சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சரண்யா

ஹீரோயினாக அறிமுகமாகி ஒருசில படங்களே நடித்த நிலையில் சீரியலுக்கு வந்த சரண்யாவுக்கு ஏனோ இந்த ஏரியாவும் இன்னும் கை கொடுக்க மறுக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததுமே சுருதிக்குப் பட வாய்ப்புகள் வந்திருக்கின்றனவாம். தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டிருக்கும் சுருதிக்கு ஹீரோயினாவதைவிட கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தமிழ் சினிமாவில் நல்லதொரு இடம் பிடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஹீரோயினாக அறிமுகமாகி ஒருசில படங்களே நடித்த நிலையில் சீரியலுக்கு வந்த சரண்யாவுக்கு ஏனோ இந்த ஏரியாவும் இன்னும் கை கொடுக்க மறுக்கிறது. நடித்த சில சீரியல்கள் தொடர்ச்சியாகப் பாதியில் முடிவடைந்துவருகின்றன. செய்தி சேனல் `நியூஸ் ஆங்கர்' வேலையை ரொம்பவே விரும்பிச் செய்ததாக முன்பு சொல்லியிருந்தார். பழையபடி அந்த ரூட்டில் பயணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவரைத் தெரிந்தவர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

விரைவில் வெளியாகவிருக்கும் `வெப்' படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் பரதா நாயுடு. கைவசம் சீரியலும் இல்லாத நிலையில் சினிமா என்ட்ரிக்கு இந்தப் படம் உதவும் என நம்புகிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

வீடு மாறியதை வீடியோ எடுத்து வெளியிட்ட மைனா நந்தினி, `சொந்த வீடா' எனக் கேட்ட ரசிகர்களிடம், `சொந்தமா வீடு வாங்க 20 வருஷமாகும்' என்றார். `ஹோம் டூர்'னு வீடு மாறியதையே வியாபாரமாக்கத் தெரிஞ்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசக் கூடாது' என இப்போது ட்ரோல் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`வைதேகி காத்திருந்தாள்' சீரியலில் இருந்து விலகிய பிரஜினுக்குப் பதில் புதிய ஹீரோவாக முன்னா கமிட் ஆகி, இரண்டே நாள்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், ரேட்டிங் கிடைக்கவில்லையென சீரியலை முடித்துவிட்டார்கள். இதனால் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கும் முன்னா, `முடிக்கிறதுன்னு முடிவெடுத்துட்டா பிறகு எதுக்கு என்னை கமிட் செய்யணும்' எனத் தன் மனக் குமுறலை நண்பர்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

‘சுவர்’ எனப் பொருள்படும் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பானபோது சேனல் தொடர்புடைய எவரும் அந்த நிகழ்ச்சியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்துகொள்ளக் கூடாது என அறிவித்ததுபோல் ‘பெரிய’ நிகழ்ச்சிக்கு ஏன் எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்கிற முணுமுணுப்பு ‘பெரிய’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலரிடமிருந்து கேட்கத் தொடங்கியிருக்கிறது. ‘தொகுப்பாளர், தன் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவரின் இமேஜ் டேமேஜ் ஆவது போல் காட்ட எப்படி சம்மதிப்பார்’ என்பதே இவர்களது கேள்வியாக இருக்கிறது.