சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிரியா பவானி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி ஷங்கர்

பிக் பாஸ் சீசன் தொடங்கப் போகிறதென்றால், அதற்கு முந்தைய சில மாதங்களிலேயே ஷோவுக்குள் செல்கிறவர்களை ஓரளவு கண்டுபிடித்து விடலாம்

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கையை அறுத்துக்கொண்டு பரபரப்பு கூட்டிய மதுமிதா, அந்த நிகழ்வுக்குப் பிறகு சில மாதங்கள் டிவி பக்கம் வராமலிருந்தார். தற்போது பழையபடி காமெடி ஷோக்களில் கவனம் செலுத்துவதென முடிவெடுத்திருக்கிறாராம். கலர்ஸ் தமிழ் சேனல் மற்றும் மலேசியாவில் ஒளிபரப்பாகும் ஒரு சேனல் என இரண்டு சேனல்களில் ஒரே நேரத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி பண்ணத் தொடங்கியிருக்கிறார்.

vikatan
vikatan

பிக் பாஸ் சீசன் தொடங்கப் போகிறதென்றால், அதற்கு முந்தைய சில மாதங்களிலேயே ஷோவுக்குள் செல்கிறவர்களை ஓரளவு கண்டுபிடித்து விடலாம். ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் முந்தைய சீசன்களில் நான்கைந்து மாதங்களுக்கு முன்பிருந்தே போட்டோஷூட் நடத்தத் தொடங்கினர். இப்போது பிரியா பவானி ஷங்கரும் மொட்டை மாடி போட்டோஷூட் செய்துள்ளார். ஐந்தாவது சீசனுக்கு இவரது பெயர் டிக் செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற பேச்சு கிளம்பியுள்ளது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சன் டிவியில் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் நம்பர் ஒன் இடத்திலிருந்துவந்த ‘ரோஜா’ சீரியலைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது ‘பூவே உனக்காக’ தொடர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சீரியலில் ஹீரோ உட்பட சில முக்கியக் கதாபாத்திரங்கள் மாற்றப்பட்ட பின்னணியில் இந்த வெற்றி கிடைத்திருப்பதால், அஸீம், ஸ்ரீனிஷ் என சீரியலில் புதிதாக என்ட்ரியானவர்களுக்கு சேனலில் ஒரே பாராட்டு மழையாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாக்யலட்சுமி’ தொடரில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர்தான் ‘ஈரநிலம்’ படத்தில் நந்திதா என பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவ‌ர். ‘ஈர நில’மும் சரி, அதற்குப்பிறகு ஹீரோயினாக நடித்த இரண்டு படங்களும் சரி, வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. எனவேதான் நிஜப் பெயரே நல்லாதானே இருக்கு என டிவிக்கு வந்தார். சின்னத்திரைக்கு வந்தது முதலே ஜெனிஃபருக்கு ஏறுமுகம்தான். ‘பாக்யலட்சுமி’ நல்ல ரீச் தர, இப்போது கூடுதல் மகிழ்ச்சியாய் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மூளைப் பகுதியில் நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார் அர்ச்சனா. ஆனாலும் தொடர்ந்து சில நாள்கள் ஓய்வில் இருக்கச் சொல்லியிருக்கிறார்களாம் மருத்துவர்கள். மறு பரிசோதனையெல்லாம் முடிந்து மீண்டும் மைக் பிடிக்க சில மாதங்கள் ஆகலாமெனத் தெரிகிறது. ‘பாத்ரூம் டூர்' வீடியோ வெளியிட்ட போது சண்டையிட்டவர்கள்கூட இப்போது அர்ச்சனாவுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

‘பூ’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்த அந்த நடிகை, யூனிட்டில் ஸ்க்ரீனுக்குப் பின்னால் வேலை செய்து கொண்டிருந்தவரைக் கரம்பிடித்துச் சில ஆண்டுகளே ஆகின்றன‌. இந்நிலையில், தற்போது த‌னிமையை விரும்பி ஒரு தொலைதூரப் பயணம் கிளம்பியிருக்கிறாராம். ‘கணவன் மனைவிக்கிடையில் பிரச்னையா?’ என விசாரித்தால், ‘சீரியல்ல இதெல்லாம் சகஜமுங்க‌‘ என்கிறார்கள்.