சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV - ரிமோட் பட்டன்

அதிதி பாலன்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிதி பாலன்

சின்னத்திரைக்கு வருவதற்கு முன் சினிமா வாய்ப்பு தேடி பாலிவுட்டில் சில காலம் முயற்சி செய்திருக்கிறார் `ஈரமான ரோஜாவே' ஷ்யாம்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

ஜெயா டி.வி-யில் முன்பு ‘தக திமி தா' நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது அதைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார் நடிகை ‘அருவி' அதிதி பாலன். அதே நிகழ்ச்சி கொஞ்சம் புதிய வடிவம் பெற்று ‘தக திமி தக ஜனு' என்கிற பெயரில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இப்போது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவதே அதிதிதான். ‘‘அடிப்படையில் பரதநாட்டியம் எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம்கிறதால அதற்கு மேடை அமைத்துத் தருகிற இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரொம்பவே ஆவலா காத்துக்கிட்டிருக்கேன்’’ என்கிறார்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

சின்னத்திரைக்கு வருவதற்கு முன் சினிமா வாய்ப்பு தேடி பாலிவுட்டில் சில காலம் முயற்சி செய்திருக்கிறார் `ஈரமான ரோஜாவே' ஷ்யாம். ஸ்ட்ரெய்ட்டா பாலிவுட் கிளம்பியது குறித்துக் கேட்டால், ‘‘பார்க்கறதுக்கு இந்தி நடிகர் மாதிரி இருக்கே'ன்னு நண்பர்கள் சிலர் உசுப்பேத்தி விட்டதன் விளைவுதான் பாஸ் அது'’ எனச் சிரிக்கிறார். தமிழில் தற்போது அரை டஜன் சீரியல்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்டவர், தமிழ் சினிமா பக்கம் முயற்சி செய்துவருகிறாராம்.

ஜீ தமிழ் சேனல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து சில மாதங்களாக டி.ஆர்.பி. ரேட்டிங் வரிசையில் அதல பாதாளத்துக்குக் கீழிறங்கியதுதான் அதிகார மட்டத்தில் நடந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள். பழையபடி ரேட்டிங்கை உயர்த்தவே, இப்போது ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களிலும் கல்யாண எபிசோடுகளைக் கையில் எடுத்திருக்கிறார்களாம்.

பள்ளி நாள்களில் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவராம் தேவதர்ஷினி. படித்து முடித்து ஆடிட்டர் ஆக வேண்டுமென்கிற லட்சியத்தில் இருந்தவரை டி.வி, சினிமா எனத் திருப்பியது காலம். `இன்னைக்கு சம்பாதிக்கிறதைக் கணக்கு வைக்கத் தனி ஆடிட்டரே வைக்கிற அளவுக்கு ஃபீல்டுல பிஸியா இருக்கீங்களே, போதாதா' என்றால், சின்னதாக முறைத்துவிட்டு, ``நான் இப்போ பிஸியா இருக்கிறது மட்டும்தான் மத்தவங்களுக்குத் தெரியும், இந்த இடத்துக்கு நான் வர்றதுக்குள் சந்திச்ச சிரமங்களெல்லாம் எனக்கு மட்டுமே தெரியும்” என்கிறார்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

கொடைக்கானலில் காபிக்கடை திறந்திருக்கிறார் `சந்திரலேகா' அருண். கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையை மட்டுமே பயன்படுத்தித் தயாராகிற காபிக்கடை இது. ‘‘ரொம்ப நாளா இப்படியொரு ஆசை இருந்தது. கொரோனா வந்து, சைடுல ஒரு தொழில் இருக்கறதுதான் பாதுகாப்புன்னு உரக்கச் சொல்லிடுச்சு. இனியும் உஷாரா இல்லாட்டி எப்படி பிரதர்’’ என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

கடல் கடந்து சென்றவர்கள் ஒருவழியாக நிகழ்ச்சியை முடித்துத் திரும்பிவிட்டார்கள். நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறித்து விசாரித்தால், ‘‘இது ஆரம்பம்தானே; அதனால பரவாயில்ல’’ என்கிறார்கள். சரி, யார் ஜெயித்தது என அறிய ஆர்வமாக இருக்கிறீர்களா? ஒரு இயக்குநரின் வாரிசுக்குத்தான் அந்தக் கோப்பை கிடைத்திருக்கிறதாம்.