Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பும்ரா -  சஞ்சனா கணேசன்
பிரீமியம் ஸ்டோரி
பும்ரா - சஞ்சனா கணேசன்

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா, முதன்முதலாகப் பல் மருத்துவம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா, முதன்முதலாகப் பல் மருத்துவம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.

Published:Updated:
பும்ரா -  சஞ்சனா கணேசன்
பிரீமியம் ஸ்டோரி
பும்ரா - சஞ்சனா கணேசன்

டிவி பிரபலங்கள் சிலர் அடுத்தடுத்து மாலத்தீவில் இருக்கிற மாதிரியான புகைப்படங்களை வெளியிடப் பார்த்திருப்பீர்கள். சம்மர் வருவதால், `சுற்றுலாவுக்காக மாலத்தீவு வரச்சொல்லி அழைக்கும் விளம்பரத்தின் தொடர்ச்சிதான் இது’ என்கிறார்கள். இங்கிருந்து செல்லும் நடிகர் நடிகைகளுக்குப் போக்குவரத்து, எத்தனை நாள் தங்கியிருக்கிறார்களோ அத்தனை நாளும் உணவு, தங்குமிடம் எல்லாமே இலவசம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா, முதன்முதலாகப் பல் மருத்துவம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். பல் மருத்துவம் படிக்க வேண்டுமென்கிற ஆசை பத்தாவது படிக்கும்போதே வந்ததாம். இப்போது பி.டி.எஸ் முடித்துள்ளார். அடுத்து எம்.டி.எஸ் படிக்கப்போவதில்லையாம். தனியே க்ளினிக் தொடங்குகிற எண்ணத்தில் இருக்கிறார். அதேநேரம் இவரது பாட்டுப் பயணமும் தொடர்கிறது. ‘பாடகி ஆன நிமிடத்தைக் காட்டிலும் இந்தத் தருணம் ரொம்பவே மகிழ்ச்சியைத் தந்திருக்கு. ஏன்னா, அம்மாவுடைய ஆசை, நான் டாக்டராகணும்கிறதுதான்’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சரவணன் மீனாட்சி’ ஹீரோவாக சீரியலில் நல்ல புகழில் இருந்தபோதுதான் சினிமாவுக்குச் சென்றார் இர்ஃபான். இவரது நடிப்பில் சில படங்கள் வெளியாகின. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் இடையில் சில காலம், அப்பாவுடைய பிசினஸைப் பார்க்கச் சென்றுவிட்டார். தற்போது மீண்டும், டிவியில் வரவிருக்கிறார். முன்னணிச் சேனலிலிருந்து இவரிடம் பேசியிருக்கிறார்கள். முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘மௌன ராகம்’ சீரியல் முதல் சீசனில் குழந்தையாக நடித்தவர் கிருத்திகா. தற்போது தொடங்கியிருக்கிற சீசனில் குழந்தை வளர்ந்து பெரியவளாகக் காட்ட இருப்பதால் இவர் நடிக்கவில்லையாம். அதேநேரம் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிற ‘வேலம்மாள்’ சீரியலில் லீடு ரோல் இவர்தானாம்.

கிரிக்கெட் வீரர் பும்ரா - டிவி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் காதல் விவகாரம் கடந்த ஆண்டே அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் தெரியும் என்கிறார்கள். `2019-ல் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டியைத் தொகுத்து வழங்கச் சென்றிருந்த சமயத்தில்தான் பும்ராவுடன் இவருக்குப் பழக்கம் உண்டானது’ என்கிற சஞ்சனாவுக்கு நெருக்க மானவர்கள் சிலர், ‘திருமணமும் கடந்த ஆண்டே நடக்க வேண்டியதுதான்; கொரோனா ஊரடங்கு காரணமாகவே தள்ளிப்போனது’ என்கிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் ட்ராவல் பண்ணியவர் சஞ்சனா. இப்போது மும்பை இந்தியன்ஸ் மருமகளாகி யிருக்கிறார். `இப்ப எந்த அணிக்கு ஆதரவு’ எனக் கலாய்க்கிறார்களாம் நண்பர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

விளம்பரங்களில் நடிக்க முதலில் ஜோடியாக இருவரையும் கூப்பிட்ட விளம்பர நிறுவனங்கள், சமீபமாக நடிகையை மட்டும் அழைக்கிறார்களாம். அவருமே ‘பரவால்ல, இப்ப மகளும் வந்துட்டா, நாலு காசு சேர்க்க வேண்டாமா... அதனால, வர்ற வருமானத்தை ஏன் விடணும்?’ என சம்மத்திக்க நினைத்தால், நடிகரோ, ‘சேர்ந்து பண்ணறதா இருந்தா பண்றோம்; இல்லைன்னா கிளம்புங்க’ என, வருகிறவர்களை விரட்டுகிறாராம்.