கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
மகேஸ்வரி

கடந்த வாரம் ஸ்கிரீனுக்குப் பின்னால் நடந்த ஒரு மாற்றம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் `டாக் ஆஃப் தி டிவி'யாக இருந்தது.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சிருஷ்டி டாங்கே, விக்ராந்த் இருவரையும் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ளப் பேசியி ருந்தார்களாம். அதைத் தெரிந்துகொண்டுதான் முந்திக்கொண்டதாம் `சர்வைவர்' டீம்.

தமிழ்தாசன்
தமிழ்தாசன்
ரமணகிரிவாசன்
ரமணகிரிவாசன்

சீரியல்களில் `இவருக்குப் பதில் இவர்' என மாறுவது சகஜம். ஆனால், கடந்த வாரம் ஸ்கிரீனுக்குப் பின்னால் நடந்த ஒரு மாற்றம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் `டாக் ஆஃப் தி டிவி'யாக இருந்தது. ஜீ தமிழ் சேனலில் முக்கியப் பொறுப்பிலிருந்த தமிழ்தாசன் வெளியேற, ஜீ தமிழ் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் வசன கர்த்தாவான ரமணகிரிவாசன்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘விக்ரம்' படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம் மகேஸ்வரி. வி.ஜே, சீரியல் நடிகை, காஸ்டியூம் டிசைனர் எனப் பல அவதாரங்கள் எடுத்துவிட்டாலும், சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறபோது அது பேசப்பட வேண்டுமென நினைத்தாராம். அது இப்போது நடந்துள்ளதாகக் கருதுகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் தலை காட்டிய அனில், நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டபின் டிவியில் இருந்து முழுவதுமாக ஒதுங் கினார். பிறகு மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகி தற்போது விவாகரத்து வழக்கு நிலுவையிலிருக்கிற சூழலில் மறுபடியும் `சித்திரம் பேசுதடி' சீரியல் மூலம் டிவி பக்கம் வந்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இயக்குநர் பாரதிராஜா மகன், மனோஜ் இயக்குநரும் நடிகரு மான பாண்டியராஜன் மகன் பிருத்வி ஆகிய இருவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்களாம். யோசிக்க அவகாசம் கேட்டிருப்பதாகச் சொல் கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சீரியல் தயாரிப்பாளர் சங்கத்தின் சீனியர் நடிகை சென்னையின் பிரபலமான அந்தக் கல்லூரியில் தன் இரண்டாவது மகளுக்கு மீடியா படிப்பு படிக்க சீட் கேட்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டதாம். `உங்க முதல் பொண்ணுக்கு சீட் கொடுத்தோம்; வகுப்புக்குச் சரியா வராம பாதியிலேயே நிறுத்திட்டாங்க. எனவே ஒரு சீட்டை விரயமாக்க முடியாது' எனக் காரணம் சொல்லப்பட்டதாம். ஆனாலும் விடாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார் நடிகை.