
நொறுக்குத் தீனி உள்ளிட்ட ஜங்க் ஃபுட் மீது அலாதிப் பிரியம் கொண்டவர் லக்ஷ்மி பிரியா.

நொறுக்குத் தீனி உள்ளிட்ட ஜங்க் ஃபுட் மீது அலாதிப் பிரியம் கொண்டவர் லக்ஷ்மி பிரியா. ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்குச் செல்ல முடிவெடுத்ததுமே `தீவில் இதெல்லாம் கிடைக்காது’ என்று கொஞ்சம் வாயைக் கட்டிப் போட்டுப் பழகினாராம். இப்போது நிகழ்ச்சியை முடித்து வந்துவிட்டதால் பழையபடி இஷ்டத்துக்கு சாப்பிடத் தொடங்கிவிட்டாராம்.
‘செம்பருத்தி’ ஷபானா கரம் பிடித்திருக்கும் ஆர்யனின் நிஜப்பெயர் வேலு லக்ஷ்மணன். ஆரம்பத்தில் ஜிம் கோச்சாக இருந்தவர் பிறகு மாடலிங் வந்து அப்படியே டி.வி பக்கம் வந்தார். ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் நெகட்டிவ் ரோலில் அறிமுகமான போது தன்னுடைய பெயரை ஆர்யன் என மாற்றிக்கொண்டாராம்.

சேனல் மாறி வந்த பின் நடித்த, அதுவும் பாசிட்டிவ் ரோலில் நடித்த கயல் சீரியல் முதல் வாரத்திலேயே டி.ஆர்.பி-யில் நம்பர் ஒன் இடத்துக்கு வந்ததில் சைத்ரா இப்போ செம ஹேப்பி. கடந்த வாரம் டி.ஆர்.பி ரேட்டிங் பார்த்ததும் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு ட்ரீட் வைத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினாராம்.

சில தினங்களுக்கு முன் ஜீ தமிழ் சேனலில் தலைமைப் பொறுப்பில் மாற்றம் நிகழ்ந்தது போலவே தற்போது ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியிலும் நிகழ்ந்திருக்கிறது. அந்தச் சேனல் தொடங்கியது முதலே சேனலின் தலைமை நிர்வாகியாக இருந்த அனுப் சந்திரசேகர் சேனலிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் ரவிவர்மாவுக்கு எதிராக சிலர் கோஷ்டி சேர்ந்திருப்பதால் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருக்கும் நடப்பு நிர்வாகத்தின் கடைசிப் பொதுக்குழு காரசாரமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற தேர்தலைப் போலவே வரும் தேர்தலிலும் மும்முனைப் போட்டி இருக்குமென்கிறார்கள்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
ஸ்வீட்டால் பேர் வாங்கிய நடிகை அவர். அவரது திருமணம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என்ன பிரச்னையோ, கணவன் மனைவிக்கிடையே ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இருவரும் பிரியப் போகிறார்கள் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். ஆனால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கிறது. தற்போது இவரது வீட்டில் விசேஷமாம். ‘அம்மா ஆகப்போகிற இனிப்பான செய்தியை விரைவில் அவரே அறிவிப்பார்’ என்கிறார்கள்.