Published:Updated:

தானே முன் வந்து தலையிட்ட கர்நாடக மகளிர் ஆணையம்! அரெஸ்ட் ஆகிறாரா சீரியல் நடிகர் அர்னவ்?

அர்னவ்

ஒரே வீட்டில் தனித்தனி அறையில் இருந்து கொண்டு இருவரும் மாறி மாறிப் புகார் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் அடுத்த சில தினங்களில் ஏதாவது முக்கியமான நடவடிக்கை இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தானே முன் வந்து தலையிட்ட கர்நாடக மகளிர் ஆணையம்! அரெஸ்ட் ஆகிறாரா சீரியல் நடிகர் அர்னவ்?

ஒரே வீட்டில் தனித்தனி அறையில் இருந்து கொண்டு இருவரும் மாறி மாறிப் புகார் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் அடுத்த சில தினங்களில் ஏதாவது முக்கியமான நடவடிக்கை இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
அர்னவ்

சீரியல் தம்பதியான அர்னவ் - திவ்யா விவகாரத்தில் தினமொரு ஆடியோ அப்லோட் ஆகி அப்டேட் தந்து கொண்டே இருக்கிறது.

அர்னவ் தரப்பிலிருந்து திவ்யாவுக்கு எதிரான ஆதாரம் என் ஒரு வீடியோ வந்தால், மறுநாளே 'ஆமா, உன் புருஷன்கிட்ட நான் ஐ லவ் யூன்னு சொன்னேன்' என `செல்லம்மா' சீரியல் ஹீரோயின் பேசிய ஆடியோவை வெளியிடுகிறார் திவ்யா.

ஒரே வீட்டில் தனித்தனி அறையில் இருந்துகொண்டு இருவரும் மாறி மாறிப் புகார் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் அடுத்த சில தினங்களில் ஏதாவது முக்கியமான நடவடிக்கை இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா என இரு மாநிலங்களின் மகளிர் ஆணையங்களின் தலையீடுதான்.

திவ்யா - அர்னவ்
திவ்யா - அர்னவ்

திவ்யா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில மகளிர் ஆணையம் தானே முன்வந்து தலையிட்டிருக்கிறது.

இது குறித்து திவ்யாவின் வழக்கறிஞர் பிரியாவிடம் பேசிய போது,

'அர்னவ் அளித்த சில பேட்டிகளைப் பார்த்துட்டு தானே முன்வந்து தலையிட்டிருக்கு கர்நாடக மகளிர் ஆணையம். அங்க இருந்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு திவ்யாவுக்கு சட்ட ரீதியா உதவக் கேட்டிருக்காங்க.

உடனே, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி எங்களைத் தொடர்பு கொண்டு கமிஷனுக்கு வரச் சொன்னாங்க. நாங்க போனோம். முறைப்படி புகாரும் தந்திருக்கிறோம்.

அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணையத் தொடங்கி இருக்காங்க. மகளிர் ஆணையத் தலையீட்டுக்குப் பிறகு வழக்கு வேகமெடுத்திருக்கிறது. இருந்தாலும் காவல் துறையினர் சாதாரண, அதாவது சுலபமா ஜாமின்ல வெளிவரக் கூடிய செக்ஷன்களைப் போட்டு வழக்கை நீர்த்துப் போக வச்சிடுவாங்களோங்கிற அச்சமும் எங்களுக்கு இருக்கு'' என்கிறார் இவர்.

திவ்யா ஸ்ரீதர்
திவ்யா ஸ்ரீதர்

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறதென்பதால், விவகாரத்தை சீரியஸாக அணுகுமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் போலீஸைக் கேட்டுக் கொண்டிருப்பதால், போலீஸும் சுறுசுறுப்பாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். அநேகமாக அடுத்த சில தினங்களில் அர்னவ் மீது கைது நடவடிக்கை பாயலாமெனத் தெரிகிறது.