Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

மதன் – ரேஷ்மா திருமணத்தைக் குறிப்பிட்ட ஒரு யூ டியூப் சேனல் குத்தகைக்கு எடுத்ததில் நிகழ்ச்சியைக் கவர் செய்யச் சென்ற மற்ற மீடியாக்களுக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது

பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV: ரிமோட் பட்டன்

வெப் சீரிஸ் பக்கம் வந்திருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹாட்ஸ்டாருக்காக விஜய் டி.வி-யின் பிரதீப் மில்ராய் பீட்டர் தயாரிக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஏமாற்றத்தைத் தந்தாலும் சில காலம் சென்னையில் முகாமிட்டு தமிழ்ப்படங்களில் நடிக்க முயற்சி செய்யலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறாராம் மலேசியாவைச் சேர்ந்த நடியா சாங். இதற்காகவே தன்னுடைய பி.ஆர்.ஓ-விடம் சொல்லி தங்குவதற்கு வசதியான வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மதன் – ரேஷ்மா திருமணத்தைக் குறிப்பிட்ட ஒரு யூ டியூப் சேனல் குத்தகைக்கு எடுத்ததில் நிகழ்ச்சியைக் கவர் செய்யச் சென்ற மற்ற மீடியாக்களுக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ‘இந்த விஷயத்தில் முடிவெடுத்தது ரேஷ்மாதான்’ என்கிற மதனின் நண்பர்களோ, ‘சினிமாவுக்கும் முயன்றுவரும் வேளையில் ஊடகங்களைக் கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும்’ என எச்சரித்திருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பை விட்டு ஒதுங்கிய ‘கல்லுக்குள் ஈரம்’ அருணாவை இப்போது சீரியலில் நடிக்கக்கேட்டு அணுகியிருக்கிறார்களாம். சீரியலிலோ அல்லது சினிமாவிலோகூட விரைவில் அவரை எதிர்பார்க்கலாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் ஷிவானி நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரலாமெனத் தெரிகிறது. முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதாகச் சொல்கின்றனர்.

****

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

பெரிய வீட்டுக்குள் சினிமா கம் கல்விப் பிரமுகரின் உறவுக்காரருக்குக் காதல் அரும்பியுள்ளதாம். இவரது காதல் வலையில் விழுந்திருப்பது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரின் மகள் பெயரைக் கொண்டவராம். ‘அப்பாடா, கொஞ்ச நாளைக்கு கண்டெண்டுக்குக் குறையிருக்காது’ என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது யூனிட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு