சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஷ்ணு - ஆயிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
விஷ்ணு - ஆயிஷா

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என சம்பளம் பேசி நடிகை ஆர்த்தி கணேஷ்கரை சர்வைவருக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு முழுக்க சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பிரச்னை போய்க் கொண்டிருந்தது. தலைவர் ரவிவர்மாவுக்கு எதிராக நடிகர் மனோபாலா தலைமையில் சிலர் புகார்களை வாசித்தனர். தற்போது சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும் மோதல் வெடித்துள்ளது. தலைவராக சில மாதங்களுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி தலைமையிலான நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள் சில இயக்குநர்கள். இவர்கள் இயக்குநர் விக்ரமாதித்தன் தலைமையில் புதிய சங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இருக்கிறார்களாம்.

நடிகர் விஷ்ணு - ஆயிஷா இடையில் காதல் என்பது கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை ஏரியாவில் உலா வரும் செய்திதான். ஆனால் இப்போது கிளம்பியிருக்கும் புதுத்தகவல், இந்தக் காதலை சமீபமாக ஆயிஷா வீட்டார் விரும்பவில்லை என்பதுதான்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என சம்பளம் பேசி நடிகை ஆர்த்தி கணேஷ்கரை சர்வைவருக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். ‘ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கும், ஆனா ஃபினிஷிங் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். என்னைத்தானே முதல்ல எலிமினேட் பண்ணி அனுப்புவீங்க. அதனால இந்த வேலையே வேண்டாம்’ என மறுத்துவிட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ஜோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியாவும் சுனிதாவும் இணைந்தே டான்ஸ் ஸ்டூடியோ நடத்திவந்தனர். தற்போது பிக் பாஸ் 5வது சீசனுக்கு சுனிதாவை அழைத்த சேனல், பிரியாவையும் சேர்த்தே கூப்பிட்டதாம். டி.விக்கு பிரேக் விட்டு, குழந்தை, கணவன் என சமீபமாகத்தான் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், அடுத்த சீசனுக்குப் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லி விட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கணவர் டைரக்‌ஷன் ஏரியாவில் உட்கார்ந்திருக்க, மனைவி அதே ஷோவில் போட்டியாளராகக் கலந்துகொள்ளும் ஒரு ஆச்சரியம் பிக் பாஸ் 5வது சீசனில் நடக்கவிருக்கிறது. தொகுப்பாளர் பிரியங்காவின் கணவர் பிரவீன், பிக் பாஸ் 5வது சீசன் செட்டில் ஒரு இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

‘மூணு டி.வி பொண்ணுங் களை ஒரே இ(ப)டத்துல சேர்த்த போதே பஞ்சாயத்துக்குப் பஞ்சமிருக்காதுன்னு நினைச்சோம். நினைச்சது சரிதான்’ என்கிறது படக்குழு. மூன்று பேருக்கிடையில் படத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என முதலில் சாதாரணமாகத் தொடங்கி யிருக்கிறது போட்டி, ஒரு கட்டத்தில் ஜூனியர் ‘முத்த’ நடிகருடன் யார் அதிக நேரம் கேரவனில் பேசிக் கொண்டிருப்பது என்பதில் போட்டோஷூட் நடிகைக்கும், முன்னாள் தொகுப்பாளி னிக்குமிடையில் அடிதடி வராததுதான் பாக்கியாம்.