சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரோஷினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஷினி

நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கிற சூழலில், அவரது வீட்டில் ‘மாட்டைக் காணோம்' என்றொரு பிரச்னை

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாரதி கண்ணம்மா'வில் கமிட் ஆவதற்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் வேலை பார்த்து வந்தவர் ரோஷினி. அறிமுக சீரியல் என்றாலும், சீரியல் பெரிய அளவில் ஹிட் ஆனதில் அவருக்கு இந்த சீரியலில் சம்பளமாக எபிசோடுக்கு இருபதாயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. ‘ஒரே சீரியல் ஓஹோன்னு வாழ்க்கைன்னா இதுதான்’' எனப் பெருமூச்சு விடுகிறார்கள் சக ஆர்ட்டிஸ்டுகள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் தன்னுடைய மாமனார் குடும்பம் வசித்த வீட்டின் அருகேயே ஒரு வீட்டில் வசித்து வந்த சாண்டி, தற்போது வடபழனி ஏரியாவில் புதிதாக வீடு ஒன்று வாங்கிக் குடியேறியுள்ளார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கிற சூழலில், அவரது வீட்டில் ‘மாட்டைக் காணோம்' என்றொரு பிரச்னை. சின்னப்பொண்ணு அவரது ஊரில் ஆசையாக வளர்த்து வந்த ஜோடி மாட்டை யாரோ சிலர் அபகரித்துச் சென்றுவிட, சின்னப்பொண்ணுவின் கணவர் இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கலர்ஸ் தமிழின் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்' நிகழ்ச்சியில் ஜூட் மற்றும் ரக்‌ஷனா ஜோடி கலந்துகொண்டதன் பின்னணி நெகிழ வைக்கிறது. இணைத் தயாரிப்பாளராக ‘12 பி' என்ற படத்தைத் தயாரித்தவர் ஜூட்டின் தந்தை. இவர் கோவிட் காலத்தில் இறந்துவிட, இவரது குடும்பம் இப்போது அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறதாம். குடும்பத்தின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார் ஜூட். நிகழ்ச்சியில் இவருடன் ஆடும் ரக்‌ஷனாவின் அம்மா பரதநாட்டியக் கலைஞர். மகளை டான்ஸராகப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்ட அந்தத் தாயும் சில மாதங்களுக்கு முன் கோவிட் தொற்று காரணமாக இறந்துவிட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘குக்கு வித் கோமாளி’ ஷிவாங்கிக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றனவாம். சின்ன ரோல் என்றாலும் ஓரளவு முக்கியத்துவம் இருப்பதுபோல்பட்டால் உடனே ஓகே சொல்லிவிடுகிறவர், ‘‘நீங்கதான் ஹீரோயின்'’ என வருபவர்களைக் கண்டால் மட்டும் ‘‘பார்க்கலாம்'’ எனச் சொல்லி அனுப்பிவிடுகிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

பக்கத்து மாநிலத்தில் ஒளிபரப்பாகி வந்த சமையல் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறிய நடிகை, தான் வெளியேறியதற்குக் காரணம் நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் அணுகுமுறை எனக் குமுறிய பின், தற்போது அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார். இதே தயாரிப்பாளர் ‘முத்த’ நடிகர் கலந்துகொள்ளும், மேற்படி நிகழ்ச்சியின் தமிழ் படப்பிடிப்புத் தளத்திலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தவராம்.