Published:Updated:

இதயத்தை திருடாதே:"நான் யாரென எனக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது"-தொடரிலிருந்து விலகினாரா ஹீமா பிந்து?

ஹீமா பிந்து

ஹீமா பிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்!

இதயத்தை திருடாதே:"நான் யாரென எனக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது"-தொடரிலிருந்து விலகினாரா ஹீமா பிந்து?

ஹீமா பிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்!

Published:Updated:
ஹீமா பிந்து

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் `இதயத்தை திருடாதே'. இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த நவீனுக்கும், பிந்துவிற்கும் இதுதான் முதல் சீரியல். பலருக்கும் இந்த ஜோடி பிடித்திருந்தது. சமீபத்தில் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போதிலிருந்தே இந்தத் தொடர் முடிவடையப் போகிறது என தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இந்தத் தொடரின் கதாநாயகி ஹீமா பிந்து இந்தத் தொடரில் இருந்து வெளியேறியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

ஹீமா பிந்து
ஹீமா பிந்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், 06.01.2020 முதல் 06.05.2022 வரை `இதயத்தை திருடாதே' தொடரில் சஹானாவாக நடித்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. பலரது மனதையும் கொள்ளை கொண்ட இந்தக் கதாபாத்திரம் என் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. தினமும் புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் ப்ளே ஸ்கூலில் தனது நண்பர்களைச் சந்திக்க ஆவலாய் செல்வதைப்போல் நானும் உணர்ந்திருக்கிறேன்.

ஹீமா பிந்து
ஹீமா பிந்து

இந்தப் பயணம் நான் யாரென எனக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. எனக்கென தனி அடையாளத்தை கொடுத்திருக்கிறது. என்னுடைய பெற்றோர்கள், புரொடியூசர் மேம், இதயத்தை திருடாதே டீம், கலர்ஸ்டிவி தமிழ்.. ரசிகர்கள் நீங்க எல்லாரும் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். விரைவில் அடுத்த புராஜெக்ட்டில் சந்திக்கலாம். `இதயத்தை திருடாதே' சஹானாவாக அறிமுகமாகி உங்களின் இதயங்களில் இடமளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!' என பதிவிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விரைவில் நவீன் - கண்மணி திருமணம் நடைபெற இருப்பதால் அவரால் சில மாதங்களுக்கு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என தகவல்கள் வெளியாகி வருகிறது. தவிர, கதை களத்தை மாற்றி எடுக்க இருக்கிறார்கள் என்றும் 'இதயத்தை திருடாதே' தொடர் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. நவீன் புதிய கதைக்களத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism