Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷபானா
பிரீமியம் ஸ்டோரி
ஷபானா

‘ராஜா ராணி 2' சீரியலில் நடித்துவரும் சித்துவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றனவாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ராஜா ராணி 2' சீரியலில் நடித்துவரும் சித்துவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றனவாம்.

Published:Updated:
ஷபானா
பிரீமியம் ஸ்டோரி
ஷபானா
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

இந்த வாரம் இரண்டு திருமண‌ங்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கவனிக்கப்பட்டன. முதலாவது ‘குக்கு வித் கோமாளி' புகழ். தன்னிடம் உதவியாளராக இருந்த பென்சியாவை சில வருடங்களாகக் காதலித்து வந்த புகழ், இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். மகாபலிபுரத்தில் செப்டம்பர் 5-ம் தேதி நடந்த இவர்களது திருமண வரவேற்பில் டி.வி, சினிமா பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இரண்டாவது சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் - சின்னத்திரை நடிகை மகாலட்சுமி ஜோடியின் கல்யாணம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ராஜா ராணி 2' சீரியலில் நடித்துவரும் சித்துவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றனவாம். ‘‘புதிய தயாரிப்பு நிறுவனம் ஒண்ணுல இருந்து பேசினாங்க. அதனால போட்டோஷூட் பண்ணினேன். உடனே ‘சீரியல்ல இருந்து வெளியேறப் போறேன்'னு ஒரு தகவல் கிளம்பிடுச்சு. சீரியல்ல இருந்து வெளியேறும் ஐடியா இப்போதைக்கு இல்லை. சினிமாவுக்கே போனாலும் சீரியலையும் விட மாட்டேன். திருவண்ணாமலை பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்து வந்த என்னை ‘திருமணம்'ங்கிற ஒரு சீரியல்தான் தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் தெரிய வச்சது’' என்கிறார். காதல் கணவனை விரைவில் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்பது சித்துவின் மனைவி ஸ்ரேயாவின் முதன்மையான ஆசையும்கூடவாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி' தொடர் கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. ஆனால், வேறு சேனலில். அதாவது ஷபானா, ‘செம்பருத்தி'யை ஆரம்பத்தில் இயக்கிய இயக்குநர் சுலைமான், தொடரில் மாமனாராக நடித்த நடிகர், நிர்வாகத் தயாரிப்பாளர் என அத்தனை பேரும் சன் டி.வி-யில் விஷன் டைம் தயாரிக்கும் புதிய சீரியலுக்கு இணைந்து கமிட் ஆகியிருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பூவே உனக்காக' தொடரில் நடித்த வகையில் தனக்கு சம்பள பாக்கி உள்ளது, அதைப் பெற்றுத் தர வேண்டும் என சின்னத்திரை நடிகர் சங்கத்தை அணுகி புகார் தந்திருக்கிறார் நடிகை தேவிப்ரியா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘காதல்' படத்தில் பரத் -சந்தியா திருமணத்தை நடத்தி வைக்கும் கேரக்டரில் நடித்தவர் கண்ணன். அதன் பிறகு சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் வந்தார். கடைசியாக‌ ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்தார். அதன் பிறகு சீரியல் பக்கமும் ஆளைப் பார்க்க முடியவில்லை. ‘‘அந்தத் தொடரில் நடித்தபோது கால்ஷீட் தொடர்பாக சில பிரச்னைகள் உண்டானதால் சேனல் என்னிடம் கோபித்துக் கொண்டது'’ என்றவ‌ர், தற்போது மீண்டும் சீரியல் முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

உதவி இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் தகராறு ஏற்பட்டு, பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆனார்கள் இல்லையா, அந்த உ.இயக்குநருக்குக் கைகலப்பு அனுபவம் இது முதன்முறை இல்லையாம். சில வருடங்களுக்கு முன்பு ‘ரேடியோ’ புகழ் நடிகர் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது அவருடனும் வாக்குவாதம் பண்ணி இருவரும் அடித்துக்கொண்டார்களாம். ‘‘அவருக்கு வாய் நீளம், புதுசா வர்ற நடிகர்களையெல்லாம் ‘டா’ போட்டுப் பேசுவார்’’ என்கிறார்கள்.