Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா பவானி சங்கர்

யாராவது புதுக்கடை திறந்து வைக்க வேண்டும் என அழைத்தால் கூடுமானவரை அதில் கலந்துகொண்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிடுகிறார், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யாராவது புதுக்கடை திறந்து வைக்க வேண்டும் என அழைத்தால் கூடுமானவரை அதில் கலந்துகொண்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிடுகிறார், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா.

Published:Updated:
பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா பவானி சங்கர்
விகடன் TV: ரிமோட் பட்டன்

கேக் வெட்டி கடந்த வாரம் நூறாவது எபிசோடைக் கொண்டாடியது, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சீரியலின் யூனிட். தொடரின் தயாரிப்பாளர், முன்பு நடிகை நீலிமா ராணி தயாரித்த சீரியல்களில் பணிபுரிந்தவர். தற்போது இந்த சீரியல் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தமிழருவி மணியனின் புதிய இயக்கமான ‘காமராஜர் மக்கள் இயக்க’த்தின் இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ‘லொள்ளு சபா’ ஜீவாவின் குடும்பம் அடிப்படையில் காங்கிரஸ் குடும்பமாம். எந்த ஒரு புதிய செயலைத் தொடங்கினாலும் காமராஜர் இல்லம் சென்று வணங்கி விட்டே தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கிற ஜீவா, தன்னுடைய நிறுவனத்துக்கும் ‘கிங் மேக்கர்ஸ்’ என்கிற பெயரையே சூட்டியிருக்கிறார். விருதுநகரிலும் அருப்புக்கோட்டையிலும் காமராஜர் பெயரில் அமைந்துள்ள அமைப்புகள் மூலம் அவ்வப்போது சில நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதாகவும் சொல்கிறார். காமராஜர்மீதான இவரது பற்று குறித்துக் கேள்விப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் தமிழருவி மணியன் இவரை அழைத்துப் பேசினாராம். அப்போது முதல் மணியனிடம் தொடர்பில் இருந்திருக்கிறார். தமிழருவி மணியன் திருச்சியில் மாநாடு நடத்தி ‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தாரே, அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்புப் பணியையும் ஜீவாவே முன்னின்று கவனித்திருக்கிறார். பள்ளி நாள்களிலிருந்தே தீவிரமான ரஜினி ரசிகரும்கூட.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யாராவது புதுக்கடை திறந்து வைக்க வேண்டும் என அழைத்தால் கூடுமானவரை அதில் கலந்துகொண்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிடுகிறார், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா. பேமென்ட்டிலும் ரொம்பவே கறார் காட்டுவதில்லையாம். ‘‘கடை வச்சிருக்கிற ஒரு குடும்பப் பின்னணியில இருந்து வந்ததாலோ என்னவோ, யாரும் கடைத்திறப்புக்குக் கூப்பிட்டா மட்டும் என்னால மறுக்கவே முடியலை’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கல்லூரியில் உடன் படித்த நண்பரைக் காதலித்து வந்தார் பிரியா பவானி சங்கர். சினிமாவுக்கு வந்த பின் அந்தக் காதலின் நிலை என்ன எனத் தெரியாத சூழலில், அவருடைய சமீபத்திய சில சமூக வலைதளப் பதிவுகள் விரக்தியை வெளிப்படுத்துகிற விதத்தில் வருகின்றன. ‘பிரியாவுக்கு என்னாச்சு’ என அக்கறையுடன் ‘உச்’ கொட்டுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

தேர்தலுக்குப் பிறகு நடக்க இருக்கிற சங்கத்தின் முதல் பொதுக்குழுவுக்குச் சிறப்பு விருந்தினராக அந்த சினிமா கம் அரசியல் பிரமுகரை அழைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர், பொதுக்குழுவுக்குப் பிறகு ஆளுங்கட்சிப் பக்கம் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்கிறார்கள்.