Published:Updated:

``காதலில் பொசஸிவ்னெஸ் இருந்தா நம்பிக்கை இல்லைனுதான் அர்த்தம்" - ஶ்ரீதேவி அசோக்

ஶ்ரீதேவி அசோக்

திருமணம் ஆகி மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த க்யூட் தம்பதியர் தங்களின் காதலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

``காதலில் பொசஸிவ்னெஸ் இருந்தா நம்பிக்கை இல்லைனுதான் அர்த்தம்" - ஶ்ரீதேவி அசோக்

திருமணம் ஆகி மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த க்யூட் தம்பதியர் தங்களின் காதலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Published:Updated:
ஶ்ரீதேவி அசோக்

``காதலில் அன்பைவிட புரிந்துணர்வு அதிகமாக இருக்கணும். அது எங்க ரெண்டுபேர் கிட்டயும் நிறையவே இருக்கு. எங்களுக்குள்ள சின்னச் சின்னதா நிறைய சண்டைகள் வரும். ஆனால், அடுத்த அஞ்சு நிமிஷத்தில் அது காதலாக மாறிரும்" என்று மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் சீரியல் நடிகை ஶ்ரீதேவி அசோக்.

வீடு முழுவதும் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கேண்டிட் ஷாட் புகைப்படங்கள் நிறைந்து இருக்கின்றன. திருமணம் ஆகி மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த க்யூட் தம்பதியர் தங்களின் காதலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஶ்ரீதேவி அசோக்
ஶ்ரீதேவி அசோக்

கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகப்போகுது. இந்த மூணு வருஷத்தில் சந்தோஷம், கஷ்டம் எல்லாத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்து கடந்து வந்திருக்கோம். நேத்துதான் கல்யாணம் நடந்த மாதிரி இருக்குது. அதுக்குள்ள மூணு வருஷங்கிறது கொஞ்சம் பிரமிப்பா இருக்கு. எனக்கு பெட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். டாக் ரெஸ்கியூ டீமில் இருந்தேன். ஒரு குட்டி நாயை நிறைய காயங்களுடன் மீட்டு எடுத்தேன். அதைத் தத்தெடுக்க யாருமே முன் வரல. இவர்தான் அந்த நாய்க்குட்டியைத் தத்துக்கொடுக்க உதவி பண்ணினார். இப்படிதான் எங்களின் முதல் அறிமுகம் தொடங்குச்சு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நாய்க்குட்டியை நான் தத்துக் கொடுக்கும்போது இவர் எடுத்த புகைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இவருக்கு என்னை பிடிச்சுப்போச்சு. எங்க அப்பா, அம்மாகிட்ட , `ஶ்ரீயை நான் கல்யாணம் பண்ணிக்கட்டுமா'னு கேட்டுருக்காரு. இவரோட ஆட்டிட்யூடை பார்த்துட்டு எங்க வீட்டிலும் ஓ.கே சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் என்கிட்ட காதலைச் சொன்னாரு. எனக்கும் இவரை பிடிச்சிருந்ததால் காதலுக்கு ஓ.கே சொல்லிட்டேன். திருமணம், நிச்சயம், ரிசப்ஷன்னு எல்லாத்துக்கும் நாங்க ரெண்டு பேரும் சேர்த்துதான் பிளான் பண்ணோம், ஷாப்பிங் பண்ணோம். திருமணம் முடிஞ்சதும் இவரை இன்னும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சது.

ஶ்ரீதேவி அசோக்
ஶ்ரீதேவி அசோக்

இந்த மூணு வருஷத்தில் தான் ஆண் என்கிற கர்வத்தை ஒரு முறைகூட காட்டினது இல்ல. ரொம்ப பொறுமையானவர். எந்த விஷயத்தையும் கூலா ஹேண்டில் பண்ணுவார். நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். நினைச்ச நேரத்துக்கு வீடு திரும்ப முடியாது. நிறைய வதந்திகள், நெகட்டிவ் கமென்ட்கள் வரும். இது எல்லாத்தையும் இவர் பொருட்படுத்தினதே கிடையாது. இன்னும் சொல்லணும்னா லேட் நைட் ஷூட் போகுதுனு நான் போன் பண்ணா போதும், ஸ்பாட்டுக்கு வந்து, எனக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடப்பாரு.

நான் யார் கூட நடிக்கிறேன், என்ன சீன்ல நடிக்கிறேனுகூட கேட்டது கிடையாது. எப்படி ஒரு மனுஷனால் இப்படி இருக்க முடியும்னு நானே ஆச்சர்யப்பட்டு கேட்டுருக்கேன். அதுக்கு அவர் சொல்லும் பதில், `நான் உன்னை நம்புறேன், உன் மனசுக்கு சரினு படுறதை நீ செய்'னு சொல்லுவாரு" என்ற ஶ்ரீதேவியைத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார் அசோக்.

ஶ்ரீதேவி அசோக்
ஶ்ரீதேவி அசோக்

``எப்போதுமே உறவில் நம்பிக்கை ரொம்ப முக்கியம். அது உடையும்போது பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பிச்சுரும். உண்மையைச் சொல்லணும்னா, ஒருத்தங்க மேல நமக்கு பொசஸிவ்னெஸ் உணர்வு வருதுனா, நாம அவங்களை முழுசா நம்பலனுதான் அர்த்தம். அப்புறம் கணவன், மனைவியா வாழ்றதில் என்ன அர்த்தம் இருக்கு? நான் ஶ்ரீ கிட்ட எந்த ஈகோவும் பார்க்கிறது இல்ல. சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பிறகு, ஒருத்தர் மட்டும் வீட்டு வேலை செய்யணும். ஒருத்தர் குடும்பத்துக்காக ஓடணும் இப்படியெல்லாம் கோடு போட்டுட்டு வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் உறவு இருக்கும். காதல் இருக்காது.

நம்ம நேசிக்கிறவங்களை எந்த அளவுக்கு உயரத்தில் வெச்சுப் பார்க்க ஆசைப்படுறோமோ அந்த அளவுக்கு காதலும் அதிகமாகிட்டே இருக்கும். எல்லா நேரத்திலும் அவங்க கூடவே இருக்க முடியலைனாலும், அவங்களோட வெற்றிக்குத் தடையாக இருக்கக் கூடாதுனு நான் உறுதியா இருக்கேன். அதனால் ஒருத்தரோட தொழிலில் இன்னொருத்தர் தலையிட்டுக்க மாட்டோம். என்னதான் ரெண்டு பேரும் பிஸியாக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைஞ்சது அரை மணிநேரமாவது, ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து மனம் விட்டுப் பேசணுங்கிறது ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு.

ஶ்ரீதேவி அசோக்
ஶ்ரீதேவி அசோக்

அப்படிப் பேசும்போது புரிந்துணர்வு இன்னும் அதிகமாகும். தேவையில்லாமல் ஒரு விஷயத்தை மறைக்க வேண்டிய தேவையிருக்காது, பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இப்படியான சூழலில் காதல் இன்னும் அதிகமாகும். நான் என் பழைய காதலைக்கூட ஶ்ரீகிட்ட ஷேர் பண்ணிருக்கேன்." என்ற தன் கணவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் ஶ்ரீ தேவி.

ஆமா, நான் அவரோட க்ளோஸ் ஃபிரெண்ட், ஸோ எந்த ஒளிவு மறைவும் எங்களுக்குள்ள கிடையாது" என்றவரிடம், அண்மைய காதலர் தின கொண்டாட்டம் பற்றிக் கேட்டோம்.

``சின்ன சர்ப்ரைஸ். அவ்வளவுதான். விலை அதிகமான கிஃப்ட் கொடுத்தால்தான் காதல் அதிகமாகும்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, மனைவி இடத்துலேருந்து கணவணும், கணவன் இடத்துலேருந்து மனைவியும் யோசிச்சு பிரச்னைகளைக் கையாளும்போதுதான் காதல் அதிகமாகும். நான் சில நாள்களில் ஷூட்டிங் முடிச்சு வந்து லேட் நைட் தூங்குவேன். காலையில கண்ணையே திறக்க முடியாது. அப்போ எனக்காக இவரு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்து சாப்பிட்டுட்டு தூங்குனு சொல்லுவார். அதுவே சர்ப்ரைஸ்தான். இப்படியான புரிந்துணர்வைவிட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்?

ரெண்டு பேருக்கும் டிராவல் ஸ்ட்ரீட் ஃபுட், பெட்ஸ்னு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு. பிடிச்ச விஷயங்களுக்காக, பிடிச்சவங்களோடு பயணிப்போம்" என்ற ஶ்ரீ தேவி அசோக் இந்த வருட காதலர் தினத்தில் தாய்மை அடைந்துள்ள மகிழ்ச்சியையும் பகிர்ந்து விடைகொடுத்தார்.