Published:Updated:

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: அடுத்தடுத்து ஆடியோ, மிரட்டல் போன் கால், `பி டீம்' பஞ்சாயத்து!

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் | ரவிவர்மா

"ரவிவர்மா செய்த ஊழல்களை எதிர்க்கிறோம்னா, அவரை எதிர்த்துப் போட்டியிடுகிற வலுவான அணிக்குத்தான் ஆதரவு தெரிவிச்சிருக்கணும். ஆனா தனியா அணி அமைச்சுப் போட்டி போடுறோம்னா, அது ஓட்டைப் பிரிச்சு ரவிவர்மா வெற்றி பெற உதவுற மாதிரிதானே அர்த்தம்?" - சங்கீதா பாலன்

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: அடுத்தடுத்து ஆடியோ, மிரட்டல் போன் கால், `பி டீம்' பஞ்சாயத்து!

"ரவிவர்மா செய்த ஊழல்களை எதிர்க்கிறோம்னா, அவரை எதிர்த்துப் போட்டியிடுகிற வலுவான அணிக்குத்தான் ஆதரவு தெரிவிச்சிருக்கணும். ஆனா தனியா அணி அமைச்சுப் போட்டி போடுறோம்னா, அது ஓட்டைப் பிரிச்சு ரவிவர்மா வெற்றி பெற உதவுற மாதிரிதானே அர்த்தம்?" - சங்கீதா பாலன்

Published:Updated:
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் | ரவிவர்மா
இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, நீதிமன்றம் தலையிட்டு ஒருவழியாக வரும் ஞாயிற்றுக் கிழமை (10/07/22) நடக்கிறது சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல். வழக்கம்போல சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அதே திருமணம் மண்டபத்தில்தான் இந்த முறையும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

சுமார் 1,300 உறுப்பினர்கள் கொண்ட சங்கத்துக்கான தேர்தலில் மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய தலைவர் ரவிவர்மா தலைமையில் ஒரு அணி, முன்னாள் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையில் ஒரு அணி, புதிதாக 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் இயக்குநர் ஆதித்யா தலைமையில் ஒரு அணி. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிற சூழலில் தேர்தல் தொடர்பான பஞ்சாயத்துகளும் தொடங்கிவிட்டன.

சங்கீதா பாலன்
சங்கீதா பாலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவன் சீனிவாசன் அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை சங்கீதா பாலன் வெளியிட்ட ஒரு ஆடியோவில் புதிதாக உருவான அணியை 'ரவிவர்மாவின் பி டீம்' எனக் குறிப்பிட, அந்த அணியின் தலைவர் ஆதித்யாவே நேரடியாக சங்கீதாவுக்கு போனைப் போட்டதில், இருவரும் ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டனர். அந்த ஆடியோவும் வெளியில் லீக்காகிவிட்டது.

சங்கீதா பாலன் தன்னுடைய பேச்சினிடையே, "ரவிவர்மாவே நடிகை நளினியிடம், 'அந்தப் பசங்களையெல்லாம் நாமதான் நிறுத்தியிருக்கோம்'ன்னு சொல்லியிருக்கிறார்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சங்கீதா பாலனிடம் பேசிய போது, "ரவிவர்மா செய்த ஊழல்களை எதிர்க்கிறோம்னா, அவரை எதிர்த்துப் போட்டியிடுகிற வலுவான அணிக்குத்தான் ஆதரவு தெரிவிச்சிருக்கணும். ஆனா தனியா அணி அமைச்சுப் போட்டி போடுறோம்னா, அது ஓட்டைப் பிரிச்சு ரவிவர்மா வெற்றி பெற உதவுற மாதிரிதானே அர்த்தம்? அதுவும் போக அந்த அணியில போட்டிப் போடுகிற ரெண்டு பேர் நேத்து வரைக்கும் ரவிவர்மா கூடவே இருந்தவங்க. இதையெல்லாம் வச்சுத்தான் நான் அந்த அணியை 'ரவிவர்மாவின் பி டீம்'ன்னு சொன்னேன்.

இப்ப பார்த்தீங்கன்னா நான் பேசுனதுக்காக என்னை போன்ல மிரட்டத் தொடங்கி இருக்காங்க'' என்கிறார் இவர்.

ரவிவர்மா
ரவிவர்மா
File Photo

ரவிவர்மா அணியைச் சேர்ந்தவர்களோ, "தேர்தலை நடத்த விடாம இழுத்தடிக்க நினைச்சு என்னென்னவோ பேசினாங்க. அதையெல்லாம் சமாளிச்சு இப்ப தேர்தல் நடக்கப் போகுது. நாங்க சட்டத்துக்குட்பட்டு தேர்தலைச் சந்திக்கிறோம். அதனால யார் என்ன சொன்னாலும் பதில் சொல்லப் போறதில்லை. தேர்தல் முடிவுகள் பதில் சொல்லிடும்" என்கிறார்கள்.

மூன்றாவது அணித் தரப்போ, "ரவிவர்மா கொரோனா காலத்துல உதவி செய்ததாச் சொல்றாங்க. யார் தலைவரா இருந்தாலும் அந்த நேரத்துல உதவிதான் செய்திருப்பாங்க. அதனால அதைப் பெரிசாப் பேசத் தேவையில்லை. சிவன் சீனிவாசன் தலைவரா இருந்த காலத்துல சங்கத்துக்குப் பெரிசா எதுவும் செய்யலை. அதனாலதான் இந்த ரெண்டு பேருமே வேண்டாம்னு மூணாவது அணியை உருவாக்கி தேர்தல்ல நிக்கிறோம்" என்கிறார்கள்.

10ம் தேதி இரவு யார் சங்கத்தைக் கைப்பற்றுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.