சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷிவானி, கண்மணி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிவானி, கண்மணி

தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதிய படத்தில் கமிட் செய்ய ஷிவானியை அணுகியிருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

செய்தி வாசிப்பாளர் ஆவதற்குள் கண்மணி பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லையாம். ‘‘முதல்ல என்னுடைய ஆசைக்கு வீட்டுல ஆதரவு இல்லை. அவங்க எதிர்ப்பை மீறித்தான் சென்னை வந்து முயற்சி செய்தேன். எதுவும் பலன் தராத நிலையில், ஒருகட்டத்துல, நியூஸ் ரீடர் கனவை மூட்டை கட்டி வச்சுட்டு வீட்டுல கைகாட்டுகிற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டலாம்ங்கிற முடிவுக்கே வந்தேன். சரியா அந்தச் சமயத்துலதான் நான் ஆசைப்பட்ட வேலை கிடைச்சுச்சு’’ என நெகிழ்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதிய படத்தில் கமிட் செய்ய ஷிவானியை அணுகியிருக்கிறது. கதையில் இரண்டு ஹீரோயினாம். ‘எதுக்கு இரண்டு ஹீரோயின்; கதையை மாத்துங்களேன்’ என்றாராம் ஷிவானியின் அம்மா. ‘பரவால்ல, நாங்க வேறு ஆளைப் பார்த்துக்கறோம்’ எனத் திரும்பி விட்டார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க‌த் தொடங்கி, சினிமா, சீரியல் என வலம் வந்த ‘தென்றல்’ ஹேமாவை நினைவிருக்கிறதா? பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென உறவினரைத் திருமணம் செய்துகொண்டு சீரியல், சினிமாவிலிருந்து ஒதுங்கியவர், தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாய். கைக்குழந்தையாக இருக்கும் இரண்டாவது குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், மீண்டும் டிவி, சினிமாவுக்குத் திரும்பும் முடிவில் இருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரில் இப்போது கதை விஷ்ணுகாந்தைச் சுற்றியே நகர்கிறது. சென்னையில் பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு முழுநேரமாக சீரியலை நம்பி வந்தவர் விஷ்ணுகாந்த். ‘‘சீரியலுக்குள் நான் வந்த நேரமோ என்னவோங்க, சேனலில் எங்க சீரியல் நம்பர் ஒன் இடத்தைப் பிடிச்சிருக்கு’’ எனப் பூரிக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முனீஸ்ராஜாவிடம், ‘எவ்வளவு ஓட்டு வாங்குனீங்க’ எனக் கேட்டால், `வெளியில சொல்ற மாதிரி இருந்தா சொல்லிட மாட்டேனா’ எனச் சிரிக்கிறார். சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் முன்னிலையில் கூடிய விரைவிலேயே ஆளுங்கட்சியில் சேரவிருக்கிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

இரண்டெழுத்து சேனல் ஒன்றிற்கெதிராகப் பண மோசடிப் புகார் தயாராகி வருகிறதாம். புகார் தரப்போவது அந்த சேனலில் சீரியல் தயாரித்த நிறுவனம் என்கிறார்கள். பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவந்த நிலையில், தற்போது புகாராகக் கிளம்புவதை சந்தேகக் கண்ணோடு நோக்கும் சிலர். ‘இனிமே இப்படித்தான்’ எனப் பூடகமாகப் பேசுகிறார்கள்.