சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ப்ரியாமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியாமணி

சின்னத்திரை ஹீரோக்கள் பெரிய திரைக்கு வருவதற்குப் படும்பாடு சொல்லி மாளவில்லை

பிரியாமணி
பிரியாமணி

திருமணத்துக்குப் பிறகு டி.வி ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டத் தொடங்கிய பிரியாமணி, இப்போது சீரியல் வாய்ப்புகள் வந்தால் நடிக்கலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறாராம். ‘‘தமிழ், மலையாளம், கன்னடம் என எந்த மொழி என்றாலும் பரவாயில்லை’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

முதன்முறையாக சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம் தினேஷ். கேரக்டர் கேமியோ ரோல் என்றாலும் சன் டிவி மற்றும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை மனதில் கொண்டு நடிக்க சம்மதம் சொல்லி விட்டாராம். சீரியல் பகல் ஸ்லாட்டா அல்லது பிரைம் டைமா என்பது இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நீலிமா ராணி, ராஜ்கமல் வரிசையில் நடிகை ஷப்னமும் ஷூட்டிங் ஹவுஸ் வாங்கி வாடகைக்கு விடும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக சென்னை புறநகரில் தீவிரமான தேடுதல் வேட்டையில் இருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரை ஹீரோக்கள் பெரிய திரைக்கு வருவதற்குப் படும்பாடு சொல்லி மாளவில்லை. அப்படியே வந்தாலும் படங்கள் ஹிட் ஆவதில்லை. ‘திருமதி செல்வம்’ சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க, தொகுப்பாளினி டி.டி-யின் முன்னாள் கணவர் இயக்கத்தில் தொடங்கிய படமும் அப்படியே நின்று போனதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`மாரி’ தொடரில் நடிக்கக் கமிட் ஆகியிருக்கிறார் வனிதா விஜயகுமார். ‘`பொதுவா `சிறப்புத் தோற்றம்’னா கம்மியான எபிசோடுகள்தான் வர்ற மாதிரி இருக்கும். மாரியில் அப்படி இருக்காது; உங்களுக்கு அதிக எபிசோடுகள் இருக்கும்’னு சொல்லியிருக்காங்க. இருந்தாலும் இல்லாட்டியும் பரவால்லன்னு நடிக்கச் சம்மதம் சொல்லிட்டேன். ஏன்னா, ஜீ தமிழ் சேனல் நான் கஷ்டத்துல இருந்த ஒரு சமயத்துல எனக்கு உதவி பண்ணியது. அதை மறக்கக் கூடாதில்லையா’’ என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

சேட்டிலைட் சேனல் ஆரம்பித்த நாள்களில் பரபரப்பான தொகுப்பாளினி அவர். பிரபல செய்தி வாசிப்பாளரின் உறவினரும்கூட. பிரபலமான மடத்துடனும் தொடர்பு உண்டு. ஒரு கட்டத்தில் டி.வி-யிலிருந்து ஒதுங்கியவர், அவ்வப்போது கலை, நடனம் என ஆர்வம் காட்டிவந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் குறித்து எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல்தான் ஹைலைட். நிகழ்ச்சிகளுக்காகத் தமிழகத்தின் மையத்தில் இருக்கும் அந்த நகரத்துக்குச் சென்று வந்தபோது அந்த நகரத்தின் மையத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கிவந்துள்ளார். அப்போது அந்த ஓட்டலின் உரிமையாளருக்கும் இவருக்கும் நட்பு உண்டாக, அதுவே வளர்ந்து இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டார்களாம். தொகுப்பாளினிக்காகத் தன் முதல் மனைவியை விவாகரத்தும் செய்துவிட்டாராம் அந்த ஓட்டல் உரிமையாளர்.