கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிமோட் பட்டன்

ராஜ் டிவியும் இந்த டி.ஆர்.பி ஓட்டத்துக்குத் தன்னைத் தயார்படுத்தும் விதமாக, பெரிய பட்ஜெட்டில் ‘நீ வருவாய் என’ என்றொரு சீரியலைத் தயாரித்துவருகிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில தினங்களுக்கு முன் ‘கோவிட்’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ அஸ்வினி, தன் நட்பு வட்டாரம், ஷூட்டிங் ஸ்பாட்டில் தெரிந்தவர்கள் என எல்லாரிடமும் தடுப்பூசி போடச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறாராம். பேசாமல் இவரையே ‘கோவிட் தடுப்பூசியின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்துவிடலாம்’ என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

டி.ஆர்.பி.யின் டாப் 5 இடங்களில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்கள்தான் வந்துகொண்டிருக்கின்றன. ஜீ தமிழ் சேனலில் ‘செம்பருத்தி’ சில மாதங்களுக்கு முன் முதலிடத்துக்கு வந்து திரும்பிப் பார்க்க வைத்தது. விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்துவந்தது. இப்போது ராஜ் டிவியும் இந்த டி.ஆர்.பி ஓட்டத்துக்குத் தன்னைத் தயார்படுத்தும் விதமாக, பெரிய பட்ஜெட்டில் ‘நீ வருவாய் என’ என்றொரு சீரியலைத் தயாரித்துவருகிறதாம். நளினி உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`சூப்பர் சிங்கர்’ போன்ற எத்தனையோ நிகழ்ச்சிகளைத் தயாரித்திருந்தபோதும் `குக் வித் கோமாளி’ அதன் தயாரிப்பாளர் ரௌஃபாவுக்குப் பெரியதொரு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம். சமையல் மற்றும் ஹோட்டல் பிசினஸில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ‘எக்ஸட்ரா’ என்கிற பெயரில் ஓட்டல் ஒன்றையும் நடத்திவருகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘தெய்வம் தந்த வீடு’ ’பொன்மகள் வந்தாள்’ ஆகிய சீரியல்களில் நடித்த மேக்னா இப்போது சீரியல், ரியாலிட்டி ஷோ என மலையாள சேனல் பக்கம் பிஸியாகிவிட்டார். தமிழில் மறுபடியும் எப்ப பார்க்கலாம்’ என்றால், `இங்கேயே கால்ஷீட் சரியா இருக்கே’ என்கிறார். தமிழ் சீரீயல் ஏரியாவில் தன்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதாகப் பொண்ணுக்கு வருத்தமாம்..

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரை இயக்குநர் சங்கத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் தளபதி. செயலாளரும் அவரது அணியைச் சேர்ந்தவரே. பொருளாளர் பதவி எதிர்த்துப் போட்டியிட்ட மங்கை அரிராஜன் அணிக்குப் போய்விட்டது. ‘இன்னைக்கு சீரியல் இயக்குநர்கள் நிறைய பிரச்னைகளைச் சந்திச்சுட்டு இருக்காங்க. அதனால தேர்தல் கசப்புகளை இத்தோட மறந்துட்டு, எல்லாரும் ஒற்றுமையா இருந்து இயக்குநர்களின் வாழ்க்கை மேம்படப் பாடுபடப் போறோம்’ என்கிறார் தளபதி.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

நகைச்சுவைப் பேச்சாளரான மாமனார் எந்தக் கட்சியை மேடையில் கிழிக்கிறாரோ, அதே கட்சிப் பின்னணி கொண்ட சேனலில் சீரியல் தயாரிக்கக் களமிறங்கி யிருக்கிறார் மருமகன். ‘போங்கப்பா, போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்க; காசு வரும்போது கட்சியாவது கொள்கையாவது’ என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

‘எங்க எல்லார் முகத்துலயும் கூட ஹெவியா பயம் இருக்கத்தான் செய்யுது; ஆனா காட்டி என்ன ஆகப்போகுது... பார்க்கலாம், என்ன ரிசல்ட் வருதுன்னு’ என்கிறார்கள், அந்தச் சேனலில் சிலர். கூடவே, `அந்த மனுஷன் நெத்தி நிறையத் திருநீறு வச்சுக்கிட்டு, கையெடுத்துக் கும்பிடத் தோணுற மாதிரி நல்ல ஆளாத்தானே இருக்கார், ஓட்டு போட மாட்டாங்களா அவருக்கு’ என்றும் கேட்கிறார்கள். ‘யார் வந்தா உங்களுக்கென்ன’ என்றால், கடந்த காலத்தில் சந்தித்த பிரச்னைகளைப் பட்டியலிடுகிறார்கள்.