Published:Updated:

‘சாரி’ கேட்ட அஜித்... ‘ஹாய்’ சொன்ன விஜய்... ‘விளம்பர’ அம்மா - மகள் கலகல

தேவி மகேஷ் - யுவினா
பிரீமியம் ஸ்டோரி
தேவி மகேஷ் - யுவினா

‘சர்கார்’ படத்துல யுவினா ஒரு கேரக்டர் பண்ணியிருப்பா. அந்த ஷூட்டுக்குப் போயிருந்தபோது, விஜய் சார், என்னைக் கூப் பிட்டு ‘உங்க முகம் ரொம்ப ஃபெமிலியரா இருக்கு.

‘சாரி’ கேட்ட அஜித்... ‘ஹாய்’ சொன்ன விஜய்... ‘விளம்பர’ அம்மா - மகள் கலகல

‘சர்கார்’ படத்துல யுவினா ஒரு கேரக்டர் பண்ணியிருப்பா. அந்த ஷூட்டுக்குப் போயிருந்தபோது, விஜய் சார், என்னைக் கூப் பிட்டு ‘உங்க முகம் ரொம்ப ஃபெமிலியரா இருக்கு.

Published:Updated:
தேவி மகேஷ் - யுவினா
பிரீமியம் ஸ்டோரி
தேவி மகேஷ் - யுவினா

‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ என்பார்கள். அதை அப்படியே உல்டா வாக்கி, மகள் எட்டடி பாய, தான் பதினாறடி பாய்ந்து அசத்தியிருக்கிறார் ஒரு தாய்.

அவர்கள் யுவினா மற்றும் தேவி மகேஷ்... சின்னத்திரை விளம்பரங்கள் மற்றும் சில படங்களின் பரிச்சய முகங்கள்.

அம்மாவின் அடியொற்றி அதே துறைக்கு வரும் வாரிசுகளைப் பார்த்திருப்போம். ஆனால் தேவி மகேஷோ, மகளின் வழியில் மீடியாவுக்குள் வந்தவர். பார்ப்பதற்கு மட்டு மல்ல, பேச்சிலும் அரட்டையிலும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதிலும்கூட அக்கா-தங்கை போலவே இருக்கிறார்கள் இருவரும்.

‘யுவினாவுக்கு ஒன்றரை வயசிருந்தபோது ஃபேமிலி போட்டோஷூட் ஒண்ணு பண்ண லாம்னு சொன்னார் என் கணவர். அந்த போட்டோஸ் வெளியில பரவி, தெரிஞ்சவங்க மூலமா ‘உறவுக்கு கைகொடுப்போம்’ சீரியல்ல பாப்பாவுக்கு நடிக்கிற வாய்ப்பு வந்தது. ஏவிஎம் பேனராச்சே... மறுக்க முடியலை.

 ‘சாரி’ கேட்ட அஜித்... ‘ஹாய்’ சொன்ன விஜய்... ‘விளம்பர’ அம்மா - மகள் கலகல

அதே நேரம் ‘பாப்பா அழுதா கூட்டிட்டு வந் துடுவேன்’னு கண்டிஷன் போட்டுட்டுதான் போனேன். ஆனா, நடந்ததோ வேற... எங்க தாய்மொழி தெலுங்கு. யுவினாவுக்கு தமிழ் பேசத் தெரியாது. அங்கே போனதும் டைரக் டர் சொன்ன டயலாக்கை கேட்டு அப்படியே பேச ஆரம்பிச்சிட்டா. எனக்கும் நம்பிக்கை வந்திருச்சு. இன்னிக்கு யுவினா இந்த அளவுக்கு பிரபலமா இருக்கான்னா அதுக்குப் பின்னாடி நிறைய போராட்டங்கள், கஷ்டங்கள் இருந் திருக்கு. நைட் ஷூட் இருக்கும். லைட்ஸ் பட்டு ஸ்கின்னெல்லாம் எரிஞ்சிடும். எல்லாத் தையும் பொறுத்துக்கிட்டு ஆர்வமா பண் ணினா. அவ வொர்க் பண்ற எல்லா டைரக் டர்ஸும் அவ திறமையைப் பாராட்டத் தவற மாட்டாங்க...’’ மகளதிகாரம் சொல்கையில் மலர்கிறது அம்மாவின் முகம்.

