Published:Updated:

‘பாகுபலி’ அனுஷ்கா, ‘எந்திரன்’ ஐஸ்வர்யா ராய்... ‘சூப்பர் குயின்’ ஷூட்டிங் ஸ்பாட் கலகல...

 ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சி

ராணி கெட்டப்பில் பிரமாண்டமான யானை முகங் களுக்கு மத்தியில் நின்று நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்தார் வைஷ்ணவி.

‘பாகுபலி’ அனுஷ்கா, ‘எந்திரன்’ ஐஸ்வர்யா ராய்... ‘சூப்பர் குயின்’ ஷூட்டிங் ஸ்பாட் கலகல...

ராணி கெட்டப்பில் பிரமாண்டமான யானை முகங் களுக்கு மத்தியில் நின்று நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்தார் வைஷ்ணவி.

Published:Updated:
 ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும்?

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டிக்கு விசிட் செய்தோம். நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அரங்கம் தயாராக இருந்தது.

போட்டியாளர்கள் வைஷ்ணவி, ஆஷா, ஐஸ்வர்யா உட்பட அனைவரும் மேக்கப் அறையில் பிஸியாக இருந்தார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகை ராதாவும் நடிகர் நகுலும் அரங்கத்தின் முன் பகுதியில் அமர்ந்து, அன்றைய நிகழ்ச்சி குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அரங்கத்தில், ‘தீவானி மஸ்தானி’ பாடல் ஒலிக்க, கோல்டன் நிற ஆடை அணிந்து தன் நடனக்குழுவுடன் என்ட்ரி கொடுத்தார் ஆயிஷா. நடுவர்களும், ஆயிஷா குழுவும் நடனத்தில் பிஸியாக, மேடைக்குப் பின்னால் இருந்த, நடிகைகளின் அறைக்குள் நுழைந்தோம்.

ராணி கெட்டப்பில் பிரமாண்டமான யானை முகங் களுக்கு மத்தியில் நின்று நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்தார் வைஷ்ணவி. பிரேக்கில் வந்தவரிடம் பேசினோம். ‘‘சூப்பர் குயின் ஷோவில் இது இன்ட்ரோ ரவுண்டு. ‘பாகுபலி’ அனுஷ்கா கெட்டப். சீரியல்ல பாவம் போல இருந்த பொண்ணா இதுனு ஆடியன்ஸ் ஷாக் ஆகுற அளவுக்கு இதுல தெறிக்கவிடப் போறேன். வெயிட் அண்ட் வாட்ச்...’’ மிரட்டலாகச் சொல்லிவிட்டு மீண்டும் ரிகர்சலுக்குத் தயாரானார் வைஷ்ணவி.

அரங்கத்தின் மற்றொரு புறம், போட்டியாளர்களுக்கான போட்டோ ஷூட் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்த கண்மணி மனோகரனிடம் பேசினோம்... ‘‘நடிப்பு, மாடலிங் தாண்டி எனக்குள்ள என்ன திறமையெல்லாம் இருக்குன்னு கண்டுபிடிக்கிறதுக்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த ஷோவைப் பாரக்கறேன். ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியா என்னை ரசிச்ச மக்கள், கண்மணிக்கு எவ்வளவு வர வேற்பு தரப்போறாங்கனு பார்ப்போம்” என்று கண்மணி படபடக்க...

‘பாகுபலி’ அனுஷ்கா, ‘எந்திரன்’ ஐஸ்வர்யா ராய்... ‘சூப்பர் குயின்’ ஷூட்டிங் ஸ்பாட் கலகல...

“சரி, சரி ரொம்ப லென்த்தா போகுது, எங்களுக்கும் மைக் கொடுங்க” என்று கண்மணியைக் கலாய்த்தவாறே என்ட்ரி கொடுத்த வி.ஜே பார்வதியிடம் மைக்கை நீட்டினோம்... “ `புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் மக்கள் மனசுல இடத்தைப் பிடிச்சிட்டேன். வி.ஜேவா நிறைய ஷோ பண்ணியிருந்தாலும், ஸ்டேஜ்ல டான்ஸ்லாம் பண்றது கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு. ஆனாலும், என்னோட பெஸ்ட்டை கொடுக்கணும். அதனால் டிரஸ்ஸிங் தொடங்கி சின்ன சின்ன விஷயத்துல யும் நிறைய கவனம் செலுத்துறேன்” என்று பார்வதி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

``எப்படி இருக்கு இந்த லுக்...” என்று  உள்ளே நுழைந்தார் ஐஸ்வர்யா. ‘கிளிமஞ்சாரோ...’ பாடல் ஐஸ்வர்யா ராய் கெட்டப்பில் மிரட்டலாய் வந்த ஐஸ்வர்யா, ‘`சர்வைவர் நிகழ்ச்சியில ஸ்ட்ராங் கேர்ளா மக்கள் என்னைப் பார்த்திருப்பாங்க. இந்த ஷோவுல  ஃபன், டான்ஸ், காமெடினு எமோஷனலா பார்க்கப்போறாங்க. எவ்வளவு ஜாலியா இருந்தாலும், `கப்பு முக்கியம் பிகிலு’னு போட்டியில் கவனமா இருப்பேன்'' என்றார்.

மற்ற போட்டியாளர்கள் அரங்கத்துக்குள் நுழைய தயாராக இருக்க, ஆஷா கெளடாவின் அறையில் மட்டும் மேக்கப் பணிகள் முடிந்தபாடாக இல்லை.

“ஹேர் ஸ்டைல் மட்டும்தான் பாக்கி, இப்போ முடிஞ் சுரும்’’ - கூலாக பேச ஆரம்பித்தார் ஆஷா... “சீரியல் ஷூட்டுக்கு நடுவுல, என்னோட தனிப்பட்ட திறமையை வளர்த்துக்க இப்போ நேரம் செலவிட முடியுது. அது மட்டுமில்ல எமோஷன்ஸை கட்டுப்படுத்த இது ஒரு வாய்ப்புனு நினைக்கிறேன்” என்று ஆஷா சொல்லும் போதே ‘ஹாய்’ சொல்லி, ஜாயின் செய்தார் லாவண்யா... “நான் மாடலிங் பண்ணிட்டு இருந்த பொண்ணு. மக்களோட அன்பை சம்பாதிக்கணும்னு இந்த நிகழ்ச்சி யில கலந்துக்கிட்டேன். எல்லா ரவுண்டிலும் தி பெஸ்ட் கொடுத்து, தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை இடத்தைப் பிடிக்கணும்’’ என்றார்.

அரங்கத்தை திரும்பிப் பார்த்தபோது, பள்ளியில் நடந்த மாறுவேட போட்டியும், பதற்றத்துடன் இருந்த குழந்தைப் பருவமும் நினைவுகளாக நிழலாடின.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism