Published:Updated:

`வாணி ராணி', `செவ்வந்தி' சீரியல்களின் இயக்குநர் ஓ.என்.ரத்னம் மனைவி தற்கொலை - என்ன காரணம்?

வாணி ராணி ஷூட்டில் இயக்குநர் ஓ.என்.ரத்னம் (மைக்குடன்)

ஓ.என். ரத்னத்துக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சி. அவரது மனைவியும் அதே ஊர்தானாம். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

Published:Updated:

`வாணி ராணி', `செவ்வந்தி' சீரியல்களின் இயக்குநர் ஓ.என்.ரத்னம் மனைவி தற்கொலை - என்ன காரணம்?

ஓ.என். ரத்னத்துக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சி. அவரது மனைவியும் அதே ஊர்தானாம். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

வாணி ராணி ஷூட்டில் இயக்குநர் ஓ.என்.ரத்னம் (மைக்குடன்)
சீரியல் இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி இன்று சென்னையில் தற்கொலை செய்து கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகு, வாணி ராணி, செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் என பல ஹிட் சீரியல்களை இயக்கியவர் ஓ.என்.ரத்னம். இவருடைய மனைவி பிரியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

வாணி ராணி
வாணி ராணி

ஓ.என். ரத்னத்துக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சி. இவரது மனைவியும் அதே ஊர்தானாம். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி சுமார் பத்தாண்டுகள் இருக்கும் என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரையும் தாத்தா வீட்டுக்கு பொள்ளாச்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். ரத்னமும் அவரது மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையில் சிறிய வாக்குவாதம் நடந்ததாகத் தெரிகிறது.

பத்து நாள்களுக்கும் மேல் அங்கிருந்த ரத்னத்தின் மகன்கள் இன்று அதிகாலையில்தான் சென்னை திரும்பியிருக்கிறார்கள். பையன்களை அழைத்து வர ரத்னம் இன்று காலை பேருந்து நிலையத்துக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் பிரியா வீட்டில் தற்கொலை செய்து கொண்டாராம்.

ஓ.என்.ரத்னம்
ஓ.என்.ரத்னம்

தற்போது பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ரத்னத்தின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, "ரெண்டு பேரும் காதலிச்ச போது கல்யாணத்துக்கு அவ்வளவு எதிர்ப்பு. பிரியாவின் வீட்டில் கல்யாணத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய போது 'இவரைக் கல்யாணம் செய்ய முடியலைன்னா தற்கொலை செய்துகொள்வேன்'னு சொல்லி அடம்பிடிச்சவங்க பிரியா.

அதனால ஒருகட்டத்துல ரெண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் கிடைக்க கல்யாணம் நடந்தது. அப்படிக் கல்யாணம் செய்துக்கிட்டவங்க வாழ்க்கையில காலம் இப்படியொரு சம்பவம் நடக்கும்ன்னு யாருமே எதிர்பார்க்கலைங்க" என்கிறார்கள் வருத்தத்துடன்.

தற்கொலை தடுப்பு உதவி மைய எண்கள்:

சினேகா ஃபவுண்டேஷன் - 044- 24640050 (24 மணி நேரமும்)

தமிழக அரசு உதவி மைய எண் - 104