் டீமுக்கும், பார்வதிக்கும் என்னப்பா பஞ்சாயத்து?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 24-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:
சர்வைவர் - 24 |

இரண்டு அணிகளுக்கும் தலைவர் போட்டி நடந்ததுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். வேடர்கள் அணிக்கு ஐஸ்வர்யாவும் காடர்கள் அணிக்கு விக்ராந்த்தும் தலைவர் ஆனார்கள். இதற்காக நடந்த போட்டி சுவாரசியமாகவும் பார்க்க ஜாலியாகவும் இருந்தது. ‘கைவிடப்பட்ட சத்தியங்கள்’ என்றொரு டாஸ்க். ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்த ‘சத்திய சோதனை’ மொமன்ட்டைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பார்வதி காட்டப்படாத ஒவ்வொரு எபிசோடும், முழுமையற்ற எபிசோட்தான். நேற்று தலைவியைக் காண முடியாத ஏக்கத்துடன்தான் உறங்கச் செல்ல வேண்டியதாக இருந்தது.

சர்வைவர் 24-ம் நாளில் நடந்தது என்ன?

சர்வைவர் - 24 |
சர்வைவர் - 24 |

‘யாரைத் தலைவர் போட்டிக்கு வேட்பாளராக அனுப்பலாம்?” என்பது தொடர்பான மும்முரான விவாதம் வேடர்கள் அணியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘’இனிகோ... இப்போதுதான் வந்திருக்கிறார்... அவர் வேண்டாம்’’ என்று முடிவு செய்தது ஒருவகையில் ஓகே. ‘நாராயணன் முடிவுகளை சரியாக எடுக்கக் கூடியவர்’ என்று அவருக்கு ஆதரவளித்தார் நந்தா. “இல்லை... ஐஸ்வர்யாவின் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும்” என்று அவருக்கு ஆச்சரியமாக சப்போர்ட் செய்தார் லட்சுமிபிரியா. (பார்றா!).

‘Physical task என்று வந்தால் ஐஸ்வர்யா எப்போதும் துள்ளிக் குதித்துக் கொண்டு முன்னால் ஓடுகிறார்... அப்ப நாங்கள்லாம் என்ன தக்காளி தொக்கா?’ என்கிற லட்சுமிபிரியாவின் மனத்தாங்கல் இன்னமும் தீரவில்லை. எனவே அது தொடர்பான குடுமிப்பிடிச் சண்டை தொடர்ந்தது.

இந்த விஷயத்தில் லட்சுமிபிரியாவிடம் உள்ள நற்குணம் என்னவென்றால், ஒரு மனத்தாங்கல் தீயாகப் பரவி பெரிய விரோதமாக மாறுவதற்குள் அதை அணியுடனும் சம்பந்தப்பட்ட நபருடன் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இது மட்டுமல்லாமல், ‘நான் எதற்காக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதன் context, நோக்கம் என்ன?’ என்பதையெல்லாம் எதிராளியிடம் சிறப்பாக கடத்தி விடும் communication skill லட்சுமிபிரியாவிடம் கணிசமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐஸ்வர்யாவை தனியாக ஓரங்கட்டிய LP, “இம்யூனிட்டி சவாலின் போது முதல் சுற்றுக்கு யார் போவது என்பதை நாம் கூடி ஆலோசித்தோம் சரியா..? ஆனால்... இரண்டாம் சுற்றில் அந்த கலந்துரையாடல் நிகழவில்லை. போட்டியின் போது எது சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை. ‘நான் போகிறேன்’ என்று துடித்துக் கொண்டு நிற்கிறாய். எனக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்பதற்காக நான் இதைப் பேசவில்லை. எந்தவொரு விஷயத்திலும் அனைவரின் பங்களிப்பும் முடிவும் இருக்க வேண்டாமா?” என்று தனது தரப்பை திறமையாக முன்வைத்தார் லட்சுமி.

தன் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்காக அம்ஜத்தையும் அழைத்துக் கொண்டார் லட்சுமி. லட்சுமி சொல்வதில் ஆயிரம் நியாயம் இருக்கலாம். ஆனால் இந்த குறிப்பிட்ட டாஸ்க்கில் ஐஸ்வர்யா சென்றதால்தான் வேடர்கள் அணி வெற்றியின் சாத்தியம் அதிகமாக ஆனது. ஒருவேளை லட்சுமி சென்றிருந்தால் முடிவுகள் மாறியிருக்கும். அவர்கள் எலிமினேஷனை சந்தித்திருக்கக்கூடும். இது லட்சுமிக்கும் உள்ளூற நன்கு தெரியும். ஆனால் இது ‘சர்வைவர்’ ஆட்டம் ஆயிற்றே?! ஒவ்வொருவரும் தன்னுடைய இருப்புக்காக போராடித்தான் ஆக வேண்டும். நியாய தர்மம் பார்த்தால் வேட்டையாட முடியாது.

