சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பாவினி
பிரீமியம் ஸ்டோரி
News
பாவினி

`புஷ்பா’ மூலம் சினிமா ஏரியாவில் நல்ல கவனம் பெற்றிருக்கும் நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமிக்கு 2022 உற்சாகமாகவே தொடங்கியிருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கமல், விஜய் சேதுபதி, அஜித் ஆகிய முக்கிய ஹீரோக்களின் படங்களில் சில டி.வி நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு வந்தது. தனக்கும் வாய்ப்புகள் குவியும் என எண்ணியே நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த சீரியலிலிருந்து திடீரென வெளியேறினார் ரோஷினி. ஆனால், வாய்ப்பு வந்தபாடில்லை. ‘கையில இருந்த சீரியலும் போச்சே’ எனப் புலம்பி வருபவர், மீண்டும் சேனலில் போய் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க வாய்ப்பு கேட்டதாகச் சொல்கிறார்கள். சொல்லச் சொல்லக் கேட்காமல் இவர் வெளியேறியதால் சேனல் மீண்டும் இவரை வரவேற்குமா என்று தெரியவில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`புஷ்பா’ மூலம் சினிமா ஏரியாவில் நல்ல கவனம் பெற்றிருக்கும் நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமிக்கு 2022 உற்சாகமாகவே தொடங்கியிருக்கிறது. ஆண்டின் தொடக்கத்திலேயே சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்திருக்கிறது. விருதை வழங்கியிருப்பது, மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி நினைவு அறக்கட்டளை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பிக் பாஸ்’ பாவினிக்கு நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வருவதற்கு முன்பே சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. வுமன் சென்ட்ரிக் படம் ஒன்றிற்காக இப்போதே பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`அருவி’ சீரியல் மூலம் மீண்டும் டி.வி பக்கம் திரும்பியிருக்கிற ஜீவிதாவிடம், ‘வந்தீங்க, போனீங்க, திரும்ப வந்தீங்க, ஏன் இந்த ரிப்பீட்டு’ என்றால், ‘‘என் அப்பாவுக்கு நான் நடிக்க வந்ததே பிடிக்கலை. இவ்ளோ நாளா நடிச்சிட்டிருக்கிறேனே, இத்தனை நாள்ல ஒரேயொரு எபிசோடு பார்த்துப் பாராட்டினார். அவ்ளோதான்’’ என்கிறார். அவர் அப்பா லிவிங்ஸ்டனிடம் ‘என்ன சார்’ என்று கேட்டால், ‘‘ஆமாங்க ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’னு சொல்வாங்களே, அப்படி வளர்த்துட்டேன். சினிமா, டி.வியெல்லாம் ஒரு மாதிரியான ஏரியாவா இருக்கு. போட்டி, பொறாமை, பாலிட்டிக்ஸ்னு நிறைய இருக்கு. அதையெல்லாம் எதிர்கொள்கிற தைரியம் கொடுக்காம வளர்த்துட்டதால, எதுக்குன்னு பார்த்தேன், அதையும் தாண்டி இப்பதான் திரும்பவும் வந்துட்டாங்களே’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

குக்கு வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை அப்போது தவற விட்டு விட்டார் நடிகர் இர்ஃபான். 3வது சீசனில் அழைத்தால் போகலாமென இருந்தார். ஆனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வரவில்லை. அதேநேரம் ஓ.டி.டி-யில் வெளியாகவிருக்கும் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் கமிட் ஆகியிருக்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

புதிதாகக் கல்யாணம் ஆன ஜோடி, தங்களுடைய இல்வாழ்க்கையை இனிமையாகத் தொடங்க முடியாமல், இன்னொரு பஞ்சாயத்திலேயே நேரத்தைச் செலவழித்து வருகிறதாம். தாங்கள் தலையிட்டுக் கல்யாணம் முடித்து வைத்த இன்னொரு ஜோடிக்குள் ஆரம்பத்திலேயே பிரச்னைகள் முளைக்க, அதைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு இவர்களிடம் வந்துவிட்டது. ‘எதுக்கு இந்தக் கல்யாணத்துல தலையிட்டோம்னு இருக்கு’ என நொந்துபோய்ப் புலம்பிவருகிறார்கள்.