சினிமா
பேட்டிகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

நடிகர் சேத்தனை நினைவிருக்கிறதா? ‘மெட்டி ஒலி' உள்ளிட்ட சில சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான இவர், ஒருகட்டத்தில் டி.வி-யில் இருந்து ஒதுங்கினார்

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘அண்ணியார்’ ரேகா குமாரின் மகள் பூஜா சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறாராம். அதுகுறித்துப் பெருமையுடன் பேசியிருக்கும் ரேகா, ‘‘டிவி என்னதான் புகழ் தந்தாலும் பெரிய திரையில ஒரு ரவுண்டு வந்தா மட்டுமே ஒரு நடிகையா சிலருக்குத் திருப்தி கிடைக்கும். நானுமே இதுக்கு விதிவிலக்கில்லை. அந்த வகையில எனக்குக் கிடைக்காத ஒரு விஷயம் என் பொண்ணுக்குக் கிடைச்சிருக்கு. நேரா பெரியதிரையிலேயே அவள் அறிமுகமாகிறதை நினைக்கிறப்ப ஒரு அம்மாவா என் மனம் பூரிப்படையுது’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நடிகர் சேத்தனை நினைவிருக்கிறதா? ‘மெட்டி ஒலி' உள்ளிட்ட சில சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான இவர், ஒருகட்டத்தில் டி.வி-யில் இருந்து ஒதுங்கினார். சினிமா வாய்ப்புகள் வந்தது ஒரு காரணம் என்றாலும், படம் இயக்க வேண்டுமென்பதே முக்கியக் காரணம். கதை முடிவாகி, தயாரிப்பாளர் கிடைத்து ஒரு படத்தின் ஷூட்டிங்கெல்லாம் கொல்கத்தாவில் தொடங்கியதாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை. விசாரித்தால், வரும் ஆண்டில் அந்தப் படம் நிச்சயம் வெளியாகும் என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

முன்பு தான் செல்லமாக வளர்த்த ‘பனானா' என்கிற நாய்க்குட்டி காணாமல்போனதையடுத்து பெரும் சோகத்திற்கு ஆளான சரண்யா, அந்த வருத்தத்தில் கொஞ்ச நாள் நாய்க்குட்டியே வேண்டாமென இருந்தார். ஆனால் செல்லப் பிராணிகள்மீதான அவரது பாசம் அவரை சும்மா இருக்க விடவில்லை. தற்போது புது வரவாக இன்னொரு நாய்க்குட்டி அவரது வீட்டுக்கு வந்துள்ளது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் தயாரிப்பு, சினிமா எனப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நீலிமா ராணி, முழுக்க ஆயுர்வேதப் பொருள்கள் கிடைக்கச் செய்யும் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். நடிகைகள், தொகுப்பாளர்கள் ஆகியோர் மேக்கப் முதலான விஷயங்களால் தங்களின் சருமம் பாதிப்படைவதாகச் சொல்லக் கேட்டே இந்த ஆயுர்வேத ஸ்டோர் ஐடியா உதித்ததாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சிக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதேபோல் நாற்பது நாள்தான் உள்ளே இருப்பார் என்கிறார்கள். ‘நாற்பது நாள் மட்டுமே தன்னால் அங்கு இருக்க முடியும்’ என்பதை முன்கூட்டியே கூறி அதற்கு சேனல் தரப்பில் சரி சொன்ன பிறகே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

முன்னணி ஹீரோ தொகுத்து வழங்கிய சமையல் நிகழ்ச்சி ரேட்டிங்கில் அடி வாங்கியதில், ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறது காமெடி சமையல் டீம். ‘‘இன்னும் கொஞ்ச நாளைக்காவது நமக்குப் போட்டியா யாரும் வர மாட்டாங்க’’ என நிம்மதிப் பெருமூச்சை விடுகிறார்களாம் அவர்கள்.