Published:Updated:

நான்கு இயக்குநர்கள்... நான்கு கதைகள்... ஒரு சினிமா!

தார்மிக் லீ

வெள்ளித்திரையில் மட்டுமல்லாது நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் போன்ற சின்னத்திரைகளிலும் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்தக் கலாசாரம், ஹாலிவுட்டில் ஏற்கெனவே ஆரம்பித்திருந்தாலும், இந்திய சினிமாவில் இப்போதுதான் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

Gautham Menon - Vetrimaran - Vignesh Shivan - Sudha Kongara
Gautham Menon - Vetrimaran - Vignesh Shivan - Sudha Kongara

பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகிய நால்வரும் இணைந்து, `லஸ்டு ஸ்டோரீஸ்' என்ற படத்தை இயக்கி, நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டிருந்தனர். இதேபோல், தற்போது தமிழிலும் ஒரு படம் வெளியாக இருக்கிறது. ஆந்தாலஜியாக உருவாக இருக்கும் இப்படத்தை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் இயக்க இருக்கின்றனர். இப்படம், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

Netflix
Netflix

தற்போது, அவரவர் படங்களின் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். இந்தப் படத்திற்காக 25 சதவிகித வேலைகளைப் பார்த்தால் போதுமென்பதால், அவரவருக்கு கிடைக்கும் நேரங்களில் பணியாற்ற இருக்கின்றனர்.

வெற்றிமாறன் இயக்கிய `அசுரன்' படம், வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது. கௌதம் மேனன் இயக்கிய `எனை நோக்கிப் பாயும் தோட்டா', வரும் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. சுதா கொங்காராவும் தற்போது `சூரரைப் போற்று' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். விக்னேஷ் சிவனும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் இருக்கிறார். இதையெல்லாம் முடித்த பின்னர், அவரவருக்கான பாகத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.