லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மேக் அப் டிப்ஸ் வேணுமா?

ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜனனி

டி.வி உலகம்

நிவின்பாலி
நிவின்பாலி

நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் மலையாளத் தில் வெளியான ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தில் `சின்னதம்பி' சீரியல் ப்ரஜின் வில்லனாக நடித்தார். அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து மலையாள சினிமாவில் சிறப்பான வாய்ப்புகள் வரலாம் என்பதால் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் சீரியல் வாய்ப்புகளில் நடிக்கத் தயக்கம் காட்டுகிறாராம் ப்ரஜின்.

ஸ்ரீனிவாஸ், பியர்லி
ஸ்ரீனிவாஸ், பியர்லி

டந்தாண்டு மலையாள பிக்பாஸ் போட்டியாளர்களான பியர்லியும் ஸ்ரீனிவாஸ் அரவிந்தும் பிக்பாஸ் வீட்டிலேயே காதல் வயப்பட்டு, வெளியில் வந்த பிறகு திருமணம் செய்துகொண்டு பரபரப்பானார்கள். முதன்முறையாகத் தமிழின் முன்னணி சேனலில், நடன ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்க வருகிறார் பியர்லி. ஸ்ரீனிவாஸ் மலையாள சீரியல் ஒன்றில் கமிட் ஆகி திருவனந்தபுரத்திலும், பியர்லி ரியாலிட்டி ஷோவுக்காகத் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள்.

ஜனனி
ஜனனி

மேக் அப் தொடர்பான படிப்பை முடித்திருக்கும் ‘செம்பருத்தி’ ஜனனி, சீரியலுக்கு வருவதற்கு முன் மேக் அப் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். அந்தத் தொடர்பில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, மேக் அப், ஃபேஷன், லைஃப் ஸ்டைல் எனச் சகல ஏரியாக் களிலும் கருத்துகளை வழங்கியபடி பரபரப்பாக இயங்கிவருகிறார்.

ஷப்னம்
ஷப்னம்

சீன எல்லையில் தன் தேனிலவை கொண்டாடினார் சீரியல் பிரபலம் ஷப்னம். ஆனால், ‘ஆயுத பூஜைக்குச் சென்னையில் இருக்க வேண்டும்’ என அவசர அவசரமாகத் திரும்பிவந்தார்களாம். காரணம் கணவர் ஆர்யன், சென்னையில் வாகனங்களுக்கு சர்வீஸ் செய்யும் ‘கார் ஸ்பா’ வைத்திருப்பதுதான். ‘ஆயுத பூஜைன்னா அவர் ரொம்ப பிஸி. அதைப் பக்கத்துல இருந்து பார்க்கணும்னு ஆசை' என்பவர் இரண்டாவது ஹனிமூனை நவம்பரில் மொரீஷியஸில் பிளான் செய்திருக்கிறார்களாம்!