Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

நட்சத்திரா, சைத்ரா
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திரா, சைத்ரா

தொடர்ந்து தன்னைப் பற்றியும் மறைந்த தன் பெற்றோர் குறித்தும் பேசி வருகிற யூ டியூப் சேனல்களுக்கு கண்ணீருடன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் `நீங்கள் கேட்ட பாடல்' விஜய் சாரதி

விகடன் TV: ரிமோட் பட்டன்

தொடர்ந்து தன்னைப் பற்றியும் மறைந்த தன் பெற்றோர் குறித்தும் பேசி வருகிற யூ டியூப் சேனல்களுக்கு கண்ணீருடன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் `நீங்கள் கேட்ட பாடல்' விஜய் சாரதி

Published:Updated:
நட்சத்திரா, சைத்ரா
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திரா, சைத்ரா

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி' சீரியலில் ஹீரோயின் மற்றும் வில்லியாக நடித்த நட்சத்திரா, சைத்ரா இருவரும் சீரியலில் நடித்தவரை அவ்வளவு நெருக்கமான தோழிகளாக வலம் வந்தார்கள். ஷூட்டிங் இடைவேளையில் இவர்களது அரட்டை, ஜாலி கேலி கிண்டல்களைப் பார்த்து யூனிட்டே ஆச்சரியப்பட்டது. யார் கண்பட்டதோ, நட்சத்திரா கலர்ஸ் தமிழ் சேனலுக்கும் சைத்ரா சன் டி.வி-க்குப் போய் விட்ட சூழலில், இப்போது இருவரும் பேசிக் கொள்வதில்லை என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கண்மணி' சிரீயலில் நடித்த லிசா எக்லைர்ஸுக்கு தமிழ் சினிமா மீதுதான் ஆசை.இங்கு சில படங்களில் நடித்தாலும் அவ்வளவாக யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லையாம். எனவே தற்போது ரூட்டை மாற்றி, தெலுங்கு சினிமாப் பக்கம் போய்விட்டார். அங்கு ஹீரோயினாகக் கமிட் ஆகியுள்ளாராம். ‘‘பக்கத்துல இருந்தா நம்ம அருமை புரியறதில்லை; அங்க ஒரு ரவுண்ட் வந்தபிறகு என்னைக் கூப்பிடுவாங்க பாருங்க’' என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தொடர்ந்து தன்னைப் பற்றியும் மறைந்த தன் பெற்றோர் குறித்தும் பேசி வருகிற யூ டியூப் சேனல்களுக்கு கண்ணீருடன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் `நீங்கள் கேட்ட பாடல்' விஜய் சாரதி. ‘‘ரசிகர்கள் என்னைத் தேடறாங்கன்னு சொல்றதைக் கேட்கிற போது சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா ‘நான் பரிதாபமான நிலையில இருக்கேன்'னும் நடிகர் சங்கம்தான் எனக்குச் சோறு போட்டுச்சுன்னும் இஷ்டத்துக்குப் பேசறதுதான் வருத்தமா இருக்கு. இதெல்லாம் சுத்தப் பொய். அதனால இனியாச்சும் இந்த மாதிரி பேசாதீங்க ப்ளீஸ்'’ என வேண்டுகோள் விடுக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பாடி ஷேமிங் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குபவை விஜய் டி.வி-யின் ரியாலிட்டி ஷோக்கள். இந்த நிலையில், தன்னுடைய சீரியலில் ‘பாடி ஷேமா, ஷேம் ஷேம்' என்கிற ரீதியில் காட்சியை வைத்து ஸ்கோர் செய்துள்ளது சன் டி.வி. எது எப்படியோ, ‘அன்பே வா' சீரியலில் வந்த அந்தக் காட்சிக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

சில ஆண்டுகள் சிம்புவுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் மகேஸ்வரி. பிறகு ஆங்கரிங், பிசினஸ் என வேறு வேலைகளுக்குத் திரும்பிவிட்டார். இப்போது ‘மாநாடு' ஹிட் ஆகியுள்ள சூழலில், மறுபடியும் அந்த வேலையைத் தொடரலாமென நினைக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க

சில தினங்களுக்கு முன் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை அலசிய அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களே விமர்சனங்களை வைக்கின்றனர். ‘‘ஊடக ஒளி கிடைக்கிற, பிரபலமான‌ மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சில வாய்ப்புகளைப் பெற அந்த மேடையைப் பயன்படுத்திக்கிட்டாங்க. எங்களுடைய அடிப்படையான பிரச்னைகளைப் பேசலாம்னு நினைச்சுட்டுப் போனோம். ஆனா, எங்களில் பலரைப் பேசவே விடவில்லை’’ என்கின்றனர் இவர்கள்.