Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஜித் - விஷ்வ வினோதினி வளைகாப்பு
பிரீமியம் ஸ்டோரி
விஜித் - விஷ்வ வினோதினி வளைகாப்பு

மலையாள பிக் பாஸ் 3வது சீசன் கடந்த பிப்ரவரி 14 அன்று தொடங்கியது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மலையாள பிக் பாஸ் 3வது சீசன் கடந்த பிப்ரவரி 14 அன்று தொடங்கியது.

Published:Updated:
விஜித் - விஷ்வ வினோதினி வளைகாப்பு
பிரீமியம் ஸ்டோரி
விஜித் - விஷ்வ வினோதினி வளைகாப்பு

‘ரன்’ சீரியலில் வில்லனாக நடித்த விஜித்தின் திருமணம் கடந்த ஆண்டு லாக்டௌனில் திண்டுக்கல்லில் நடந்தது நினைவிருக்கலாம். இப்போது விஜித் வீட்டில் விசேஷம். கர்ப்பமாக இருக்கும் இவர் மனைவி விஷ்வ வினோதினிக்கு இது ஏழாவது மாதம் என்பதால் சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. ஊரடங்கு காரணமாக திருமணத்தை சிம்பிளாக நடத்தியதால், வளைகாப்பைச் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் அமர்க்களப்படுத்திவிட்டனர். நடிகர் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, ஆர்.கே.சுரேஷ், கணேஷ்கர், நடிகைகள் அம்பிகா, ஆர்த்தி என சினிமா, சின்னத்திரைப் பிரபலங்கள் ஏராளமானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். அரசியல் தலைவர்கள் ஜி.கே.வாசன், ஜி.கே.மணி ஆகியோரையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

விஜித் - விஷ்வ வினோதினி வளைகாப்பு
விஜித் - விஷ்வ வினோதினி வளைகாப்பு

மலையாள பிக் பாஸ் 3வது சீசன் கடந்த பிப்ரவரி 14 அன்று தொடங்கியது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட் நடந்த அதே சென்னை ஈவிபி செட்டில்தான் மலையாள பிக் பாஸ் ஷூட்டிங்கும் நடந்துவருகிறது.ஒரு மாதமாகியும் நிகழ்ச்சிக்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள். கடந்த சீசனும் கொரோனா காரணமாக 75 நாள்களுடன் முடிவடைந்த நிலையில், இந்த சீசனும் டல் அடிக்க, கவலையுடன் இருக்கிறதாம் சேனல். போதாக்குறைக்கு இப்போது தேர்தல் வேறு. எனவே பிரபலமான மேலும் சிலரை வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் ஷோவுக்குள் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சென்னை வளசரவாக்கத்தில் ஜூஸ் கடை திறந்துள்ளார் ‘கலக்கப் போவது யாரு’ நாஞ்சில் விஜயன். ‘‘எவ்ளோ நாளா இந்த ஐடியா’’ என்றால், “டிவியில கிடைக்கிற புகழ் நிரந்தர வருமானத்துக்கு உதவாது. இந்த மாதிரி ஏதாவது ஒரு தொழில் கைவசம் நிச்சயம் வேணும்ங்க” என்கிறார். “இது கோடை என்பதால் குளிர்பானக் கடை திறந்திருக்கேன். விரைவிலேயே நிரந்தரமான ஒரு பிசினஸ்லயும் இறங்கலாம்னு இருக்கேன்” என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கிற நட்சத்திராவுக்கு ஊர் சுற்றுவதென்றால் கொள்ளைப் பிரியம். ரெண்டு நாள் ஷூட்டிங் லீவு விட்டாலே எங்காவது கிளம்பிவிடுவார். ‘‘ஆனா கடந்த ஒரு வருஷமா கொரோனா வந்து என்னை வீட்டுக்குள் முடக்கிப் போட்டுடுச்சு; எப்ப சரியாகும்னு பழையபடி கிளம்பலாம்னு காத்திட்டிருந்தா, மறுபடியும் கொரோனா பீதி கிளப்புறாங்களே’’ எனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

* நிகழ்ச்சிக்கு அழைக்கிறவர்கள், ‘அண்ணே, நாமெல்லாம் ஒரே கட்சியில்லையா, அதனால பீஸ்ல கொஞ்சம் குறைச்சுக்கலாம்ல’ எனக் கேட்டால், ‘நான் எந்தக் கட்சியிலவே இருக்கேன்; உங்களுக்கு யாரோ தப்பாச் சொல்லியிருக்காவ’ என்பாராம் அவர். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு போட்டதால், `இப்ப மட்டும் எப்படிக் கட்சிக்காரர் ஆனீர்வே...’ என சொந்தக் கட்சிக்காரர்களே கலாய்க்கிறார்களாம்.

* ‘‘ஷூட்டிங்கின்போது ஆபாசமாகத் திட்டுகிறார்’’ என்கிற புகாருக்கு ஆளாகி, பஞ்சாயத்து போலீஸ் வரைக்கும் போன இயக்குநர், இப்போது வேறொரு சேனலில் பிரைம் டைம் சீரியல் ஒன்றை இயக்க கமிட் ஆகியிருக்கிறார். ‘‘அங்க ஆர்ட்டிஸ்டுகளுக்கு முக்கியத்துவம் தருவாங்க. அதனால ஆர்ட்டிஸ்டுகள் - குறிப்பா நடிகைகள்கிட்ட பார்த்துப் பேசுங்க’’ என எச்சரித்திருக்கிறார்களாம் அவருடைய நலம் விரும்பிகள்.