சர்வைவர் - 24 |
சர்வைவர் - 24 |

“அந்தச் சமயத்துல நான் போறேன்னு சொல்றப்ப யாருமே ஆட்சேபிக்கலையே?” என்கிற பாட்டையே ஐஸ்வர்யா தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். அணித்தலைவர் நந்தாதான் இந்த விஷயத்தை சரியாக பேசி ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.

“ஆமாம்... நான் லட்சுமியிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்” என்று ஒப்புக் கொண்டார் நந்தா. ‘இனியாவது எந்தவொரு முடிவையும் அணியில் உள்ள அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும்’’ என்கிற முடிவுடன் வேடர்களின் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்காலிகமாக.

இந்த வாரத்தின் தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதி ‘Fearless’. அதாவது ‘பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டியது’. ‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று இரு அணிகளையும் அழைத்தார் அர்ஜூன். சட்டுப்புட்டென்று போட்டியை தொடங்குவதற்கு இது என்ன ஆங்கில நிகழ்ச்சியா? தமிழ் மசாலாக்களை கலக்க வேண்டாமா? எனவே ஒவ்வொரு அணிக்குள்ளும் இருக்கும் குழப்பத்தை பொதுவில் கேட்டு நெளிய வைக்க ஆரம்பித்தார்.

“என்ன ஐஸ்வர்யா கண்ணு சிவந்திருக்கு. கோபமா அல்லது அழுகையா?” என்று போட்டு வாங்க முயன்றார் அர்ஜுன். ‘சண்டையா... எங்க எங்க... நாங்க பார்க்கலையே?’ என்று வேடர்கள் அணி மழுப்ப முயன்றாலும் அர்ஜூன் விடாமல் துளைத்தெடுத்தால் பிரச்னை சபைக்கு நடுவில் வந்தது.

‘‘பறக்கும் ராசாளியே நில்லு... இங்கு நீ வேகமா…நான் வேகமா சொல்லு... நீ முந்தியா நான் முந்தியா… பார்ப்போம்…’’ என்கிற பாடல் வரிகள் போல தன்னை முந்திச் சென்று சவாலில் பங்குபெற்ற ஐஸ்வர்யா மீது லட்சுமிக்கு இருந்த விமர்சனங்கள் வெளியே வந்தன. “எனக்கு கோபம் வந்தா அழுதுடுவேன் சார்...” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 24 |
சர்வைவர் - 24 |

“எதிர் டீம்ல ராம் எலிமினேட் ஆயிட்டார்... தெரியும் இல்லையா?” என்று அடுத்த அல்வா பாத்திரத்தைக் கிளற ஆரம்பித்தார் அர்ஜூன். “இது இத்துப்போன பழைய தகவல் சார்... இப்படித்தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியும்” என்பது மாதிரியான எக்ஸ்பிரஷனை வேடர்கள் அணி தந்தது.

“ராமுக்கு நீங்க ஏதோ டிப்ஸ் கொடுத்தீங்களாமே?” என்று நந்தாவை நோக்கி அர்ஜூன் கேட்க “பார்த்து தம்பி... உனக்கு நேரம் சரியில்ல. கட்டம் கட்டியிருக்காங்க. அவங்களோட நல்லாப் பழகுனு சொன்னேன்” என்பது போல் நந்தா பதில் சொன்னார். இதைக் கேட்டதும் காடர்கள் அணியின் முகங்களில் அசட்டுச் சிரிப்பு வழிந்தது.

“காடர்கள் ராமை இன்சல்ட் பண்ணி உங்க முன்னாடி பேசினாங்களா..? ஏன்னா... அவர் இதை ஒரு புகாரா ட்ரைபல்ல சொன்னார்” என்று அடுத்த அம்பை எய்தார் அர்ஜூன். “ராமின் நடவடிக்கைகள் அப்படி அவங்களை பேச வைத்திருக்கலாம்” என்று ராமுக்கு எதிரான பட்டாசை போட்டு உடைத்தார் நந்தா.

