சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரம்யா நம்பீசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா நம்பீசன்

கவினுடன் நடித்ததைத் தொடர்ந்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ படத்தில் ரியோவுடனும் இருக்கிறார் ரம்யா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘விவாகரத்துக்குப் பிறகும் சேர்ந்த ஜோடி’ என, கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது குறித்து ரஞ்சித்திடம் கேட்டால், ‘`கடந்த சில வருடங்களாகவே நாங்க சேர்ந்துதான் வாழறோம். அதை எதுக்குப் பொதுவெளியில் சொல்லணும்னுதான் சொல்லலை. அதேநேரம், நாங்க சேர்ந்து வாழணும்னு நிறைய பேர் ஆசைப்பட்டது திருமண நாள் அன்னைக்கு வெளியிட்ட அந்த ஒரேயொரு போட்டோ மூலம் தெரிய வந்தது. அப்படி ஆசைப்பட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வரும் ஹீரோ என்றாலே, ‘படத்தின் ஹீரோயின் ரம்யா நம்பீசனா’ என்கிற ஒரு சென்டிமென்ட் உருவாகியிருக்கிறதாம். கவினுடன் நடித்ததைத் தொடர்ந்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ படத்தில் ரியோவுடனும் இருக்கிறார் ரம்யா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கொரோனா பாதிப்புக்குள்ளான தந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக அவருடன் ஐ.சி.யு வார்டில் தங்கியிருந்தார், ‘பாண்டியன் ஸ்டோர்’ குமரன். தொடர்ந்து குமரனையும் கோவிட் தொற்று தாக்க, இரண்டு வாரங்கள் கேர் சென்டரில் தனிமைப்படுத்திக் கொண்டவர், தற்போது மீண்டு வந்துள்ளார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஸ்ரீத்திகா, பாவனா என பாடகிகளாக ஆசைப்படும் சின்னத்திரைப் பிரபலங்களின் வரிசையில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருக்கிறார் ஜனனி. நேரம் கிடைக்கிற போதெல்லாம் இளையராஜா பாடல்களை முயற்சி செய்து பார்க்கிறாராம். மென்மையான காதல் மெலடி பாடல்களே இவரது முன்னுரிமை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜீ தமிழ் சேனலில் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிய பிரைம் டைம் சீரியலான ‘யாரடி நீ மோகினி’ க்ளைமாக்ஸை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் முடிவடையவிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போதே யூனிட்டில் பலரும் பிரியப் போவதை எண்ணி வருந்தத் தொடங்கிவிட்டார்கள்.

யார்கிட்டயும சொல்லாதீங்க!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜோடி அது. தற்போது கணவன் மனைவி இருவருக்கிடையிலும் கருத்து வேறுபாடு உண்டாகி, தனித்தனியாக வசிக்கிறார்களாம். ‘காதலிக்கும் சூழலை உருவாக்கிச் சேர்த்து வைக்கிற சேனலாவது பிரச்னையைத் தீர்க்க உதவலாமே’ என்றால், ‘போங்க பாஸ், பிரச்னையே அவங்களாலதான்’ என்கிறார்கள்.