சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “நானும் அவரும் சேர்ந்து முடிவெடுப்போம்!”

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். மாப்பிள்ளை பெயர் கீர்த்தி ராஜ். சொந்த ஊர் திருவாரூர்.

ன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியலில் ஹீரோவும் இயக்குநருமான திருமுருகனைக் காதலிக்கும் `மகா’ கேரக்டர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. காரைக்குடியைச் சேர்ந்த இவர், பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பாவுக்குப் பேத்தி முறை உறவு. ‘நாதஸ்வரம்’ முழுக்க காரைக்குடியிலேயே ஷூட்டிங் நடந்ததால் வீட்டிலிருந்தே வந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். முதல் சீரியலே நல்ல பெயரையும் வாங்கித் தந்தது.
கீதாஞ்சலி
கீதாஞ்சலி

அந்தத் தொடர் முடிவடைந்ததும் அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் சென்னைக்குக் குடியேறியது கீதாஞ்சலியின் குடும்பம். தொடர்ந்து `வாணி ராணி’ ஜீ தமிழ் சேனலில் ‘நிறம் மாறாத பூக்கள்’, விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ என சீரியல்களில் பிஸியாக இருந்தார். சின்னச் சின்ன ரோல்களில் சில பட வாய்ப்புகளும் கிடைத்தன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடித்துவந்த சீரியல்கள் முடிவடைந்ததால் மீண்டும் காரைக்குடிக்கே சென்றவர், சீரியலுக்குக் கொஞ்சம் பிரேக் விட்டிருந்தார். தொடர்ந்து கொரோனா ஊரடங்கும் சேர்ந்துகொள்ள காரைக்குடியிலேயே இருந்தவருக்குத் தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது.

விகடன் TV: “நானும் அவரும் சேர்ந்து முடிவெடுப்போம்!”

``நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். மாப்பிள்ளை பெயர் கீர்த்தி ராஜ். சொந்த ஊர் திருவாரூர். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு இப்ப துபாய்ல வேலை பார்த்திட்டிருக்கார். வரும் மார்ச் முதல் வாரத்துல திருவாரூர்ல ஒரு கோயில்ல வச்சு கல்யாணம் நடக்க இருக்கு. கொரோனா பீதி இன்னுமேகூட விலகாத சூழலா இருக்கிறதால சென்னையிலிருந்து என்னுடைய டிவி நண்பர்களையெல்லாம் அழைக்கலாமா அல்லது சிம்பிளா பண்ணிடலாமான்னு இன்னும் முடிவெடுக்கலை. கல்யாணப் பத்திரிகை கைக்கு வர்றதுக்குள் அதுல ஒரு முடிவெடுக்கணும்.

கல்யாணத்துக்குப் பிறகு சீரியல்கள்ல நடிப்பேனான்னு இப்ப எதுவும் சொல்ல முடியாது. கல்யாணத்துக்குப் பிறகான எந்த முடிவுன்னாலும், அது நிச்சயம் அவரும் நானும் சேர்ந்து எடுக்கிற முடிவாத்தான் இருக்கும்” என்கிறார் கீதாஞ்சலி.