அடுத்ததாக இனிகோ பக்கம் வண்டியைத் திருப்பினார் அர்ஜூன். “நீங்க ராம் பத்தி பேசும் போது ‘இக்கு’ வெச்சி பேசினீங்களாமே” என்று கேட்க “அந்த அணியில் நான் சற்று நேரம் இருந்த போது மத்த விஷயங்கள் ஓகே... ஆனா ராம் மேட்டர்ல மட்டும் ஒரு ‘இக்கு’ இருந்தது என்றுதான் சொன்னேன்” என்று இனிகோ பதில் அளித்தார். ஆனால் ட்ரைபல் பஞ்சாயத்தில் இதை காடர்கள் அணி தலைகீழாக மாற்றிச் சொன்னது. “உன்னைப் பத்திதான் இனிகோ சொன்னார்” என்று அப்போது சொன்னவர் விக்ராந்த்.

‘வேடர்களை கிண்டியது போதும். அடுத்தது காடர்கள் பக்கம் போவோம்’ என்று முடிவு செய்த அர்ஜூன் “இப்பு புதுசா வந்த போட்டியாளர் மேல உங்களுக்கு நிச்சயம் கடுப்பு இருக்குமே?” என்று எடுத்துக் கொடுக்க “ஆமாம் சார்... அவங்க வரும் போது பளபளன்னு ஃப்ரெஷ்ஷா இருந்தாங்க. பார்க்கவே கொஞ்சம் காண்டாச்சு. ஆனா, வனேசா எங்க கூட நல்லாப் பழகிட்டாங்க... ராம் மாதிரி இல்ல” என்றார் விஜயலட்சுமி.

சர்வைவர் - 24 |
சர்வைவர் - 24 |

இதே விஷயத்தைத்தான் லேடி காஷும் வழிமொழிந்தார். ஆனால் அவர் பார்வையில் ஒரு வித்தியாசம் இருந்தது. “எனக்கும் கொஞ்சம் எரிச்சல்தான். ஆனா வனேசா புதுசா வந்ததுல ஒரு disadvantage இருக்கு. எங்க கூட நல்லா ஜெல் ஆக அவங்க ரொம்ப முயற்சி எடுக்கணும். இது அவங்களுக்கு ஒரு சவால்தான்” என்று லேடி காஷ் சொன்னது அருமையான பார்வை. தனக்கு எரிச்சலூட்டும் விஷயத்திலும் சாதகமான அம்சத்தை தேடுவது புத்திசாலித்தனம்.

“என்னை இவங்க ரொம்ப நல்லா பார்த்துக்குறாங்க” என்று விளம்பர மாடல் மாதிரி சிரித்துக கொண்டே சொன்னார் வனேசா. (இன்னமும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுங்க மேடம்!). “சர்வைவர் கேம் இவ்வளவு டஃப்பா இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை” என்று சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்டார் இனிகோ.

தலைவருக்கான போட்டி ஆரம்பித்தது. முதலில் வேடர்கள் அணியிலிருந்து நாராயணனும் ஐஸ்வர்யாவும் வந்தார்கள். Physical task-ல் துடிப்பாக செயல்படும் ஐஸ்வர்யாவின் முன்னால் நாராயணன் சோபிக்க முடியுமா என்கிற சந்தேகம் முதலில் வந்தது. என்றாலும் எப்படியோ சமாளித்தார்.

சர்வைவர் - 24 |
சர்வைவர் - 24 |

நொண்டியாட்டத்தையும் டிக் டாக் டோவையும் (tic tac toe) பிசைந்து வைத்தது போன்று போட்டி அமைந்திருந்தது. சிறிய மணல் மூட்டைகள் இருக்கும். அதை எடுத்துக் கொண்டு ஒரு காலால் நொண்டியடித்துக் கொண்டே ஓடி வந்து சற்று தூரத்தில் இருக்கும் டிக் டாக் டோ பலகையில் போட வேண்டும். பிறகு திரும்பி உயரத்தில் இருக்கும் மணியை அடித்து விட்டு அடுத்த மூட்டையை எடுத்துக் கொண்டு நொண்டிக் கொண்டே வந்து போட வேண்டும்.

உடல்வலிமையும் மூளை வலிமையும் இணைந்த ஜாலியான விளையாட்டாக இது தெரிந்தது. நொண்டிக் கொண்டே ஓடி வரும் அதே சமயத்தில் டிக் டாக் டோ பலகையின் கோணங்களையும் சாமர்த்தியமாக அமைக்க வேண்டும். இந்த நோக்கில் நாராயணன் முதல் சுற்றில் தவற விட்டாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் கற்றுக் கொண்டார். பாயும் புலி போல ஐஸ்வர்யாவின் துடிப்பு அதிகம் இருந்தாலும் மணியடிக்க மறந்தது, காலை நொண்டாமல் ஓடி வந்தது போன்ற விஷயங்களில் தவறு செய்தார். மொத்தம் ஐந்து சுற்றுகள் நடந்த இந்த விளையாட்டில் மூன்றில் வென்று வேடர்களின் அணியின் தலைவர் ஆனார் ஐஸ்வர்யா.

