சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சைத்ரா ரெட்டியின் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சைத்ரா ரெட்டியின் திருமணம்

டப்பிங் சீரியல்களையே ஒளிபரப்பி வந்த பாலிமர் தொலைக்காட்சி புதுப் பொலிவுக்குத் தயாராகிவருகிறது.

* ’ரோஜா’ சீரியல் பிரியங்கா ஆந்திராவைச் சேர்ந்தவர். ஷூட்டிங் நாள்களில் சென்னையிலும் மற்ற நாள்களில் ஆந்திராவில் மீதி நாளுமாக இருந்து வந்தவர், தற்போது சென்னையில் செட்டில் ஆகும் முடிவில் வீடு பார்த்து வருவதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

* தோற்றத்தில் அக்கா தங்கைபோல் இருக்கும் `ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ கவிதாவும் அஸ்வினியும் மாமியார் மருமகள். ’கொரோனா புண்ணியத்தில்தான் இந்தக் காம்பினேஷன்’ என்கிறார்கள். முதலில் மாமியார் கேரக்டரில் நடித்துவந்தவர் கோவிட் ஊரடங்கிற்குப் பிறகு ஷூட்டிங் வரவில்லையாம். `வயதானவர்கள் நடிக்கக் கூடாது’ என அரசாங்கம் விதித்த நிபந்தனை சீரியலுக்கு இளம் மாமியாரைத் தந்தாலும், புதிதாக சீரியலைப் பார்ப்பவர்கள் யார் மாமியார் என்பதில் குழம்பிப்போவார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

* டப்பிங் சீரியல்களையே ஒளிபரப்பி வந்த பாலிமர் தொலைக்காட்சி புதுப் பொலிவுக்குத் தயாராகிவருகிறது. நேரடித் தமிழ் சீரியல்களை அதிகம் ஒளிபரப்ப முடிவெடுத்திருப்பதுடன், சேனல் தரப்பே வெப் சீரிஸ் தயாரிப்பிலும் இறங்கத் திட்டமிட்டுள்ளதாம். இவற்றில் முன்னணி ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீசியன்களைக் களம் இறங்க இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பி.சி.ராம் உள்ளிட்ட சிலரிடம் பேச்சுவார்த்தைகூட முடிந்து விட்டது என்கிறார்கள்.

* தெலுங்கு, தமிழ் பிக் பாஸைத் தொடர்ந்து அடுத்து கன்னட பிக் பாஸ் ஒளிபரப்பும் தொடங்கவிருக்கிறது. கன்னடத்தில் இது எட்டாவது சீசன். நடிகர் சுதீப் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக தமிழ் பிக் பாஸ் முடிவடைந்ததும் 2021 மார்ச்சில் அதே செட்டில், மலையாள பிக் பாஸும் தொடங்க இருக்கிறது. கடந்த சீசன் மலையாள பிக் பாஸ் கொரோனாப் பீதியில் இடையிலேயே நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

* ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா ரெட்டியின் திருமணம். இதில் சபானா, ரேஷ்மா, நட்சத்திரா உள்ளிட்ட ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ஹீரோயின்கள் குரூப்பாகக் கலந்து கொண்டார்கள். தெலுங்குத் தொலைக்காட்சி ஏரியாவிலிருந்தும் முக்கியமான சிலரை அழைத்தி ருந்தாராம் சைத்ரா. திருமணத்துக்கு முந்தைய நாள் மாலை மணமக்களுடன் இணைந்து சபானா அண்ட் கோ போட்ட ஆட்டம் கண்டு தெலுங்கு டிவி உலகம் விக்கித்துப்போனதாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள். ’ரீ மேகிங் என ஏற்கெனவே ஒளிபரப்பான சீரியலையே ஓரிரண்டு வருடங்களில் மறுபடியும் ஒளிபரப்பினால் எப்படி வரவேற்பு கிடைக்கும்’ என்கிறார்கள் சீரியல் ரசிகர்கள். ’இன்னொரு ரவுண்ட் வரலாம்’ என சீரியலை ரொம்பவே எதிர்பார்த்த ஹீரோவும் ஹீரோயினும் இந்த ரிசல்ட்டால் ரொம்பவே அப்செட்டாம்.

முந்தைய சீசனில் கோமாளி வேஷம் போட்ட பலரையும் அடுத்த சீசனுக்கும் அழைத்த சேனல், தன்னை அழைக்காததில் ரொம்பவே வருத்தத்தில் இருந்தார், சமையல் நிகழ்ச்சியில் முதன்முதலில் கோமாளி வேஷம் போட்ட அந்த நடிகர். ஆறுதலாக வீட்டில் ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது. விரைவில் அப்பா ஆகப்போகிறாராம்.

ஏற்கெனவே நிதிச்சிக்கலில் இருந்தது அந்த சேனல். இப்போது குடும்பப் பங்காளிச் சண்டையும் வளர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்துவிட்டது. ரொம்பவே கலங்கிப்போன சேனல் முதலாளி, நெருக்கமானவர்களிடம், ’சிங்கம் சிக்கிட்டா எலி அது மேல ஏறி விளையாடுமாம்; என் கதை அப்படி ஆகிடுச்சில்ல’ என மனம் நொந்தவராகப் பேசி வருகிறாராம்.