‘`எனக்கு அதெல்லாம் பெருசா நினை வில்லை. சீரியல் பண்ணபோது, வீடு செட்...ஒரே புழுக்கமா இருக்கும். வியர்த்துக் கொட்டக் கொட்ட டயலாக் மனப்பாடம் பண்ணது மட்டும்தான் ஞாபகமிருக்கு. ஆனா படங்கள் பண்ண ஆரம்பிச்சதும் எல்லாமே முக்கியமான நினைவுகளாயிடுச்சு. குறிப்பா ‘வீரம்’ படம். அந்தப் படத்துல நடிச்சது எனக்கு வெகேஷனுக்கு போயிட்டு வந்த மாதிரிதான் இருந்தது. படத்துல ஒரு ஃபைட் சீன் வரும். கண்ணாமூச்சி ஆடிட்டே அஜித் அங்கிள் ஃபைட் பண்ணுவார். ஒரு ஷாட் ரீடேக் எடுத்தாங்க. எனக்கு அது பத்தி தெரியாது. ‘யாரோட மிஸ்டேக் இது... ஏன் மறுபடி எடுக்கறீங்க’ன்னு கேட்டுட்டேன். உடனே அஜித் அங்கிள் என்கிட்ட, ‘என் தப்புதாம்மா... சாரி... ஒருவாட்டி எடுக்க லாமா’னு கேட்டதை மறக்கவே முடியாது. அது மட்டுமில்லை, செட்டுல எங்கம்மாவுக்கு உட்கார இடமில்லைனு, தான் உட்கார்ந்திருந்த ஸ்டூலை கொடுத்து அம்மாவை உட்காரச் சொல்லிட்டு, அவர் நின்னுகிட்டே இருந்தார். அங்கிள் அவ்ளோ ஸ்வீட்...’’ யுவினா சொல்ல வும் விஜய் ரசிகை சும்மா இருப்பாரா?

‘சர்கார்’ படத்துல யுவினா ஒரு கேரக்டர் பண்ணியிருப்பா. அந்த ஷூட்டுக்குப் போயிருந்தபோது, விஜய் சார், என்னைக் கூப் பிட்டு ‘உங்க முகம் ரொம்ப ஃபெமிலியரா இருக்கு. இதுக்கு முன்னாடி எதுலயாவது நடிச்சிருக்கீங்களா’னு கேட்டார். நான் விளம் பரங்கள்ல நடிச்சது பத்தி சொன்னதும், ‘ஆமாம்... நான் பார்த்திருக்கேன்'னு சொன் னார். எனக்குத் தலைகால் புரியலை. அது லேருந்து அந்த ஷூட் முடியறவரைக்கும் தினமும் லொகேஷனுக்கு வந்ததும் அவர் எங்கே இருந்தாலும் அங்கேருந்து ‘ஹாய்’ சொல்ற மாதிரி ஒரு லுக் வரும். கூட இருந்த மத்த பிள்ளைங்களோட அம்மாக்கள் எல்லாம் ‘அதெப்படி அவர் எங்கே இருந்தாலும் உன்னை மட்டும் பார்த்துடறார்’னு கிண்டல் பண்ணுவாங்க. பின்னே... சும்மாவா, நான் அவரோட வெறித்தனமான ரசிகையாச் சேன்னு சொல்வேன்...’’- வெட்கத்துடன் சிரிக்கிறார்.

மகளும் மகனும் மாடலிங் துறைக்கு வந்த பிறகே தான் அந்தத் துறைக்கு வந்த கதை சொல்கிறார் தேவி... ‘`யுவினாகூட ஷூட்டிங்குக்கு கூட போயிட்டிருந்தேன். அப்படிப் போற இடங்கள்ல டைரக்டர்ஸ் ‘நீங்க அழகா இருக்கீங்களே...நடிக்கலாமே’னு கேட்பாங்க. அப்பல்லாம் எனக்கு அந்த ஆர்வமே இல்லை. அடுத்து பிரணவ் பிறந்தான். அவன் கொஞ்சம் வளர்ந்ததும் அவனும் மாடலிங் பண்ண ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் தான் ‘சரி... நாமளும் நடிச்சா என்னன்னு தோணுச்சு...’’ மனம் மாறியவருக்கு முதல் விளம்பரத்திலேயே மகளுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத் தடுத்து 200-க்கும் மேலான விளம்பரங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

