Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV

தற்போது முழுக்க முழுக்கக் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டுவரும் சாண்ட்ராவை மீண்டும் நடிக்கக் கேட்டு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றனவாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தற்போது முழுக்க முழுக்கக் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டுவரும் சாண்ட்ராவை மீண்டும் நடிக்கக் கேட்டு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றனவாம்.

Published:Updated:
விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV
ரச்சிதா
ரச்சிதா
ரோஷினி
ரோஷினி
ஷிவாங்கி
ஷிவாங்கி

ரச்சிதா, ஷிவாங்கி, ரோஷினி ஹரிப்ரியன் என இந்த மூன்று பேரின் பெயர்களும் பிக் பாஸ் அடுத்த சீசனுக்கான போட்டியாளர் பட்டியலில் பலமாக அடிபடுகின்றன. ஷிவாங்கி, ரோஷினி இருவரும் தேர்வானால் உள்ளே போவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ரச்சிதாவுக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு சேனலில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியலை விட வேண்டி இருக்கும்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

நடிகர் சாய் சக்தியை முன்பு ‘ஜோடி' நிகழ்ச்சியில் ஒரு ஜூலியுடன் சேர்த்து விட்டார்கள். இப்போது சீரியல் ஒன்றிற்காக ‘பிக் பாஸ்' ஜுலியுடன் மணக்கோலத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள். ‘ஜூலிக்கும் உங்களுக்கும் அப்படி என்ன ஒற்றுமை' எனக் கேட்டால், ‘‘அந்த ஜூலி என்னை வேண்டாம்னு ஒதுக்கி நிகழ்ச்சியில் பரபரப்பை உண்டாக்கியதுபோல இந்த ஜூலியும் ஏதாவது பண்ணுவாங்களோன்னு பயந்துட்டேதான் இருந்தேன். ஆனா. எல்லாரும் நினைக்கிற மாதிரி ஜூலி நெகட்டிவிட்டியான ஆள் இல்லீங்க’' என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தற்போது முழுக்க முழுக்கக் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டுவரும் சாண்ட்ராவை மீண்டும் நடிக்கக் கேட்டு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றனவாம். ‘‘நடிப்பு அவங்களுக்கு ரொம்பவே இஷ்டம். அதேநேரம், சீரியல், சினிமா சான்ஸ் பிறகுகூட கிடைக்கும். ஆனா, ரெட்டைக் குழந்தைகளுடன் இப்ப அவங்க வாழ்ந்திட்டிருக்கிற இந்த அம்மா வாழ்க்கை நாலஞ்சு வருஷம் கழிச்சா கிடைக்காது. அதனால ‘அப்புறம் பார்த்துக்கலாம்'னு முடிவு பண்றோம்'’ என்கிறார் காதல் கணவர் பிரஜின்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

எளிமையான காலை உணவே தேவதர்ஷினியின் ஸ்லிம் சீக்ரெட்டுக்கான காரணமாம். இட்லி, உப்புமா, ஒரு கப் பச்சைக் காய்கறிகள், அல்லது ஒரு கப் ஊற வைத்த அவல் இவைதான் பெரும்பாலான நாள்களில் இவரது காலை உணவாம். ‘‘காலையில் இப்படி அரை உணவு எடுத்துச் செல்கிறபோது மதியம் நன்றாகப் பசிக்கவும் செய்யும். அந்தப் பசியில் காலையில் தொடங்கிய‌ வேலையும் விறுவிறுப்பாகப் போகும்'’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இந்த மாதத்துடன் (2022 ஜூலை) ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிற மக்கள் தொலைக்காட்சியின் சறுக்கல் 2013-ம் ஆண்டு தர்மபுரியில் நிகழ்ந்த இளவரசன் மரணத்திலிருந்தே தொடங்கியதாகச் சொல்கிறார்கள் அதன் ஊழியர்கள். அந்தச் சம்பவத்துக்கு முன்பு வரை மக்கள் மத்தியில் சேனலின் நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பு, அந்த மரணம் மற்றும் அது தொடர்பான செய்திகளைச் சேனல் கையாண்ட அணுகுமுறையால் மாறிப் போனதாம். ‘‘அப்போதே இது தொடர்பா சில எச்சரிக்கைகளையும் கொடுத்தோம். ஆனா, நிர்வாகம் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை’' என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

பெரிய நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில் தொகுப்பாளர் விஷயத்தில் சிறியதொரு குழப்பம் நிலவுகிறதாம் சேனல் வட்டாரத்தில். முதலில் இருந்து தொகுத்து வழங்கியவருக்கு, இடையில் கொஞ்சம் பிரேக் தந்ததில் அதிருப்திதானாம். அதனால் வரும் சீசனுக்கு ஊதியத்தைக் கணிசமாகக் கூட்டிக் கேட்கிறாராம். இன்னொருபுறம், கூப்பிட்டபோது வந்து இந் நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொடுத்தவரிடமும் அப்போதே ‘அடுத்து மூன்று சீசன் நீங்கதான்' எனச் சொன்னதாகவும் ஒரு தகவல். ‘மறுபடியும் அங்க போயிடுவீங்களா, அப்படீன்னா என்னை எதுக்கு அப்படி ஒரு வாக்குறுதி தந்து கூப்பிட்டீங்க' எனக் கண் சிவக்கிறாராம்.