Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜெனிஃபர்
பிரீமியம் ஸ்டோரி
ஜெனிஃபர்

‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி அசோக்கிற்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி அசோக்கிற்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Published:Updated:
ஜெனிஃபர்
பிரீமியம் ஸ்டோரி
ஜெனிஃபர்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சமூக வலைதளங்களில் அவ்வப்போது க்யூட்டான வீடியோக்களை வெளியிட்டுவரும் செந்தில்-ஜா ஜோடி, சில தினங்களுக்கு முன் தங்களது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ‘‘காதல் மலர்ந்த ‘சரவணன் மீனாட்சி’ நாள்களை நினைவுகூர முடியுமா?’’ என செந்திலைக் கேட்டால், ‘‘ஏங்க... ‘அது ஒரு பசுமையான காலம்’னு சொன்னா, ‘ஆமாங்க, இப்பெல்லாம் அவருக்கு என் மேல அன்பே இல்லை’ன்னு அவங்க சொல்லவா?’’ எனக் கேட்கிறார். ‘‘நாங்க ஒருத்தர் மனசுல ஒருத்தர் குடியேறின நாள்ல இருந்து இப்பவரைக்குமே பசுமையான நாள்கள்தான்’’ என்பதே இவர்களின் திருமண நாள் மெசேஜ்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாக்யலட்சுமி’ சீரியலில் ராதிகா என்கிற கேரக்டரில் நடித்தவர் நடிகை ஜெனிஃபர். அதே சீரியலில் ஜெனிஃபர் என்கிற கேரக்டரில் நடிப்பவர் நடிகை திவ்யா கணேஷ். சமீபத்தில் ஜெனிஃபர் சீரியலிலிருந்து வெளியேற, ‘திவ்யாவுக்கு என்னாச்சு’ என்கிற ரீதியில் செய்திகள் றெக்கை விரிக்க, நான்கு நாள் தூக்கம் தொலைந்துவிட்டதாம் திவ்யா கணேஷுக்கு.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி அசோக்கிற்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய்மை அடைந்த நாள் முதல் மகப்பேறு காலத்தின் மாற்றங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த இவர், மகளின் பெயரைக்கூடத் தேர்வு செய்து வைத்துவிட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘குக்கு வித் கோமாளி’யில் உடன் பங்கேற்ற சிலரை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி அளித்துள்ளார் நடிகை ஷகிலா. அஸ்வின், புகழ், பவித்ரா லட்சுமி, இவர்களுடன் நகைச்சுவை நடிகைகள் மதுமிதா, ஆர்த்தி உள்ளிட்ட மேலும் சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

எது எதற்குத் தான் பிராங்க் செய்ய வேண்டு மென்ற வரைமுறை இல்லாமல்போய் விட்டது. பிக் பாஸ் பிரபலமும் நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் மறுமணம் செய்துகொள்ளப் போவதாக இணையதளங்களில் பரவிய செய்தி விளையாட்டுக்காகக் கிளப்பி விட்டதுதானாம். ‘என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் போட்டிருக்கலாம்’ என இப்போது செய்தி வெளியிட்டவர்கள்மீது பாய்கிறார் காஜல்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

டிவி ஏரியாவில் தயாரிப்பாளர் என்கிற நிலையை அடைந்துவிட்ட அந்த நடிகை இப்போது ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். சினிமாவுக்கு வாய்ப்பு தேடித் திரிந்த காலங்களில் எடுத்த கிளாமரான புகைப்படங்கள் இப்போது அடுத்தடுத்து பொதுவெளியில் வெளியாவது, கணவர், குடும்பம் என சுமுகமாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையைச் சேதப்படுத்தி விடுமோ என்கிற பயமே காரணமாம்.