‘`ஜெயம் ரவி நடிச்ச ‘அடங்க மறு’ பட ஆடிஷனுக்கு என் பையனைக் கூட்டிட்டுப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்த டைரக்டர், ‘ராஷி கண்ணாவுக்கு அக்கா கேரக்டர் இருக்கு, நடிக்கிறீங்களா’னு கேட் டார். போல்டான கேரக்டர்னு சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன். அப்புறம் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனா குடும்பம் முக்கியம், பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும்னு பட வாய்ப்பு களை மறுத்துக்கிட்டிருந்தேன். ஜேடி - ஜெர்ரி டைரக்‌ஷன்ல ‘லெஜெண்ட்’ படத்துல நடிக்கக் கேட்டு வந்த வாய்ப்பை அப்படி மறுக்க முடியலை. நானும் என் பையனும் நடிச்சோம். நிறைவான அனுபவத்தைக் கொடுத்த படம் அது. ஹீரோ சரவணன் சார் மாதிரி ஜென்டில் மேனை பார்க்க முடியாது. லேடீஸ்கிட்ட அதிகம் பேச மாட்டார். ரொம்ப அமைதியா இருப்பார். டான்ஸ், ஃபைட்டுனு எல்லாத் தையும் ஆர்வமா கத்துப்பார். எங்களுக்கெல் லாம் இன்ஸ்பிரேஷனா இருந்தவர்...’’ மீம்ஸ் நாயகனை மனதார பாராட்டும் தேவி, அடுத்து லாரன்ஸ் மாஸ்டரின் ‘சந்திரமுகி -2’ல் நடிக்கி றாராம்.

 ‘சாரி’ கேட்ட அஜித்... ‘ஹாய்’ சொன்ன விஜய்... ‘விளம்பர’ அம்மா - மகள் கலகல

‘`நானும் ‘லெஜெண்ட்’ படத்தைப் பார்த் தேன். அம்மாவா இவ்ளோ சூப்பரா நடிச்சிருக் காங்கன்னு ஆச்சர்யமா இருந்துச்சு...’’ மம்மியை புகழும் மகளுக்கும் வாய்ப்புகளுக்குக் குறை வில்லை.

‘`டென்த் படிக்கிறேன். இப்போ படிப்புக் கான டைம்... அதனால எல்லா ஆஃபர்ஸுக்கும் ஓகே சொல்லாம பெரிய ஹீரோக்களோட மகளா நடிக்க வாய்ப்பு வந்தா மட்டும் ஓகே சொல்லலாம்னு இருக்கேன். ஒருவிஷயம் தெரியுமா... என்னதான் பெரிய நடிகர்கள்கூட நடிச்சிருக்கேன்னாலும் அதைவெச்சு ஸ்கூல்ல கெத்தெல்லாம் காட்ட முடியாது. என் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் அது ஒரு விஷய மாவே இருக்காது. ‘அன்னை டேட்ஸ் வரு துப்பா... உதயகிருஷ்ணா நெய் வருதுப்பா’ன்னு தான் கிண்டல் பண்ணுவாங்க. போற போக்குல ‘சரி, விஜய், அஜித் நம்பர் இருந்தா அனுப்பு’ன்னு சொல்வாங்க...’’ மகளுக்கு வந்த சோதனையை ரசித்தபடி தொடர்கிறார் மம்மி.

‘`ஹீரோயின்களுக்கு அம்மாவா நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வருது. சமீபத்துல கூட த்ரிஷாவுக்கு அம்மாவா நடிக்கக் கேட்டாங்க. ‘இப்பதான் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கொஞ்சம் வெரைட்டி யான கேரக்டர்ஸ்ல நடிச்சிட்டு அப்புறம் அம்மா கேரக்டர் பண்ணலாமேனு சொல்லிட் டேன். இன்னும் சில வருஷங்கள்ல யுவினா ஹீரோயினாயிட்டா அவளுக்கு அம்மாவா நடிக்க நான் ரெடி’’ - அம்மாவை இடைமறித்து மகள் கேட்ட கேள்வி ஹைலைட்.

‘`நீங்க விஜய் அங்கிள் ஃபேன்தானே... அவருக்கு அம்மாவா நடிக்கக் கூப்பிட்டாங் கன்னா ஓகே சொல்வீங்களா...’’

‘`மத்த ஹீரோ, ஹீரோயின்ஸுக்கெல்லாம் அம்மாவா நடிக்கணும்னா நிறைய கண்டி ஷன்ஸ் இருக்கு. ஆனா, விஜய்க்கு அம்மான்னா சும்மாவா... ஐம் வெயிட்டிங்...’’ இப்போதே ஆர்வமாகிறார் அம்மா.