Published:Updated:

TV Union Election: வென்ற‌ போஸ் வெங்கட்; தோல்வியடைந்த சோனியா வெங்கட்; வாஷ் அவுட் ஆன இளைஞர் அணி!

போஸ் வெங்கட்

வாக்களித்துவிட்டு வெளியில் வந்த தேவயானி, 'மூணு அணியாப் போட்டியிடறது ஜனநாயகம்தான். ஆனா தேர்தல் முடிஞ்சதும் நீங்க எல்லாரும் ஒற்றுமையா செயல்படணும்' என வேண்டுகோள் விடுத்துச் சென்றார்.

TV Union Election: வென்ற‌ போஸ் வெங்கட்; தோல்வியடைந்த சோனியா வெங்கட்; வாஷ் அவுட் ஆன இளைஞர் அணி!

வாக்களித்துவிட்டு வெளியில் வந்த தேவயானி, 'மூணு அணியாப் போட்டியிடறது ஜனநாயகம்தான். ஆனா தேர்தல் முடிஞ்சதும் நீங்க எல்லாரும் ஒற்றுமையா செயல்படணும்' என வேண்டுகோள் விடுத்துச் சென்றார்.

Published:Updated:
போஸ் வெங்கட்
நேற்று முன் தினம் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளார் ஆகிய முக்கிய மூன்று பதவிகளை சிவன் சீனிவாசன் தலைமையிலான 'வசந்தம் அணி' கைப்பற்ற, துணைத் தலைவர், இணைச் செயலாளர், மற்றும் கணிசமான அளவில் செயற்குழு உறுப்பினர் பதவிகளைப் பிடித்திருக்கிறது, இது வரை நிர்வாகத்தில் இருந்த ரவி வர்மா தலைமையிலான 'உழைக்கும் கரங்கள்' அணி.
TV Union Election
TV Union Election

'கடந்த முறை தேர்தலில் வென்ற ரவி வர்மா நிர்வாகம் நியமித்த தேர்தல் அலுவலரைக் கொண்டு நடத்தப் படும் தேர்தலை ஏற்க மாட்டோம்' என உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றம் செல்ல, நீதிமன்றம் புதிய தேர்தல் அலுவலரை நியமித்து நடத்தப்பட்டது இந்தத் தேர்தல்.

சுமார் 1800 பேர் உறுப்பினராக உள்ள சங்கத் தேர்தல் களத்தில் நிகழ்ந்த ஹைலைட்ஸ் இங்கே..

*தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட 23 பதவிகளுக்கு மூன்று அணிகளாக மொத்தம் 69 பேர் போட்டியிட்டனர். சிவன் சீனிவாசன் அணி, ரவி வர்மா அணி மற்றும் ஆதித்யா தலைமையில் 'புது உதயம் அணி' என மூன்று அணிகள் களம் கண்டன.

நடிகர் போஸ் வெங்கட்
நடிகர் போஸ் வெங்கட்

*காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடந்த போதும் உறுப்பினர்களில் பாதிப் பேர் கூட வாக்களிக்க வரவில்லை. 48% வாக்குகளே பதிவானதாகச் சொல்லப்பட்டது. 'முந்தைய நிர்வாகத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே பலர் வாக்களிக்க வரவில்லை' எனச் சொன்னார், தற்போது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் போஸ் வெங்கட்.

*தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிவன் சீனிவாசன் அ.இ.அ.தி.மு.க.வில் நட்சத்திரப் பேச்சாளராக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. போஸ் வெங்கட் திமுக ஆதரவாளர். ஆனால் இருவரும் ஒரே அணியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள்.

TV Union Election
TV Union Election

* முந்தைய தேர்தலில் ரவி வர்மா அணியில் போட்டியிட்டு பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜெயந்த்துக்கும் ரவி வர்மாவுக்கும் இடையில் பிரச்னை உண்டாக இந்தத் தேர்தலில் அவர் சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் அணியில் அதே பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் ஜெயந்த் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப் பட்ட தேர்தல் அலுவலர் ஜெயந்தைப் போட்டியிட அனுமதித்தார்.

* பொதுச் செயலாளராக போஸ் வெங்கட் வெற்றி பெற்ற போதும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அவரின் மனைவி சோனியா வெங்கட் தோல்வியடைந்தார். இரண்டு துணைத் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் சிவன் அணியில் பரத்தும் ரவி வர்மா அணி சார்பாகப் போட்டியிட்ட ராஜ்காந்தும் வென்றனர்.

* நான்கு இனைச் செயலாளர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் ரவி வர்மா அணியில்ருந்து தினேஷ் மட்டும் வெல்ல, சதீஷ் உள்ளிட்ட மூவர் வசந்தம் அணியிலிருந்து தேர்வானார்கள்.

* சினிமா நடிகர் சங்கம் போலவே டிவி நடிகர் சங்கத்திலும் மாற்றம் கொண்டு வரப் போகிறோம் எனச் சொல்லிப் போட்டியிட்ட ஆதித்யா தலைமையிலான அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. இந்த அணி சார்பாக பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நவீந்தருக்கு சென்ற முறை நடந்த தேர்தலிலும் கடைசி நிமிடத்தில் போட்டியிடத் தடை விதிக்கப் பட்டது.

* தேவயானி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்றார்கள். வாக்களித்தப் பிறகு பேசிய தேவயானி, 'மூணு அணியாப் போட்டியிடறது ஜனநாயகம்தான். ஆனா தேர்தல் முடிஞ்சதும் நீங்க எல்லாரும் ஒற்றுமையா செயல்படணும்' என வேண்டுகோள் விடுத்துச் சென்றார்.

தேவயானி
தேவயானி

* செயற்குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 14 பேர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். 8 பேர் சிவன் சீனிவாசன் அணியிலிருந்தும் 6 பேர் ரவி வர்மா அணியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

* முக்கியப் பதவிகளை ஒரே அணி கைப்பற்றி இருந்தாலும் எதிரணியிலிருந்து கணிசமானவர்கள் தேர்வாகி இருப்பதால் அடுத்து அமைய இருக்கும் சங்க நிர்வாகம் சுமூகமாக இயங்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 'ஆக்கபூர்வமான செயல்களைச் செய்கிற பட்சத்தில் நாங்கள் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருவோம்' எனச் சொல்கிறார் நடிகர் தினேஷ்