“அண்ணன்லாம் பார்க்க மாட்டேன். ஆட்டம்னு வந்துட்டா நான் ஃபயர் மாதிரி” என்று களத்தில் இறங்கிய சரணால், விக்ராந்த்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால், நாராயணணைப் போலவே டிக் டாக் டோ பலகையின் ஆட்டத்தில் முதலில் சொதப்பினார் விக்ராந்த். பிறகு சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளில் கவனமாக ஆடியதில் வெற்றி பெற்று காடர்கள் அணியின் தலைவர் ஆனார். “அண்ணன் டைவ் அடிக்கறதுல கில்லாடி. கிரிக்கெட்டர் இல்ல..?” என்று தோற்றுப் போனாலும் அண்ணனின் புகழைப் பாடினார் சரண்.

இந்தப் போட்டியின் போது மணல் மூட்டைகளை எந்தக் கட்டத்தில் போடுவது என்பதை அணியின் இதர போட்டியாளர்கள் சொல்லி உதவி செய்தார்கள். இது ஆட்ட விதிக்கு முரணானது. ஒருவரின் வெற்றியில் அவரின் பங்கு மட்டுமே இருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை, இதை அர்ஜூன் ஆட்சேபிக்கவேயில்லை.

சர்வைவர் - 24 |
சர்வைவர் - 24 |

தலைவர் போட்டி முடிந்து அவரவர்களின் தீவுக்குத் திரும்பியதும் அடுத்த டாஸ்க்கை தந்தார்கள். ஒருவர் தன் வாழ்க்கையில் சத்தியம் செய்து விட்டு தவறிய தருணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்.

“படிப்பை விட்டுட்டு கிரிக்கெட் போனேன். அதையும் விட்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு நல்ல நிலைக்கு வந்துடுவேன்னு குடும்பம் கிட்ட வாக்கு கொடுத்தேன். இதுவரைக்கும் எதுவும் சரியா அமையல. ஆனா எப்படியாவது சொன்ன சொல்லை காப்பாத்திடுவேன்” என்று இந்த டாஸ்க்கை தொடங்கி வைத்தார் விக்ராந்த். சிறுவயதில் பணம் திருடி கேமரா வாங்கிய கதையை சொன்னார் லேடி காஷ்.

சமூகவலைத்தளத்தில் தன்னைப் பற்றி பொய்யான அவதூறுகள் வந்திருந்தாலும் அதை வீட்டில் மறைத்து மாடலிங்கை தொடர்ந்தது பற்றி சொன்னார் வனேசா. “இதோ கடைக்கு போயிட்டு வந்துடறேம்மா’ன்னு சொல்லிட்டு சர்வைவர் ஷோவுக்கு ஓடி வந்துட்டேன்... சாரிம்மா” என்றார் உமாபதி.

“கொரானோ டைம்ல ஆன்லைன் கேமுக்கு அடிமையாயிட்டேன். அண்ணனுக்கு தந்த சத்தியத்தை மறந்து விட்டு நேத்து விளையாடிட்டேன்” என்று இனிகோ சொன்ன போது ‘இதெல்லாம் ஒரு வாக்குமூலமாடா?” என்கிற மாதிரியே முகச்சலிப்புடன் அமர்ந்திருந்த லட்சுமிபிரியாவைக் காண வேடிக்கையாக இருந்தது.

“சினிமா வாய்ப்புக்காக கூடவே இருந்த என் நண்பனுக்காக எதையும் செய்யல’’ என்று உருகினார் நந்தா. “எத்தனையோ முறை சத்தியம் செய்தும் குழந்தைகளை இதுவரை வெளிநாடு கூட்டிட்டு போக முடியலை” என்று ரவி சொன்னது உருக்கமாக இருந்தது. நாராயணனும் ஐஸ்வர்யாவும் ‘தங்களுக்குத் தாங்களே சத்தியம் செய்து கொண்டது குறித்து குழப்பமாக எதையோ சொன்னார்கள்.

வேடர்கள் அணியில் ஐஸ்வர்யா தலைவராகி விட்டாலும் ‘தனக்கு எதிராக ஐசு எதையும் செய்ய மாட்டார்’ என்று நம்புகிறார் லட்சுமி. அவரின் எதிர்பார்ப்பு நடக்குமா?

பார்த்துடுவோம்!