
காதலர் தினத்துக்கு என்ன ப்ளான்” என்றால், ‘‘நான் இதுவரை எந்த ப்ளானும் பண்ணலை.
‘‘ஆமாங்க, நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன். அவர்தான் எனக்கு எல்லாமும்னு ஊருக்குச் சொன்ன பிறகு வர்ற முதல் வேலண்டைன்ஸ் டே இது. அதனால 2021 காதலர் தினத்தை என்னால மறக்க முடியாது’’ - ‘ரோஜா’, ‘பூவே பூச்சூடவா’ என பிஸியான சீரியல் ஷூட்டிங்கின் மத்தியிலும் காதலில் விழுந்த கதையைச் சொல்லத் தொடங்கினார் ஷாமிலி.

‘‘அவர் பேரு ராஜ்குமார். சென்னைக்காரர்தான். பிசினஸ் மேன். ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஃப்ரெண்டா அறிமுகமானார். எனக்கு ரொம்ப செலக்டிவான ஃப்ரெண்ட்ஸ்தான். அதுல ராஜ் ஒருத்தர். நல்ல நண்பர்களாக இருந்தோம். சின்னச் சின்னச் சண்டைகள், கோபங்களெல்லாம்கூட நண்பர்களா இருந்த நாள்கள்ல எங்களுக்கிடையில் வந்திருக்கு. ஆனா, அதிகபட்சம் 24 மணி நேரம்தான்.
இப்படிப் போயிட்டிருக்கிறப்பதான் கடந்த ஆறு மாசமா என் உள்ளுணர்வு, ‘இந்த ஃப்ரெண்ட்ஷிப் வாழ்நாள் முழுக்க இருந்தா நல்லா இருக்குமே’ன்னு சொல்லுச்சு. இதை ஆசைன்னுகூடச் சொல்லலாம். யார்கிட்டயும் இதுபத்திப் பேசவும் தயங்கிட்டிருந்த சூழல்லதான், நானே எதிர்பார்க்காத ஒரு நொடியில ராஜ் புரப்போஸ் பண்ணிட்டார்.
அப்பதான் தெரிஞ்சது, எனக்குத் தோணுன மாதிரியே அவர் மனசுக்கும் தோணியிருக்கு. அவர் டக்னு போட்டு உடைச்சிட்டார்.’’

“திருமணம் எப்போவாம்?”
‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுல சொல்லி சம்மதம் வாங்கியிருக்கோம். கல்யாணத் தேதியை முடிவு செய்திட்டுச் சொல்றோம்’’ என்கிறார்.
நண்பர்களாக இருந்த நாள்களிலேயே ஷாமிலிக்கு தங்கச்சங்கிலி, டாலர், டிவி, ட்ரெஸ் என அடிக்கடி பரிசுகளாக வாங்கித் தந்து அசத்தியிருக்கிறாராம் ராஜ்குமார். காதலர்களான பிறகு பரிசுகளுக்குப் பஞ்சமே இல்லை. புத்தாண்டு தினத்தன்றுகூட டேப்லெட் வாங்கித் தந்திருக்கிறார்.
“காதலர் தினத்துக்கு என்ன ப்ளான்” என்றால், ‘‘நான் இதுவரை எந்த ப்ளானும் பண்ணலை. அவர் ஏதாச்சும் சர்ப்ரைஸ் வச்சிருப்பார்’’ எனச் சிரிக்கிறார் ஷாமிலி.