Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜாக்குலின்
பிரீமியம் ஸ்டோரி
ஜாக்குலின்

சமீபத்திய சின்னத்திரை நட்சத்திரங்களின் சந்திப்பை அழகாக ஒருங்கிணைத்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்துமுடியக் காரணமாக இருந்தவர் தொகுப்பாளர் தீபக்தானாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சமீபத்திய சின்னத்திரை நட்சத்திரங்களின் சந்திப்பை அழகாக ஒருங்கிணைத்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்துமுடியக் காரணமாக இருந்தவர் தொகுப்பாளர் தீபக்தானாம்.

Published:Updated:
ஜாக்குலின்
பிரீமியம் ஸ்டோரி
ஜாக்குலின்
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கனா காணும் காலங்கள்’ தொடரில் சங்கவி கேரக்டரில் நடித்த மோனிஷாவை நினைவிருக்கிறதா? திருமணமாகி கனடாவில் செட்டிலான இவர் தற்சமயம் மேல்படிப்புக்காக துபாயில் தங்கியிருக்கிறார். தற்போது ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் விரைவில் இவரை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘விருமன்’ படத்தில் அதிதி ஷங்கர் பாடிய பாடலை ‘நான்தான் முதல்ல பாடினேன்’ என ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பேசியிருந்தார் அல்லவா? அந்தப் பாடலின் ஆண் குரலுக்குப் பாடியது பாடகர் வேல்முருகன். ‘‘இது சாதாரண விஷயம். நாம ஒரு கடைக்குப் போறோம், பொருள் ஒண்ணு வாங்குறோம், திருப்தி இல்லை. அதே பொருளை இன்னொரு கடையில் பாக்குறோம். அங்க இன்னும் சரியில்லைன்னா முதல் கடையில இருந்ததே தேவலைன்னு வாங்குவோம் இல்லையா, அதேதான். யுவனும் அதிதியும்தான் முதல்ல பாடியிருந்தாங்க. பிறகு எங்களைப் பாட வச்சாங்க. கடைசியில அவங்க பாடினதே சிறப்பா இருக்குன்னு நினைச்சிருக்காங்க. இதுல தப்பு இல்லை. எனக்கு ஒரேயொரு ஆதங்கம் இருக்கு. பாடகர்களை இப்படிப் பாட வைக்கிறப்ப, பாட்டு வெளியாகுதா இல்லையாங்கிறது இருக்கட்டும். அது இசையமைப்பாளர் முடிவு. ஆனா மணிக்கணக்குல நேரத்த செலவழிச்சுப் பாடறவங்களுக்கு அந்த உழைப்புக்கான கூலியைத் தரலாம். அப்படி யாரும் தர்றதில்லை’’ என்கிறார் வேல்முருகன்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

உடல் எடை கூடிவிட்டதாகக் கருதிய தொகுப்பாளர் ஜாக்குலின் உடற்பயிற்சியில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறார். ஆனால் இப்போது சிலர், ‘சினிமா வாய்ப்புக்காகவா’ அல்லது ‘கல்யாணத்துக்காகவா’ எனக் கலாய்க்கிறார்களாம். ‘‘என்ன பதில் சொன்னாலும் அப்பவும் ஏத்துக்க மாட்டாங்க. அதனால என்னவாச்சும் பேசிட்டுப் போங்கப்பான்னு விட்டுட்டேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சமீபத்திய சின்னத்திரை நட்சத்திரங்களின் சந்திப்பை அழகாக ஒருங்கிணைத்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்துமுடியக் காரணமாக இருந்தவர் தொகுப்பாளர் தீபக்தானாம். ‘‘இந்த மாதிரியான சந்திப்புகள் மட்டுமே தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம்விட்டுப் பேச வாய்ப்பாக அமைகிறது. எனவே இத்தகைய சந்திப்புகள் தொடர வேண்டும்’’ என அவரிடமே நிறைய பேர் கோரிக்கை வைத்திருக் கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘இளவரசி’, ‘ஆதிரா’ ‘பிரியாத வரம் வேண்டும்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் துரை மணி. கொரோனாவுக்குப் பின் சீரியல் வாய்ப்புகள் தாமதமானதால் டப்பிங் ஸ்டூடியோ, டான்ஸ் ஸ்கூல் என கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். ‘‘பொதுவாகவே சீரியல்கள்ல நடிகர்களுக்கு வாய்ப்பு குறைவுதான். அதனால நடிப்பை மட்டுமே நம்பி இருந்தா சரியா இருக்காதுன்னுதான் இந்த முடிவு’’ என்கிறார்.

*****

யார்கிட்டயும் சொல்லாதீங்க

‘‘நான் சீரியலை விட்டுப் போறேன்’’ என வீறாப்பாகப் பொதுவெளியில் சொன்ன ‘பூ’ சீரியல் ஹீரோ, பத்தே நாள்களில் ‘நான் போகலை’ எனத் திரும்பி விட்டதைக் கேலி செய்கிறார்களாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலர். ஏன் இந்தக் குழப்பம் என விசாரித்தால், ‘‘எல்லாரையும் போல சினிமாவை நம்பித்தான் போனார். ஆனா என்ன நடந்ததுன்னு தெரியல, இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு திரும்பி வந்துட்டார்’’ என்கிறார்கள்.